widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, February 16, 2011

நபிகளாரின் எச்சரிக்கை


நபிகளாரின் எச்சரிக்கை

அன்புச்சகோதர சகோதரிகளே நபிகளாரின் எச்சரிக்கை உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அல்லது மறந்துவிட்டதா? மறந்து விட்டிருந்தால் மீண்டும் நினைவுபடுத்த இதோ கீழே அந்த மாநபியின் எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை கேளுங்கள்
''கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தியது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர் : உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ (3445)
இப்போது கூறுங்கள்! இந்த மவ்லூது பாடல்களை பாடலாமா? கிருத்தவர்களின் வழிமுறையை பின்பற்றலாமா? இதோ நபிகளாரின் மற்றுமொரு கடுமையான எச்சரிக்கை உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகிறது சற்று செவிதாழ்த்திக் கேளுங்கள்!
''நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள்.'' (புகாரி : 7319 3456)
இதோ அருள்மறை வசனங்கள் இதை படித்து நல்லுணர்வு பெற முயற்சி செய்யுங்கள்! அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!
இணைவைத்தால் மன்னிப்பு கிடையாது
''நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்'' (அல்குர்ஆன் 4:116)
தாயத்தை கட்டாதீர்கள்
நபி
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: அஹமத் 16781)
அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)
இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்
அல்லாஹ் கூறுகிறான்: -
''...எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.'' (அல்குர்ஆன் 5:72 )
இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது
''இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)
இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)
இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)
இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக்குர்ஆன் 39:65,66)
இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!
''நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)
தீர்ப்பு நாளின் கைசேதமே!
அதற்கு பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், 
''அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்'' என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா? (அல்குர்ஆன்:34:33)
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
ஆங்கிலத்தில் ஆதாரம்: http://www.touregypt.net/featurestories/moulid.htm

0 comments:

Post a Comment