"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Sunday, August 14, 2011
கல்முனையில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து சிறுவன் மீது தாக்குதல் நடத்திய கிறிஸ் பூதம் (2ஆம் இணைப்பு)
அம்பாறையில் கல்முனை - இஸ்லாமபாத் குடியிருப்பில் மர்ம மனிதன் ஒருவரால் 17 வயதுச் சிறுவன் ஒருவர் இன்று மதியம் தாக்கப்பட்டு உள்ளார். வீட்டில் காயப்பட்டு கிடந்த சிறுவனை அயலவர்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்து உள்ளார்கள். உறுப்பு உடுப்பு அணிந்து இருந்த நபர் ஒருவர் கையில் கத்தியால் கீறி காயப்படுத்தினார் என்று சிறுவன் தெரிவித்து உள்ளார்.
இத்தாக்குதல் சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு உள்ளது.
இதேவேளை நிந்தவூர் பிரதேசத்தில் இன்று மதியம் கிறிஸ் மனிதன் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொதுமக்களால் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார்.
இவர் நிந்தவூர் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்ததினை அவதானித்த பொதுமக்கள் இவரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.
இதன் போது குறித்த நபர் தான் ஒரு கடல்படை வீரர் என பொது மக்களிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதனை அடுத்து மேலும் சந்தேகமடைந்த பொதுமக்கள் இவரையும் இவரது சாக்குப் பைகளையும் சோதனை செய்ததில், அவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றும் கத்தியும் கிறிசும் கைப்பற்றப்பட்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை அறிந்து கொண்ட கல்முனை மாநகர சபையின் முன்னால் முதல்வரும் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் பலம்பொருந்திய முக்கியஸ்தருமான ஹரிஸ் எம்பி, ஸ்தலத்திற்கு விரைந்து வந்தார்.
வந்தவர் பொதுமக்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், குறித்த சந்தேக நபரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதன்போது, அவர் குறித்த சந்தேக நபருக்கு வக்காளத்து வாங்கும் வகையில், குறித்த கிறிஸ் மனிதன் காரச்சில் வேலை செய்யும் தனது அக்கா மகனுடைய சம்பளப் பணம் வாங்க வந்ததாகத் தெரிவித்தார்.
மக்கள் விசாரிக்கும் போது சந்தேக நபர் இது குறித்து தெரிவிக்கவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை அடுத்து கல்முனை பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து கல்முனை மாநகரம் முழுவதும் எதிர்ப்பினை தெரிவித்து மக்கள் பொலிஸ் நிலையம் முன்பாக குவிந்தனர்.
இவர்களைக் கலைப்பதற்காக மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு, பொது மக்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் போது குறித்த பொது மக்களை இராணுவத்தினர் ஊர்களுக்குள்ளும் விரட்டிச் சென்றதாகத் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்முனைப் பிரதேசத்தில் இதனால் பதற்ற சூழ் நிலை காணப்படுகிறது.
அரசாங்கத்துடன் சேர்ந்துள்ள சிறுபான்மையினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் இவ்வாறன அசாம்பவிதத்திற்கு துணை போவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment