widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, August 5, 2011

இலங்கை வானொலி முஸ்லீம் சேவையும், ஏகத்துவ எதிர்ப்புப் பிரச்சாரமும்.


இன்று உலகில் எத்தனையோ நாடுகளில் முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த அத்தனை நாடுகளிலும் பெரும்பான்மையான நாடுகளில் முஸ்லீம்கள் தங்களின் உரிமைகள் பரிக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள்.
ஆனாலும் இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கும் அப்படிப்பட்ட நிலைகள் ஏற்பட்டாலும் பல சந்தர்பங்களில் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் யாரும் மறுக்க முடியாது.

இப்படிப் பட்ட உரிமைகளில் மிக முக்கியமானது தங்கள் மதத்தை பின்பற்றும் உரிமையாகும்.

இலங்கை வாழ் முஸ்லீம்கள் தாங்கள் இஸ்லாமியர்கள் என்று கூறி தங்கள் மார்க்கம் காட்டித்தந்த அடிப்படையில் அதன் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையும் இந்நாட்டில் இல்லை என்பதை நன்கறிவர்.

அந்த உரிமைகளுக்கு கண்ணியம் வழங்கும் விதமாக இலங்கை அரசால் இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு கொடுக்கப் பட்ட ஒரு முக்கியமான கவுரவமான அன்பளிப்புதான் இலங்கை வானொலி முஸ்லீம் சேவையாகும்.

இந்த சேவையில் கடமை புரியும் பெரும்பான்மையானவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மூட நம்பிக்கைக்கு துணை நிற்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஏன் எனில் வானொலி என்பது மிகப் பெரியதொரு ஆயுதம் அந்த ஆயுதத்தின் மூலம் பெரும் புரட்சியையே உண்டு பண்ண முடியும் என்பது யாம் அனைவரும் அறிந்த ஒன்றே!

ஆனால் இந்த முஸ்லீம் சேவை என்ற நம்முடைய அபார சக்தியின் பயன்பாட்டை நம்மில் பலர் தவறாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய நவீன சவால்களுக்கு மிகத் தொளிவாக பதில் கொடுக்கும் ஒரு மார்க்கம் என்றால் அது இஸ்லாம் மாத்திரம் தான் அந்த இஸ்லாம் மார்கம் எதனை மக்களுக்கு சொல்கிறதோ அதனை நாம் அழகாக எடுத்துச் சொல்வதற்குறிய ஒரு மிகப் பெரிய கலமாக இந்த இலங்கை வானொலி முஸ்லீம் சேவை இருக்கிறது.

ஆனால் கவலைக்குறிய விஷயம் என்னவெனில் அந்த அழகிய கலத்தில் சிலரின் ஆதிக்கம் உண்மை இஸ்லாத்தை சொல்வதற்கு நமக்கு மிகவும் தடையாக இருக்கிறது.

ஏன் எனில் இன்றைய இலங்கை வானொலி முஸ்லீம் சேவையின் பணிப்பாளரில் ஆரம்பித்து அதில் முக்கிய பொருப்புகளில் இருக்கக் கூடியவர்களின் மார்க்க அறிவை நாம் அலசிப் பார்த்தால் அதில் அவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.

அத்துடன் அவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாமிய அகீதாவை (அடிப்படைக் கொள்கையை)எப்படி புரிந்திருக்கிறார்கள் என்று நாம் பார்த்தால் அதிலும் அவர்களின் நிலை படு மோசமானதாக உள்ளது.

இஸ்லாத்தில் இல்லாத,இஸ்லாம் காட்டித் தராத நூதனமான (பித்அத்)செயல்பாடுகளை மிகத் தெளிவாக ஆதரிக்கிறார்கள்.

அல்லாஹ்வை பயந்து,அவனை வணங்க வேண்டியவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி மிகத் தெளிவாக அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்கள்.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பரப்புவதற்கு பயண்பட வேண்டிய முஸ்லீம் சேவை இன்றைக்கு கப்ரு வணக்கத்தையும்.கத்தம்.கந்தூரி போன்ற மார்கத்தில் இல்லாத காரியங்களை இஸ்லாம் என்ற போர்வையில் மக்களிடம் கொண்டு செல்வதற்கு பயண்பட்டுக் கொண்டிருப்பது இஸ்லாமிய சமுதாயத்திற்கு இழைக்கப் படும் மிகப் பெரிய மோசடியாகும்.

தடை செய்யப்படும் ஏகத்துவப் பிரச்சாரங்கள்.

இலங்கை முஸ்லீம்களுக்காக ஜனநாயக உரிமைப் பிரகாரம் வழங்கப்பட்ட ஒரு ஊடக சேவையில் காலா காலமாக இலங்கை ஏகத்துவ வாதிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மீறி இடம் வழங்கப்பட்டாலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டே இடம் கிடைக்கிறது.

அரசியல் தலையீடுகள், சூபித்துவ வெறியாட்டங்கள் என்று அனைத்துத் தரப்பாலும் இலங்கை வானொலி முஸ்லீம் சேவை அரசியல் கையாடல் சேவையாக மாறிவிட்டது.

கொள்கையை உடைத்து சரியானதை சொல்பவர்களுக்கு அங்கு இடமில்லை.

ரமழான் மாதமும், முஸ்லீம் சேவையும்.

புனிதமிக்க ரமழான் மாதம் வந்துவிட்டது இம் மாதத்தில் பல விதமான பித்அத்தான கருத்துக்களும் இந்த சேவையின் மூலமாகத் தான் பரப்பப்படும்.

காலையில் தொடங்கி மாலை வரை முழுக்க முழுக்க பித்அத் கருத்துக்களுக்கு வக்காலத்து வாங்க பயன்படும் இந்தத் தளத்த்தில் சொந்த செலவில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்ய நினைக்கும் தவ்ஹீத் வாதிகளுக்குக் கூட இடம் கொடுப்பதில்லை.

காரணம் அவர்களின் இயலாமை.

ஆம் இடம் கொடுத்தால் அவர்களின் மூடக் கொள்கைகள் உடைத்து நொருக்கப்பட்டு, வருவாய் தடைப்படும் என்பது பித்அத் வாதிகளுக்கு நன்றாகத் தெரிந்த உண்மை.

ரமழான் அவர்களின் பிசினஸ்” மாதம்.

யார் தடுத்தாலும் ஏகத்துவம் அழிந்துவிடப் போவதில்லை.

இன்று நாடு முழுவதும் ஏகத்துவத்தின் கருத்துக்கள் துளிர் விட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. என்றைக்கோ ஒரு நாள் இந்த முஸ்லீம் சேவையும் ஏகத்துவக் குடையின் கீழ் வரத்தான் போகிறது. பித்அத்கள் அடித்து நொருக்கப்பட்டு, மக்கள் பணத்தை சுரண்டித் தின்னும் ஆலிம்களின் முக மூடி கிழிக்கப்படத் தான் போகிறது. இன்ஷா அல்லாஹ்.

அன்பின் இஸ்லாமிய அன்பர்களே!

நமது சமுதாயத்தின் மிகப் பெரும் சொத்தான இந்த முஸ்லீம் சேவை என்ற மீடியாவை நாம் மிகச் சிறப்பாக பயன்படுத்துவதற்கு பாடு பட வேண்டும்.

அது போல் இதனை குர் ஆன் ஹதீஸ் மாத்திரம் தான் மார்கத்தின் ஆதாரம் என்று ஏற்றிருக்கும் சகோதரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இல்லையெனில் மீண்டும் மீண்டும் பித்அத்துக்களை ஆதரித்து மார்கத்திற்கு முரனான தகவல்களை தருகின்றவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்கு இது அவர்களுக்கு ஒரு சந்தர்பமாக ஆகிவிடும் என்பதை நாம் நன்றாக மனதில் நிலை நிருத்திக் கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment