widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, April 8, 2012

பெண் வேலைக்கு செல்தல்-சட்டத்தீர்ப்பும் வரையறைகளும்


-ஹத்யுல் இஸ்லாம் பத்வா குழு-
கேள்வி- ஒரு பெண் வேலைக்குச் செல்வது ஹலாலா? அல்லது ஹராமா? அவ்வாறு வேலைக்குச் செல்வது ஹராமில்லையாயின் அவளுக்கு பொருத்தமான வேலை யாது?
பெண் வீட்டில் இருப்பதே அடிப்படையான விடயமாகும். தேவையேற்பட்டால் வெளியே சென்று வரமுடியும்.
“(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் ஜாஹிலிய்யா காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்” (33:33)
இந்த அழைப்பு நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களை பார்த்து விடுக்கப்பட்டாலும், இது முஃமினான பெண்களுக்கும் பொருந்தும். நபி (ஸல்) அவர்களின் மனைவிமாரை விளித்து பேசியதன் காரணம் அவர்களின் கண்ணியத்தை சுட்டிக்காட்டவே ஆகும். அவர்கள்தான் முஃமினான பெண்களுக்கான முன்மாதிரியாகும்.
ஒரு முஸ்லிம் பெண் தனது தேவைக்காக அல்லது தனது பிள்ளைகளுக்காக அல்லது வயோதிபத்தை அடைந்த பெற்றோருக்காக என்பன போன்ற காரணங்களுக்காக ஒரு தொழிலுக்கு செல்ல முடியும். அதே போன்றே அவளின் சேவை இந்த சமூகத்திற்கு தேவையாக இருக்கும் சந்தர்ப்பத்திலும் தொழிலுக்கு செல்லலாம். உதாரணமாக: பெண்களுக்கு வைத்தியம் பார்த்தல், தாதியாக கடமையாற்றுதல், பெண்பிள்ளைகளுக்கு கற்பித்தல்.
இதற்கான சில வரையறைகள் வருமாறு:
01. அவளின் தொழில் ஹராமானதாகவோ அல்லது ஹராத்துக்கு இட்டுச்செல்வதாகவோ இருக்கக்கூடாது. உதாரணமாக: ஹராமான ஆண் பெண் கலப்பு, ஹராமான ஆண் பெண் தனித்திருத்தல், ஒரு மஹ்ரமியின்றி பயணம் செய்தல், திருமணமாகாத ஆணுக்கு பணிப்பெண்ணாக வேலை செய்தல், ஒரு பணிப்பாளரின் தனிப்பட்ட செயலாளராக இருத்தல், மதுபான சாலையில் பணிப்பெண்ணாக இருத்தல், விமானப்பணிப்பெண்ணாக இருத்தல் (இந்நிலையில் மதுபானங்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும், ஒரு மஹ்ரமியின் துணையின்றி தனியாக பயணிக்க வேண்டிவரும்.)
02. பெண்ணின் இயல்புக்கு ஏற்றதாக தொழில் இருக்க வேண்டும். உதாரணமாக: மருத்துவம், தாதிச்சேவை, ஆசிரிய சேவை போன்றவை.
03. ஷரீஆ விதித்த ஹிஜாபை அணிவதோடு, நடையிலும் நடத்தையும் பேச்சிலும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பேணுதல்.
“இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றும், தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் என்றும், தங்கள் அலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது என்றும்” (24 : 31)
“(அந்நியருடன்) குழைந்து குழைந்து பேசாதீர்கள். ஏனெனில், எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்த கைய)வன் ஆசை கொள்வான்” (33:32)
04. அவளின் தொழில் அவளது கணவனுக்கு, பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை விட்டும் தூரமாக்கி விடக்கூடாது.
எனவே, கேள்வி கேட்ட இஸ்லாமிய சகோதரிக்கு பின்வருமாறு உபதேசிக்கிறோம்:
பெண் வேலைக்கு செல்வது ஆகுமானதாகும். ஆனால், அங்கு ஷரீஆ வரையறைகள் பேணப்பட வேண்டும். வைத்தியம், தாதிச்சேவை, பெண்பிள்ளைகளுக்கு கற்பித்தல் போன்ற பெண்களுடனே தொடர்பான தொழில்கள் விரும்பத்தக்கதாகும்.
நன்றி-மீள்பார்வை

0 comments:

Post a Comment