"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Saturday, April 7, 2012
எனதருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே...!!
எனதருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே...!!
இந்த படத்தை பாருங்கள்....
இவர்கள் சோமாலியாவில் உள்ள இஸ்லாமியர்கள்...
இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.....
காலில் செருப்பு இல்லை...
குடிக்க தண்ணீர் இல்லை....
உண்ண நல்ல உணவு இல்லை....
உடுத்த நல்ல உடைகள் இல்லை...
குடியிருக்க நல்ல இருப்பிடம் இல்லை...
தொழுவதற்கு பள்ளிவாசல்கள் இல்லை...
இப்படி நிறைய "இல்லை"கள்.....
ஒரு வேலை உணவிற்கே திண்டாட வேண்டிய சூழ்நிலை....
இருந்தாலும் பாருங்கள்....
அவர்களிடம் ஈமானுக்கு குறைவே இல்லை...
பள்ளிவாசல் இல்லாததினால்
திறந்த வெளியில் தொழு வேண்டிய சூழ்நிலை.
மண்ணின் சூட்டை தாங்க முடியாததால், காலுக்கு கீழே
மரக்கட்டைகளை போட்டு தொழு வேண்டியுள்ளது....
ஆனால்... அவர்களை ஒப்பிட்டு பார்க்கையில்..
நமக்கோ......
இறைவன் எந்த குறையும் வைக்கவில்லை..
பலருக்கு
அழகான வீடு...
உடுத்த நல்ல உடைகள்...
உண்ண ருசியான உணவு....
ஒரு சிலருக்கு....
கார், பங்களா, தோப்பு, வீடு, மனை....
குறைந்த பட்சம்
தொழுவதற்கு அழகிய பள்ளிவாசல்கள்....
இப்படி சகல சௌகரியங்களும் உள்ளன...
ஆனால்.. ஈமான் இருக்கின்றதா...???
என்றால்....
கேள்விக்குறி தான்....!!!!
உலகில் ஏழைகளையும், அனாதைகளையும்,
ஊனமுற்றோர்களையும் இறைவன் படைத்திருப்பது..
நமக்கு எடுத்து காட்டத்தான்.... நம்மை சோதிக்கத்தான்..
நமது ஈமானை பரிசோதிக்கத்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment