"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Thursday, April 12, 2012
உண்மையை நோக்கி ஒரு பயணம்...
குறிப்பு:
மன்னிக்கவும். இந்த பதிவை நிறைய நாட்களுக்கு பிறகு பப்லிஷ் செய்யும் அவசரத்தில் சில தகவல்களை சொல்ல இயலாமல் போய் விட்டது. இந்த தொடரை இஸ்லாமிய அழைப்புப் பணியை செய்யும் ஒரு குழுவிற்காகவே செய்கிறேன். இந்த தொடரும், ஆங்கில மூலத்தில் இருந்து தமிழில் மாற்றம் செய்யப்படும் ஒரு தொடரே. இந்த குழுவானது, குறிப்பாக அழைப்புப் பணியை செய்பவர்களுக்காகவும், மற்றும் அனைத்து முஸ்லிம் / முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காகவும் ஒரு வலைதளத்தை அமைத்துள்ளது. அதில் எண்ணற்ற கேள்வி பதில்களும், இறைவனை / இஸ்லாத்தை பற்றிய தகவல்களை மிக அழகாகவும் ஃப்ளாஷ் வீடியோ வடிவில் தருகின்றது. மேலும் விவரங்களுக்கு இந்த லின்க்கில் பார்க்கவும். --- www.dawah.invit etogod.com
மன்னிக்கவும். இந்த பதிவை நிறைய நாட்களுக்கு பிறகு பப்லிஷ் செய்யும் அவசரத்தில் சில தகவல்களை சொல்ல இயலாமல் போய் விட்டது. இந்த தொடரை இஸ்லாமிய அழைப்புப் பணியை செய்யும் ஒரு குழுவிற்காகவே செய்கிறேன். இந்த தொடரும், ஆங்கில மூலத்தில் இருந்து தமிழில் மாற்றம் செய்யப்படும் ஒரு தொடரே. இந்த குழுவானது, குறிப்பாக அழைப்புப் பணியை செய்பவர்களுக்காகவும், மற்றும் அனைத்து முஸ்லிம் / முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காகவும் ஒரு வலைதளத்தை அமைத்துள்ளது. அதில் எண்ணற்ற கேள்வி பதில்களும், இறைவனை / இஸ்லாத்தை பற்றிய தகவல்களை மிக அழகாகவும் ஃப்ளாஷ் வீடியோ வடிவில் தருகின்றது. மேலும் விவரங்களுக்கு இந்த லின்க்கில் பார்க்கவும். --- www.dawah.invit
"யாருப்பா இன்னும் டிக்கட் வாங்கலை? வாங்காதவங்க எல்லாம் சீக்கிரம்வாங்குங்க பார்க்கலாம். பாட்டிம்மா... கூடைய அப்படி கொஞ்சம் தள்ளிவைங்களேன்..."
"ஒரு ஜி.பி குடுங்க..."
"கணபதி ரெண்டு"
"அங்கிள் சி.எம்.ஸ் ஸ்கூல் ரெண்டு"
"இந்தா புடிங்க எல்லாம்... இன்னும் யாரு வாங்கல..டிக்கட் டிக்கட்..."
"எனக்கு ஒரு டிக்கட்"
"எங்கே சார் போகணும்?"
"தெ...தெ...தெரியாது"
"என்னது??, எங்கே போகணும்ன்னாவது தெரியாதா? போக வேண்டிய அட்ரஸ்எதுனாச்சும் வெச்சிருக்கீங்களா??"
"இ...இ...இல்லை. எங்கே போகணும்...?"
"நாசமா போச்சு... ஏன் சார், எங்கே போகணும்னு என்னை கேட்டா? எங்கேபோகணும்னு தெரியாம பஸ்ல ஏறிட்டு ஏன் சார் எங்க உயிரை வாங்கறீங்க???
- - -
- - -
- - -
பஸ்ஸில் உள்ள அத்தனை தலையும் ஒரே தலையை பார்த்தபடி. ஒரு தலைக்குபல கதைகளை யோசித்தபடி....
என்ன?
இப்படி ஒரு பயணத்தை நீங்கள் முன்ன பின்ன பார்த்திருக்கீங்களா??
போகுமிடம் தெரியாத அந்த நபரின் இடத்தில் நீங்க இருந்திருக்கீங்களா??
அதெப்படி, போகற இடம் எதுன்னு தெரியாம போகும்னு கேக்கறீங்களா??
இல்லை...அந்த நபர் எந்த நோயால் தாக்குண்டு இருப்பார்னு நினைக்கறீங்களா?எந்த நோயுமே இல்லாவிட்டால்..............??
ஒரு சிறிய பஸ் பயணத்தில் கூட நாம் போகுமிடம் தெரிந்து கொள்ள வேண்டியஅவசியம் உள்ளது. எதற்காக இந்தப் பயணம், எங்கே போகிறோம், எப்படி,எவருடன், எதைக்கொண்டு போகிறோம் என்பதை திட்டமிடுதல் அவசியமாகிறது.ஆனால் அதை விட பன்மடங்கு பெரிதான வாழ்க்கைப்பயணத்தை இப்படிதிட்டமிடுகிறோமா?? எதற்காக இந்த வாழ்க்கை, எங்கே போகிறது இந்தப் பயணம்,எந்த இலக்கை நோக்கி? அதற்கான திட்டங்கள் எங்கே?? இதற்கெல்லாம் உங்களின்பதில் "இல்லை / தெரியாது /யோசிக்கவில்லை" என்றால் பஸ் பயணத்தில் நாம்சந்தித்த அதே நபர் போல்தான் உங்களின் நிலையும்.... இல்லையா??
நீங்கள் மட்டுமல்ல. இந்த உலகில் எதற்காக பிறந்தீர்கள், உங்கள் வாழ்க்கையின்தேவை என்ன, உங்களை படைத்தது யார்? எதற்காக? உங்களின் மரணத்திற்கு பின்என்ன நடக்கப்போகிறது?"-- என்ற இவ்வாறான கேள்விகளுக்கெல்லாம்பதிலில்லாத அனைவருமே அந்த நபரைப் போல்தான். பின் அவருக்கும் நமக்கும்என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?? உண்மைக்கு திரையிட்டு இன்னும் எவ்வளவு நாட்கள்தான் நாம் அறியாமையிலேயே இருக்க போகிறோம்??
சகோ, காரணமில்லாமல் நீங்களோ, நானோ, நாம் நடமாடிக்கொண்டிருக்கும் இந்த உலகமோ படைக்கப்படவில்லை. அதன் காரணம் என்ன, அவசியம் என்ன என்பதை நம் அனைவரைக்கும் உணர்த்துவதே இந்த ஆக்கத்தின் நோக்கம். சமூகத்தில் வாழும் அனைத்து மக்களின் நடுவிலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மெருகேற்ற இந்த கட்டுரை உதவும் என்றே நம்புகின்றோம்.
இனி... உண்மையிலேயே இறைவன் என்று எதுவும் இருக்கிறதா???
(தொடரும்)
Sourece: http://mydeartamilnadu.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment