widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, August 11, 2011

பொலிஸ் – சிவில் அமைப்புகள் – அரச அதிகாரிகள் கூட்டத்தை தொடர்ந்து ஓட்டமாவடி இயல்பு நிலைக்குத் திரும்புகிறது


ஓட்டமாவடியில் நேற்று (10.08.2011) இடம்பெற்ற சம்பவத்தின் போது பொதுமக்களை துப்பாக்கியினால் சுட்டு காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாரை இடமாற்றுவதென இன்று (11.08.2011) காலை ஓட்டமாவடியில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி. அன்சார் தெரிவித்தார்.
ஓட்டமாவடியில் நேற்று ஏற்பட்ட மர்ம மனிதன் விவகாரம் தொடர்பிலான அசாதரன சூழ்நிலையை சுமுகமான நிலைக்கு கொண்டுவருவது தொடர்பிலான கூட்டம் இன்று காலை ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எசி. அன்சாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபர் விஜேகுணவர்த்தன, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட இரானுவ பிரிகேடியர், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் இராணுவ பொலிஸ் உயரதிகாரிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், ஓட்டமாவடி பிரதேச சபை தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், ஓட்டமாவடி பிரதேச செயலாளர், மற்றும் அனைத்து பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள், கல்குடா ஜம் இய்யத்துல் உலமா பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது நேற்று ஓட்டாவடி பிரதேசத்தில் ஏற்பட்ட சூழ் நிலை தொடர்பாக விரிவாக  ஆராயப்பட்டதுடன். தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
நேற்றை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாரை இடமாற்றுவது. மற்றும் எதிர்காலத்தில் வதந்திகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாதவாறு பொலிசாரும் பொது மக்களும் இணைந்து விழிப்பூட்டல் நடவடிக்கையினை மேற்கொள்வது, அச்சத்தினால் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள பெண்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புவதுடன் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிவில் பாதுகாப்புக்குழு மற்றும் பொலிசார் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளவது, பிரதேசதச்திலள்ள பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் பொருட்டு அடிக்கடி சந்திப்புக்களை நடாத்தி நட்புறவு வேலைத்திட்டதினை மேற்கொள்வதுடன் பொலிசார் தொடர்பாக பொதுமக்களிடமுள்ள சந்தேகத்தை நீக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தையடுத்து ஓட்டமாவடி பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த  வியாபார ஸ்தாபனங்கள் திறக்கப்பட்டு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.
நேற்று பிற்பகல் தொடக்கம் ஸ்த்தம்பிதம் அடைந்திருந்த ஓட்டமாவடி இன்று பிற்பகலுடன் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி. அன்சார் மேலும் தெரிவித்தார்.
நேற்று இப்பிரதேசத்தில் மர்ம மனிதன் விவகாரத்தினால் ஏற்பட்ட பொலிஸ் பொதுமக்கள் கலவரத்தில் ஆறு பேர் காயமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
kattankudi.info

0 comments:

Post a Comment