widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, August 13, 2011

நாவற்குடாவில் கிறீஸ் மனிதன் என சந்தேகிக்கப்படுபவர் சிக்கினார்: பொலிசார் நபரைப் பொறுப்பேற்றனர், மக்கள் எதிர்ப்பு


- அபூ றப்தான் -
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேசத்தில் கறீஸ் மனிதனெ சந்தேகிக்கப்படும் நபரொருவரை இன்று (13.08.2011) காலை 8 மணியளவில் பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
கிறீஸ் மனிதனெப்படும் குறித்த நபர் நாவற்குடாவிலுள்ள உள்ளக வீதியொன்றில் பெண்ணொருவரை தாக்க முற்பட்ட வேளையில் அப்பெண் கூக்குரலிட்டு கத்தவே இம்மனிதனை பொதுமக்கள சிலர்மடக்கிப்பிடித்துள்ளனர்.
இதையடுத்து இங்கு பதற்ற நிலை அதிகரிக்கவே அங்கு காத்தான்குடி பொலிசார் ஸ்த்தலத்திற்கு விரைந்து சந்தேக நபரை மீட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து இங்கு கூடிய பொதுமக்கள் கிறீஸ் மனிதனை விடுவிப்பதற்கு பொலிசார் கொண்டு செல்கின்றனர் என தெரிவித்தும் தம்மிடம் அம்மனிதனை ஒப்படைக்குமாறும் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
இதன் போது மட்டக்களப்ப கல்முனை பிரதான வீதியிலுள்ள நாவற்குடா வீதியில் டயர்களை போட்டு எரித்தனர்.
இதையடுத்து ஸத்தலத்திற்கு விரைந்த இரானுவத்தினர் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்பரன் வருகை தந்து மக்களை ஆறுதல் படுத்தினார்.
இங்கு பிடிக்கப்பட்ட கிறீஸ் மனிதனை பொலிசார் விசாரித்து வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.




0 comments:

Post a Comment