"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, August 12, 2011
திருமலையில் 8 கிறீஸ் பூதங்கள் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு!
திருகோணமலையில் பல பிரதேசங்களில் இருந்தும் கிறீஸ் பூதம் என்ற சந்தேகத்தின்பேரில் 8 பேர் உட்பட வேன் ஒன்றையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். திருகோணமலை மவாட்டத்தின் குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறக்கக்கண்டி, நிலாவெளி, புடவைக்கட்டு ஆகிய பகுதிகளில் இருந்தே குறித்த சந்தேகநபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இறக்கக்கண்டி பகுதியில் மது போதையுடன் வேனில் வந்தவர்கள் இருளில் வேனை நிறுத்திவிட்டு நின்றபோது அப்பிரதேசவாசிகள் அவர்களை விசாரித்தபோது பிஸ்டல், கத்தியை காட்டியதினால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் அவர்களை மடக்கி பிடித்து பொலிஸாரிம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை வேனொன்றில் நிலாவெளி, அடம்பொடவெட்டை, இக்பால்நகர் போன்ற பகுதிகளில் இரண்டு இரண்டு பேராக இறக்கிவிட்டு சென்றதை அவதானிக்க முடிந்ததாகவும் பிரதேசவாசியொருவர் தெரிவித்தார்.
நிலாவெளி, இக்பால்நகர் பகுதிகளில் வீதிகளால் சென்ற வாகனங்கள் அனைத்தும் பிரதேச இளைஞர்களால் மறித்து பரிசீலிக்கப்பட்டதுடன், பிரதேச செய்திகளை சேகரிக்கச்சென்ற செய்தியாளர் கெமராவுடன் சென்றதினால் அவர் தீவிரமாக இளைஞர்களினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் சம்பந்தமாக குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.
இதேபோன்று அம்பாறை பொத்தவில் ஊறணி பிரதேசத்தில் மர்மான முறையில் நடமாடிய இராணுவத்தை சேர்ந்த மூன்று பேரை நேற்று இரவு பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து தாக்கியுள்ளனர்.

தாக்கியபோது அவர்களை பொத்துவில் பொலிசார் மீட்டெடுத்துச் சென்றுள்ளதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர்.
அதேவேளை ஒரு சில பிரதேசங்களில் இவ்வாறு மக்களால் பிடிக்கப்பட்ட மர்மமனிதர்களில் மனநிலைகுன்றியவர்களும், பிரதேசத்திற்கு புதியவர்களும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source:www.tamilcnn.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment