widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, February 16, 2011

மவ்லூது எகிப்து நாட்டு கிருத்தவர்களின் கலாச்சாரம்



மவ்லூது பொருள் விளக்கம்

மவ்லூது என்ற வார்த்தைக்கு பிறந்த நாள் என்பது பொருள்.
மவ்லூது என்ற பிறந்த நாளை புனிதர்களுக்கு கொண்டாடுவது எகிப்து நாட்டில் வாழும் கிருத்தவர்களின் வழக்கம்! இந்த எகிப்து நாட்டு கிருத்தவர்கள் மவ்லூது விழாவை தங்கள் கிருத்தவ புனிதர்களின் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடி வருகின்றனர்.
வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காப்டிக் கிருத்தவர்களால் மவ்லூது பாடல்களும் விழாக்களும் நைல் நதிக்கரை முதல் அஸைட் என்ற பகுதிவரை கொண்டாதுவது வாடிக்கையாகும்! இதை மையமாக வைத்தே குர்ஆன் ஹதீஸ்களை விளங்காத முஸ்லிம்களில் சிலர் கொண்டாடி மவ்லூதை கொண்டாடி வருகின்றனர்.
மவ்லூது வகைகள்
கிருத்தவ மவ்லூதுகள்
1.மவ்லூத்-அல்-அத்ரா மவ்லூது 
2.மேரி கிர்கிஸ் மவ்லூது
பெயர்தாங்கி முஸ்லிம் மவ்லூதுகள்
1.மீலாதுன் நபி,  
2.சைய்யிதா ஜைனப் மவ்லுது
3.சைய்யித் படாவி (SAYYID BADAWI) மவ்லூது  
4.சைய்யிதினா-அல்-ஹுசைன் மவ்லூது
5.அல்-ரிஃபாயி மவ்லூது  
6.ஃபாத்திமா-அல்-நபவியா மவ்லூது 
7.அபு-அல்-ஹக்கா-அல்-உக்சூரி மவ்லூது
மவ்லூதும் சூஃபி, ஷியா, ஷைகுமார்களின் கூத்துக்களும்
மவ்லூதும் கூத்தும்
காலம் காலமாக கிருத்தவர்களை நடைமுறையை இன்றுவரை எகிப்து நாட்டு பெயர்தாங்கி முஸ்லிம்கள் பின்பற்றி மவ்லூது விழா கொண்டாடி வருகின்றனர் இந்த விழாவின் உச்ச கட்ட நாளான இறுதிநாளைLEILA-EL-KEBIRA அதாவது மிகப் பெரிய இரவு என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். நம் தமிழ்நாட்டு வழக்கப்படி கூறுவதாக இருந்தால் சிவன்ராத்திரி! (கைசேதமே!)
இந்த நாளின் இரவை மகத்துவமிக்க நாளாக கருதி சூஃபிக்களும் ஷைகுமார்களும் வண்ண வண்ண ஆடை உடுத்தி நகர ஊர்வளம் சென்று ஜிக்ரு செய்து ஆடிப்பாடி மகிழுவார்கள்.
முன்ஷிதீன் எனப்படும் பாடகர்களை வரவழைத்து ராகங்களுடன் மவ்லூது பாடி தம்புரைன் வாத்தியம் இசைத்து விடிய விடிய கூத்து கட்டுவார்கள். வாசனை திரவியங்களின் கமகமக்கும் நறுமனமும் இசையும், நடனமும் அங்கு கூடியிருப்பவர்களை தெய்வீக தன்மைக்கே அழைத்துச் செல்வதாக நம்புவார்கள்.


Read more

0 comments:

Post a Comment