"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Tuesday, April 10, 2012
திருடர்களில் மிகவும் மோசமான திருடன்’
திருடர்கள் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான் என்று நபித்தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவுவையும், ஸுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: அஹ்மத், ஹாகிம், தப்ரானி.
தொழுகையில் கோழி கொத்துவதைப் போல் (அவசரமாகக்) குனிந்து நிமிர்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment