widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, August 20, 2012


ஒர்ஜினல் தவ்ஹீதும் டூப்ளிக்கேட் தவ்ஹீதும்….

தவ்ஹீத் என்ற சொல் இன்று படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. சிலருக்கு இந்த சொல்லைக் கேட்டாலே அலர்ஜியாக இருக்கிறது. அதை வெறுப்புடன் பார்க்கின்றனர்.
தவ்ஹீதுவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள் தான் பச்சை முஷ்ரிக்குகள் என்று வாய் கூசாமல் சொல்கின்றனர். ஆக பல்வேறுபட்ட பெயர்களிலே தமிழ் நாட்டில் தவ்ஹீது நடமாடிக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், ஒரு உண்மை இறை நம்பிக்கையாளன் எது உண்மையான தவ்ஹீது, எது போலி தவ்ஹீத் என்று அடையாளம் காண்பது அவசியமாகும். அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும், அல்லாஹ்வுடைய ஆளுமையிலும், அவனுடைய பண்புகள், அவனுடைய தன்மைகள் அவனுடைய நாமங்கள் அவனுடைய உரிமை ஆகியவற்றில் அவனை ஒருமைப்படுத்தி, அவனை மட்டுமே வணங்குவதுதான் ‘தவ்ஹீது கொள்கை’ என்று கூறுகின்றோம், இந்த கொள்கையின்பால் யாரெல்லாம் மக்களை அழைக்கின்றார்களோ அவர்களை ஏகத்துவ கொள்கைவாதி, அல்லது தவ்ஹீத்வாதி என்று அழைக்கின்றோம்.
ஆனால் இன்று இவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட மக்களுக்கு சரியான கொள்கை விளக்கம் கொடுப்பது நமது கடமையாகும்.
அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையைத் தெளிவுபடுத்தாதவரை மற்ற எந்த செயல்பாடுகளும் பயனற்றதாக ஆகிவிடுகிறது. தவ்ஹீது கொள்கையின் முக்கிய அம்சமே அல்லாஹ்வைப் பற்றி அறிவது தான்
அல்லாஹ் அவன் யார்?
அவன் எங்கு இருக்கிறான்?
அவனுடைய பண்புகள் என்ன?
அவனுக்கும் படைப்புக்குமிடையிலுள்ள உறவு என்ன?
அவனைப் பார்க்க முடியுமா?
பார்த்தவர்கள் உண்டா?
அவனுடன் பேசமுடிமா?
பேசியவர்கள் உண்டா?
என்பனபோன்ற விஷயங்களுக்கு சரியான விடை காண்பது தான் தவ்ஹீத்.
அல்லாஹ் ஒருவன் இருக்கிறான், அவன்தான் நம்மைப் படைத்தான் என்பதிலே கருத்து, வேறுபாடுகள் காணப்படவில்லை. அந்த வகையில் எல்லோருக்குமிடையில் ஒரு இணக்கம் இருக்கிறது. அல்லாஹ் இருக்கிறான், அவன்தான் படைத்தான் என்ற நம்பிக்கையில், நபி(ஸல்) அவர்கள் காலத்தில்வாழ்ந்த மக்கத்து குறைஸிகள் மிகவும் உறுதியானவர்களாக இருந்தனர் இது குறித்து திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்: ”நபியே! நீர் அவர்களிடத்தில்” வானங்களையும் பூமியையும் படைத்தது யார்? சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்தில் வசப்படுத்தியிருப்பவன் யார்? என்று கேட்டால் ”அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் உண்மையை விட்டு எங்கே திருப்பப் படுகிறார்கள். அல்குர்ஆன் 29:61
”இன்னும் அவர்களிடத்தில்” வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப் பூமியை அது காய்ந்து செத்தபின் உயிர்ப் பிப்பவன் யார்? என்று நீர் கேட்டால் ‘அல்லாஹ் என்றே அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள். (அதற்கு) புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, என்று நீர் கூறு வீராக! எனினும் இவர்களில் பெரும்பாலானவர்கள் விளங்கமாட்டார்கள். அல்குர்ஆன் 29:63
ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வுக்கு உரிய உரிமைகளில் தான் அவர்கள் குளறுபடி செய்தார்கள். அதாவது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் சிலதை அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் செய்து அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையில் இடைத்தரகர்களை ஏற்படுத்தினர். இதன் காரணத்தினாலேயே அவர்கள் இணைவைப்பாளர்களாகக் கருதப்பட்டார்கள். அதைப் போன்றுதான் இன்றைய முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்தான் படைத்து பரிபாலிப்பவன் என்று நம்பும் அதே வேளையில் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் வணக்க வகைகளில் சிலவற்றைச் செலுத்துவதைக் காண்கின்றோம். உதாரணமாக படைத்த அல்லாஹ் ஒருவனால் மட்டுமே முடியக்கூடிய விஷயங்களை அவனுடைய அடியார்களிடம், குறிப்பாக மரித்துப் போனவர்களிடம் கேட்பது, இப்படிக் கேட்கின்றவர்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்களில் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை ஏற்றிருந்தாலும் அவனை நம்ப வேண்டிய விதத்தில் நம்பாததினாலும் அவனுடைய உரிமையை அவனுக்கு மட்டுமே கொடுத்து அவனை ஏகத்துவப்படுத்தாததினாலும் அவர்கள் உண்மையான ஏகத்துவ கொள்கையுடையவர்கள் என்று சொல்ல முடியாது.
காரணம் இவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான விஷயத்தை அவனுடைய அடியாருக்கு செலுத்திவிட்டனர். எனவே இப்படிப்பட்டவர்கள் போலி தவ்ஹீத் கொள்கையுடையவர்கள் என்று இனம் கண்டு கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு மறைவான அறிவு அல்லாஹ் ஒருவனுக்கே இருக்கிறது. இந்த தன்மை அல்லாஹ்வுடைய அடியாருக்கும் இருக்கிறது என்று நம்புவதாகும்.
இப்படி நம்பிக்கொண்டு ஒருவன் தன்னை தூயமுஸ்லிம் என்று சொல்ல முடியாது. கொள்கையில் கலப்படம் செய்தவனாகக் கருதப்படுவான். இதைப் போன்று தான் மற்ற விஷயங்களும் அதை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம்.
முஸ்லிம்களில் பலர் நாங்கள் ஓர் இறைக்கொள்கை என்னும் தவ்ஹீதைத்தான் ஏற்றுள்ளோம், என்று வாயளவில் சொல்லிக் கொண்டு, அல்லாஹ்வை பற்றிய நம்பிக்கையில் தவறான கொள்கையில் இருந்து வருகின்றனர். அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்பதைக் கூட சரியாகப் புரிந்து கொள்ளாமல் மாற்று மதத்தவர்கள் நம்பி வைத்திருப்பது போன்று அல்லாஹ் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், அவன் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்ற தவறான கொள்கையில் இருந்துவருகின்றனர். இப்படிப்பட்ட கொள்கையில் இருந்து கொண்டு, தங்களை ஒரிஜினல் தவ்ஹீத்வாதி என்று கூறிவருகின்றனர்.
அல்லாஹ்வைப் பற்றிய இந்த கொள்கை உண்மையில் சரியானதுதானா? இந்த கொள்கையுடையவர்களை உண்மையான தவ்ஹீத் கொள்கையுடையவர்கள் என்று சொல்லமுடியுமா என்று நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் எங்கும் இருக்கின்றான், எதிலும் இருக்கின்றான் என்ற கொள்கை அத்வைத கொள்கையாகும். இந்த கொள்கையுடையோர் படைத்தவனும் படைப்புகளும் ஒன்று தான் படைத்தவனையும் படைப்புகளையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அவனுக்கென ஒரு இடத்தை சுட்டிக்காட்டக் கூடாது. அப்படிக் காட்டும் போது இறைவன் படைப்புகளுக்கு ஒப்பாகிவிடுகின்றான் என்று தங்களின் சிற்றறிவிற்கு எட்டியவாறு கூறுகின்றனர். இதைத்தான் உண்மையான தவ்ஹீது என்று அத்வைத கொள்கைவாதிகளான காண்பதெல்லாம் கடவுள்’ என்ற கொள்கையுடையவர்கள் நம்புகின்றனர். இப்படிப்பட்ட கொள்கையை இஸ்லாமின் பெயரில் முஸ்லிம்களிடையில் பரப்பியவர்களில் குறிப்பிடத் தக்கவர் முஹையத்தீன் இப்னு அரபி என்பவராவார். இவர் தர்க்கக் கலையை கற்றுத்தேறியவர். கிரேக்கத்தத்துவங்களைப் படித்தவர், விவாதக்கலையை அறிந்தவர், இவர் அத்வைத கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு அதைப் பற்றி பல புத்தகங்களை அரபியில் எழுதியிருக்கின்றார். இவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரபுநாட்டில் வாழ்ந்தவர்கள், அவருடைய கொள்கையைப் பிடித்து அவருடைய வாதக்கலையின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் தான். இன்றும் அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் என்ற அத்வைதக் கொள்கையைப் பரப்பி வருகின்றனர். இந்த கொள்கை முற்றிலும் தவறானது. இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது. குர்ஆன், சுன்னாவின் போதனைக்கு மாற்றமானது. படைப்புகளைவிட்டும் படைத்தவனை வேறுபடுத்தி, படைத்தவனுக்குரிய பண்புகளை அவனுக்கே கொடுப்பதுதான் உண்மையான தவ்ஹீதாகும்.
அல்லாஹ் எங்கும் வியாபித்து இருக்கவில்லை. அவன் வானத்தில் அர்ஷ்ல் இருக்கின்றான் என்று நம்புவது இஸ்லாமிய இறைக் கொள்கையாகும். அல்லாஹ் மேலே அர்ஷ்ல் இருக்கின்றான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் குர்ஆனில் உள்ளன.
”அளவற்ற கருணையாளனாகிய அல்லாஹ் அர்ஷ் என்னும் அரியாசனத்தின் மீது நிலைத்தான்” அல்குர்ஆன் 20:5
நிச்சயமாக உங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் அவன் வானங்களையும், பூமியையும், ஆறு நாட்களில் படைத்தான். பின் தன் மகத்துவத்திற்கு தக்காவாறு அர்ஷ் என்னும் அரியாசனத்தின் மீது நிலையானான். அல்குர்ஆன் 18:3
”அர்ஷுக்குரிய நாயன் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் தன்மைகளை விட்டும் மிகவும் தூய்மையானவன். அல்குர்ஆன் 21:22
இதுபோன்ற நிறைய வசனங் களில் வல்ல அல்லாஹ் தான் அர்ஷ்ல் உயர்வான இடத்தில் இருப் பதாகக் கூறுகின்றான்.
உண்மையான கொள்கையுடையவர்கள் இதை அப்படியே நம்ப வேண்டும். இதில் எந்த வித சுயவிளக்கத்தையும் கொடுப்பதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. எனவே அல்லாஹ் எங்கும் இருக் கின்றான், எதிலும் இருக்கின்றான் என்று நம்புகின்றவர்கள் போலி தவ்ஹீத்வாதிகளாவார்கள். அல்லாஹ் வானத்தில் அர்ஷ்ல் இருக்கிறான் என்று நம்புகின்ற காரணத்தினால் அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒதுங்கிவிடுவாதாகக் கருதப்படும் என்று சொல்வது சரியான வாதம்தானா?
அல்லாஹ் கூறுகிறான்:
”அல்லாஹ் வானங்கள், பூமிஆகியவற்றின் ஒளியாக இருக்கின்றான். அவனுடையஒளிக்குஉதாரணம்ஒரு மாடத்தைப்போன்றுஇருக்கிறது.அதில்ஒருவிளக்குஇருக்கிறது.அவ்விளக்குஒருகண்ணாடியினுள்இருக்கிறது. அக்கண்ணாடிஒளி வீசும் நட்சத்திரங்களைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்றஜைத்தூன் மரத்தின் எண்ணையினால் எரிக்கப்படுகிறது. அது கிழ்த்திசையைச் சார்ந்ததுமல்ல, மேல்திசையைச் சார்ந்ததுமல்ல, அதனைநெருப்புதொடாவிட்டாலும்அதன்எண்ணைஒளிவீசமுற்படும்,இவையெல்லாம்சேர்ந்து,ஒளிக்குமேல்ஒளியாகும்.அல்லாஹ்தான்நாடியவரைதன்னுடையஒளிஎன்னும்சத்தியவழியின்பால்நடத்திச்செல்கின்றான்.மனிதர்களுக்கு இத்தகையஉதாரணங்களைஅல்லாஹ்கூறுகிறான்.அல்குர்ஆன் 24:35
‘ ‘அல்லாஹ்வுடைய (குர்சி)இருக்கை வானம் பூமி அள விற்குவிசாலமானதாக இருக்கிறது.அல்குர்ஆன் 2:255 அவனுடைய இருக்கையேவானம் பூமியை விடவும் விசாலமானதாக இருக்கிறதென்றால் அவனு
டைய ”அர்ஷ் என்னும் சிம்மாசனம்எவ்வளவு விசாலமானதாக இருக்கும் என்பதை நம்முடைய சிற்றறி
படைத்த நாயன் அல்லாஹ்மேலே அர் ஷில் இருக்கிறான்,அங்கே இருந்துகொண்டு இந்தபிரபஞ்சத்தில்நடக்கின்றஒவ்வொருஆடல்அசைவுகளையும்கண்காணித்துக்கொண்டிருக்கின்றான்.ஒவ்வொருமனிதனுடையஎண்ணஓட்டங்களையுன்றான். அவனுடைய அறிவுக்குஅப்பால் அவனுக்குத் தெரியாமல்மரத்தின் ஒரு இலை கூட விழுவதில்லை.இவை எல்லாவற்றையும் வல்லஅல்லாஹ் மேலே இருந்து கொண்டேகண்காணிக்கின்றான். அப்படி கண்காணிக்கின்ற பேராற்றல் அவன்ஒருவனுக்கு மட்டுமே உள்ளது.அல்லாஹ் கூறுகிறான்:’அல்லாஹ்விடமே மறைவானவற்றின் திறவுகோல்கள்இருக்கின்றன” அவற்றை அவனன்றி எவரும்அறியமாட்டார்கள். மேலும் கரையிலும், கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான், அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை.பூமியின் ஆழத்தின் அடர்ந்தஇருள்களில் கிடக்கும் சிறு வித்தும்,பசுமையானதும் உலர்ந்ததுமானஎந்த ஒன்றும் அவனுடைய பதிவேட்டில் இல்லாமலில்லை.அல்குர்ஆன் 6:59
ஒரு இடத்தில் ஒதுங்கிவிட்டான்என்று சொல்ல முடியாது. அவனைமனிதர்கள்தங்கள்சிற்றறிவில்கற்பனை செய்துபார்க்கின்றகாரணத்தினால்தான்இவ்வாறுகூறுகின்றனர்.இவர்களாகஒன்றைக்கற்பணைசெய்துவைத்துக்கொண்டு அதோடுஒத்துப் பார்க்கின்றனர்.இதனால்தான்அல்லாஹ்வுடையதன்மைகளிலும்கற்பனையைப் பயன்படுத்துகின்றனர்.ஆனால்வல்லஅல்லாஹ்இவர்களுடையகற்பனைகளுக்கெல்லாம்அப்பாற்பட்டவன்,
வல்ல அல்லாஹ் மேலே இருந்துகொண்டு இவற்றையெல்லாம் கண்காணிக்கின்றான் என்பதால் அவன்
வில்உரசிப்பார்த்தால்எதுவும்புலப்படாது.ஆனால்அதைநம்பித்தான்ஆகவேண்டும்.அதுதான்’ஒரிஜினல்தவ்ஹீத்’கொள்கையாகும்.என்னுடையஅறிவுக்குஇதுபொருந்தவில்லைஎன்றுகூறிஇவற்றையெல்லாம்மறுத்துக்கொண்டு நானும்இஸ்லாத்தில்தான்இருக்கிறேன்என்று கூறுவது டூப்ளிகேட் தவ்ஹீத்கொள்கையாகும்.ஈமான் என்பதுநம்பிக்கையைஅடிப்படையாகக்கொண்டதாகும்.அல்லாஹ்வுடையபண்புகளைப்பற்றிகுர்ஆனிலும், சுன்னாவிலும்வருகின்றவற்றை ஆய்வுகளுக்கு உட்படுத்தாமல் நம்பவேண்டும்.காரணம் அல்லாஹ் ஒப்பு உவமை இல்லாதவன், அவனைபடைப்புகளுடன் ஒப்பிட்டுக்காட்டமுடியாது.எனவேஅல்லாஹ்வானத்தில் அர்ஷில்இருக்கிறான் என்பதை எந்தவிதமாககுறுக்குக்கேள்வியும் கேட்காமல் அப்படியேநம்பவேண்டும்.

Source: http://jaqh.org

0 comments:

Post a Comment