"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Tuesday, April 10, 2012
தப்(பு)லீக்க கண்டா தூர விலகு :
யாராலும் அதிகம் விமர்சிக்க படாத ஒரு ஜமாஅத் என்றால் அது தப்லிக் ஜமாஅத் தான் காராணம் எந்த தவறையும் கண்டிக்காமல் ஒதுங்கி கொள்ளும் கூட்டத்தை யார் தான் விமர்சிக்க போகிறார்கள்.அப்படி விட்டது தான் தவறு வீரியமாக செயல் பட வேண்டிய இளைஞர் கூட்டத்தை சோற்றை கொடுத்து மலுங்கனி ஆக்கி வைத்திருக்கிறது இந்த கூட்டம் அவர்களது கொள்கையின் விபரீதத்தை எடுத்து சொல்வதற்கே இந்த பதிப்பு தகவல்கள் "இஸ்லாம் இனிய சுவன பாதை" தளத்திலிருந்து பெறபட்டது
தப்லிக் ஜமாஅத்தை ஏன் வழிகேடு என்கிறோம்
இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஒழுங்காக பேணி நடந்தால் எந்த ஒரு அமைப்பையும் நாம் தரக்குறைவாக பேசக்கூடாது ஆனால் இந்த தப்லீக் அமைப்பு அந்த சட்டதிட்டங்களை மீறி நடப்பதால்தான் அதை நாம் வழிகேடு என்று விமர்சிக்கிறோம். அதற்கான ஆதாரங்கள் இதோ!
இஸ்லாத்திற்கு என்று 5 மிக முக்கிய கோட்பாடுகள் உள்ளது ஆனால் இந்த தப்லீக் அமைப்பின் நிறுவனர் முஹமது இலியாஸ் என்பவர் இந்த 5 கோட்பாடுகளை துச்சமாக மதித்து தான்தோன்றித்தனமாக 6 கட்டளைகளை (கோட்பாடுகளை) வகுத்தார். அந்த கோட்பாடுகளின் மூலமே இஸ்லாத்தை பரப்ப முடியும் என்று கூக்குரளிட்டார்! சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஒரு சட்டத்தை வகுத்துத்தந்தான் ஆனால் அந்த சட்டத்தை மாற்றியமைக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா? அப்படி மாற்றுவதாக இருந்தால் இவர்கள் அல்லாஹ்விடம் அனுமதியை பெற்றார்களா? வஹி வந்ததா? இப்படி இந்த இலியாஸ் மாற்றியிருக்கிறார் என்றால் இவர் தன்னை நபி என்று கருதுகிறாரா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் புதியதாக எந்த நபியாவது வருவாரா? இது வழிகேடு அல்லவா? சிந்திக்கமாட்டீர்களா?
இந்த ஜமாஅத்தின் கோட்பாடுகளாவன
1. முதல் கலிமா
அல்லாஹ்வைத் தவிர நாயன் வேறு யாருமில்லை நபிகளார் அவரின் தூதர்
2. ஐவேளை தொழுகை
உலகாதாயமான பொருளை ஈட்டுவதை 5 வேளை தொழுகைகள் தான் சிறந்தது அதற்காக பொருளீட்டுவதை தவிர்க்கலாம்!
3. இலம் மற்றும் ஜிக்ரு
அல்லாஹ்வை நினைவு கூறுவது, திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் படிப்பது, தொழுகையை நிலைநாட்டுவது, அமீருக்கு கட்டுப்படுவது
4. இக்ரமே முஸ்லிம் –
தங்களுடன் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் அவர்களுக்கு உதவிகள் செய்வத
5. இக்லாஸ்-ஏ- நிய்யத் –
மனதை ஒருநிலைப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ள நிய்யத் செய்வது!
6. தாபிர்-ஏ- வக்த்
குடும்பம் தவித்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அமீருக்கு கட்டுப்பட்டு நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் பிரச்சாரத்திற்காக கூட்டமாக கிளம்புதல், அதுசமயம் திக்ருகளையும், அவ்ராதுகளையும் ஓதுதல், மக்களுக்கு தெருக்களில் பயான் செய்தல் மற்றும் தங்களின் பிரச்சாரத்தை நெடுநேரத்திற்கு முடக்கிவிட்டு அதன் மூலம் தங்களிடம் அகப்பட்ட மனிதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தல்
புதிய தத்துவம் எண் 7
மேற்கண்ட இந்த 6 தத்துவம் கோட்பாடுகளை வகுத்த இந்த இலியாஸ் என்ற வலிகேடன் இறுதியாக மற்றுமொரு புதிய தத்துவ கோட்பாட்டை வகுத்தான் அதாவது “வீணான காரியங்களில் நேரத்தை கழிப்பதை தடுக்கப்படவேண்டும்” என்பதே அந்த 7வது கோட்பாடாகும்.
சகோதரர்களே! தாங்கள் மேலே கண்ட இந்த பித்அத் புதுமையான தத்துவ கோட்பாடுகளையும் இறுதியான தத்துவம் எண் 7-ஐயும் அல்லாஹ் அனுமதிப்பானா? அல்லது அவனது அனைத்து நபிமார்களும் இந்த கோட்பாடுகள் சரிதான் என்று மறுமையில் சாட்சி கூறுவார்களா? சிந்தியுங்கள் செயல்படுங்கள்!
அல்குர்ஆனுக்கு போட்டியாக ஒரு புதிய வேதம்!
தப்லீக் ஜமாத்தின் தலைவர் இலியாஸ் மக்களை வழிகெடுக்க முஹம்மது ஜக்கரிய்யா என்ற மௌலானாவை நாடினார் இவர் இந்த இலியாஸின் உறவினராவார்
இந்த ஜக்கரிய்யா என்ற மௌலானா ஒரு புத்தகத்தை உருவாக்கினான் அந்த புத்தகத்திற்கு FAZAIL-E-AMAL (அமல்களின் சிறப்பு) என்று பெயர் சூட்டினான். இந்த நூல் இந்த தப்லிக் கூட்டத்திற்கு புனித நூலாகும்!
அமல்களின் சிறப்பு என்ற இந்த நூலில் முஸ்லிம்களை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் பொய்யான கதைகளும், குடிபோதையில் உளரும் குடிகாரனும், பித்து பிடிததவன் உளரும் கதைகளையும் அத்துடன் முகவரியற்ற கப்ஸாக்களைம் ஏராளமாக அள்ளி விதைத்து உள்ளார்கள். தினமும் குர்ஆனை படிப்பதைவிட அமல்களின் சிறப்பு என்றும் இந்த வழிகேடு கிதாபை படிக்க வேண்டும் என்ற கட்டளை வேறு உள்ளது!
தப்லிக் என்ற வழிகேட்டின் முக்கிய நடைமுறை குறிக்கோள்
தாபிர்-ஏ-வக்த் என்ற 6வது கோட்பாட்டை மையமாக வைத்து அதாவது உலகத்தில் பொருளீட்டுவதற்காக செலவிடப்படும் நேரத்தை குறைத்து அமல்களின் சிறப்பு என்ற வழிகேட்டு புத்தகத்தில் வகுக்கப்பட்ட தப்லீக் சட்டங்களை பரப்புவதில் அதிக மதிகம் கவனம் செலுத்துவது.
தினமும் 2 முறை அதாவது ஒருமுறை மசூதியிலும் மற்றொரு முறை தங்கள் வீடுகளிலும் FAZAEL-E-AMAAL (அமல்களின் சிறப்பு) என்ற புத்தகத்தை படிப்பது
வாரம் இருமுறை மக்களை சந்திப்பது. ஒரு குழு மசூதிகளின் பக்கமும் மற்றொரு குழு பொதுமக்களின் பக்கமும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது!
ஒரு மாதத்தில் 3 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
ஒரு வருடத்தில் 40 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
வாழ்நாளில் 4 மாதங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.
தினந்தோறும் தப்லிக்-ஐ வீரியப்படுத்துவதற்காக குறைந்தது 2 மணிநேரம் ஆலோசணைக்காக கூட்டம் கூடுவது!
வருடத்தில் ஒருமுறை சொந்த நாட்டின் தப்லிக் தலைமையகத்தில் கூடுவது!
சிந்திக்க சில தேன் துளிகள்
இந்த தப்லீக் தலைவர்கள் ஒன்று கூடி இஸ்லாமிய சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரள் எழுப்பி போராட்டங்கள், பேரணிகள் நடத்தியது உண்டா?
இந்த தப்லீக் ஜமாஅத்தினர் கத்தம் ஃபாத்திஹா ஓதுவதை தடுத்தது உண்டா?
இந்த தப்லீக் சகோதரர்கள் தர்காஹ்வை எதிர்த்து மேடையில் பேசியது உண்டா?
இந்த தப்லீக் சகோதரர்கள் தொழுகைக்கு அழைக்கிறார்களே அது போன்று மவ்லூது, மீலாது விழாக்களை தடுத்தது உண்டா?
இந்த தப்லீக் சகோதரர்கள் ஸலவாத்துன் நாரியாவை எதிர்த்தது உண்டா?
இந்த தப்லீக் சகோதரர்கள் இந்துக்கள், கிருஸ்தவர்கள், நாத்திகர்களுக்கு உபதேசம் செய்கிறார்களா? அல்லது மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துவது உண்டா?
நீங்கள் தீமையை தடுக்காவிட்டால் என்ன நடக்கும்
அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதீ)
அழகிய அழைப்பு
தப்லீக் ஜமாஅத்தை விரும்பக்கூடிய சகோதர சகோதரிகளே இனிமேலாவது தப்லீக் ஜமாஅத், தப்லீக் அமீர், தப்லீக் லீடர் ஆகியோரை அணுகாதீர்கள் துஷ்டனை கண்டால் விலகுவது போன்று இவர்களி்டமிருந்து சற்று விலகி நின்று உங்களையும், உங்கள் குழந்தைகளையும், இளம் வாலிபர்களையும் மீட்டெடுங்கள்.
குர்ஆனுக்கு எதிராக அமல்களின் சிறப்பு என்ற வழிகேடு நிறைந்த புத்தகத்தை இந்த மடையர்கள் தொகுத்து உள்ளதால் அது உங்களிடமிருந்தல் உடனே நெருப்பில் பொசுக்குங்கள்!
இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் வழிகெட்ட கூட்டம் என்பதை உணருங்கள்! இவர்கள் ஃபித்னா என்னும் புரளியை பெரியார்கள், ஷைகுகள், மறுமைநாள், கப்ருவேதனை ஆகியவற்றின் பெயரால் கிளப்புகிறார்கள்!
குர்ஆனை படித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை பின்பற்றி வாழக்கூடியவர் தொழுகையை மட்டும் ஏவமாட்டார் கூடவே பித்அத்கள் என்ற மார்க்கத்தின் பெயரால் புதியதாக புகுத்தப்பட்ட அநாச்சாரங்களை தடுப்பார்கள்! இதோ குர்ஆன் கூறுகிறது சற்று கவனமாக படியுங்கள்!
“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (குர்ஆன் 31:17)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment