widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, February 16, 2011

மவ்லூது பாடும் பெண்கள்!




மவ்லூது பாடும் பெண்கள்!
மவ்லூது பாடல்களை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக சூஃபிக்கள் கடுமையான பயிற்சி எடுப்பார்கள்! இந்த விழாவின் இறுதிநாளை (LEILA-EL-KEBIRA மகத்துவமிக்க நாள்??) நகரத்தின் மையப்பகுதியில் வைத்து நடத்தப்படும் இங்கு சூஃபிக்கள் மவ்லூது பாடல்களை பாடவதும் ஷைகுமார்கள் அதற்கு விளக்கம் கொடுப்பதும் என கூத்து அரங்கேரும். இந்த நிகழ்ச்சிகளுக்கு SOWAN (சோவன்) அதாவது தங்களுக்குள்ள திறமையான அறிவாற்றலை வெளிப்படுத்துதல் என்று பொருள்.
இந்த பாடல்களை பாடுபவர்களுக்கு MAWALIDIYA அதாவது மவ்லூது பாடும் குழுவினர் என்று பெயர். இவர்கள் ஒரு இடத்தில் பாடி முடித்து மற்றொரு இடத்திற்கு பாட செல்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இது நடைபெறுகிறது! ஒரு தெருவில் பாடி முடித்துவிட்டு மறு தெருவுக்கு சென்று கச்சேரி பாடுவது!
மவ்லூது பாடப்படும் இடமும் மக்கள் கூட்டமும்
எகிப்து நாட்டில் மவ்லூது பாடப்படும் இடங்களுக்கு மக்கள் பெரும் திரளாக கலந்துக்கொள்வார்கள் மேலும் அங்கு இரவு நேர கூடாரம் அமைத்துக் கொள்வார்கள். பெரும்பாலும் இங்கு மக்கள் சுவையான உணவுகளை உண்பதற்காகவும், ஒருவகையான புகை பழக்கமான ஷிஸா என்ற (வாட்டர் பைப்) புகைக்கவும் வருகிறார்கள்.

உணவு, புகை மற்றும் ஜிக்ரு ஆகியவையே இந்த மவ்லூது கச்சேரிகளில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்!தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மவ்லூது விடிய விடிய நடத்தப்படுகிறது பெண்கள் அர்த்த-ராத்திரியில் புர்கா கூட இல்லாமல் தெருக்களில் ஆண்கள் முன் அமர்வதும், ஆண் கிலடுகள் பீடி, சிகரெட் குடிப்பதும் விமரிசையாக உள்ளது!
மவ்லூது பாடல்களின் யார் யாருக்கு பாடப்படுகிறது!
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளன்று பாடப்படும் மவ்லூதுக்கு MOULID-EL-NABY மீலாதுன் நபி என்று பெயர்!
சைய்யிதா ஜைனப் மவ்லுது! நபிகளாரின் மூத்த மகளின் பெயரால் அவரது நினைவாக கட்டப்பட்ட சைய்யிதா ஜைனப் மசூதியில் (மண்ணரையில்) பாடப்படுகிறது! இது செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது!
சைய்யித் படாவி (
SAYYID BADAWI) அதாவது எகிப்து நாட்டு துறவியின் பெயரால் மவ்லூது பாடுதல். இது டான்டா எனப்படும் நைல் நதிக்கரையில் பாடப்படுகிறது. அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது!
சைய்யிதினா-அல்-ஹுசைன் மவ்லூது காய்ரோவில் ஆகஸ்டு மாதம் கொண்டாடப்படுகிறது.
அல்-ரிஃபாயி மவ்லூது சிட்டாடெல் சதுக்கத்தில் செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது!
ஃபாத்திமா-அல்-நபவியா மவ்லூது ஜுலை மாதம் தார்ப் அல் அஹ்மர் மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது!
அபு-அல்-ஹக்கா-அல்-உக்சூரி மவ்லூது ஷாபான் மாதம் லக்ஸர் என்ற பகுதியில் கொண்டாடப்படுகிறது!
மவ்லூத்-அல்-அத்ரா மவ்லூது அன்னை மரியம் அவர்களின் நினைவாக அஸ்ஸைட் என்ற பகுதியில் காப்டிக் கிருத்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
மேரி கிர்கிஸ் மவ்லூது காப்டிக் கிருத்தவர்களால் வெஸ்டு பேங்க் என்ற நைல் மற்றும் லக்ஸர் பகுதியில் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது!
மனிதர்களை புகழ்வது கூடுமா?
ஒரு தடவை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன்னிலையில் சபையிலிருந்த மனிதரைப் பற்றி மற்றவர் புகழ்ந்து கூறினார். இதனைக் கண்டித்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழ்ந்தவரைப் பார்த்து நீ உனது நண்பனின் தலையை வெட்டி விட்டாயே என கண்டித்ததோடு நீங்கள் யாரையாவது புகழ நினைத்தால் நான் இன்னாரை பற்றி இப்படி நினைக்கிறேன், ஆனால் அல்லாஹ்தான் அவரைப் பற்றி தீர்மானிக்க கூடியவன் என கூறுங்கள். யாரையும் தூய்மையாளர் என புகழாதீர்கள் என அறிவுறுத்தினார்கள்.[நூல்;புஹாரி-முஸ்லீம்]
கேடுகெட்ட மவ்லூது பாடல்களை பாடிக்கொண்டே நபிமார் களையும், நல்லடியார்களையும், மனிதர்களையும் கண்ணியப் படுத்துகிறோம் என்று பெருமையாக கூறிக்கொண்டு அவர்களின் தலைகளை வெட்டும் செயல்களை செய்கிறீர்களே! மவ்லூது ரசிகர்களே நீங்கள் இந்த கொலைக்கு ஒப்பான பாவத்தை சுமக்காதீர்கள்! மறுமையில் அல்லாஹ்வின் முன்னால் கைசேதப்பட்டு நிற்காதீர்கள்!


Read more

0 comments:

Post a Comment