widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, February 22, 2011

அரபு நாடுகளை சுழன்று அடிக்கும் மக்கள் சூராவளி!

வரலாற்றின் பழம்பெரும் நாகரிகம் படைத்த எகிப்தில் உருவான மக்கள் சூராவளி தற்சமயம் அரபு நாட்டில் நிலை கொண்டுள்ளது. இச்சூராவளி தனது நோக்கத்தை அடையாமல் ஓயாது என்றே தெரிகிறது. துனிசியா, எகிப்தைத் தொடர்ந்து லிபியா, ஏமன், பஹ்ரைன், அல்ஜீரியா... என்று ஒவ்வொரு நாட்டையும் துடைத்தெறியாமல் செல்லாது என்றும் தெரிகிறது. இறுதியாக சவூதி அரேபியாவின் மன்னராட்சியைப் பதம் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இன்ஷா அல்லாஹ், அரபுநாடுகளை ஒரு கலக்கு கலக்கிவிட்டு உலகின் மற்ற பகுதிகளிலுள்ள; மக்களுக்கு எதிரான ஆட்சிகளையும் கூட புரட்டிப்போடாமல் போகாது என்று கூட நம்பலாம். இதோ; இதன் எதிரொலியாக சைனாவில் ''மல்லிகைப் புரட்சி'' ஆரம்பமாகிக் கொண்டிருப்பதாகவும் அதைத்தடுக்க அரசு ராணுவத்திற்கு கட்டளையிட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
ஃப்ரெஞ்சுப் புரட்சியைவிட மிகப்பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தலாம். காரணம் இந்த சூராவளி கிளம்பியது பழமையான நாகரிகத்தின் பிறப்பிடமான எகிப்திலிருந்து என்பதால் அவ்வாறு எண்ணத்தோன்றுகிறது.
முழுக்க முழுக்க மேற்கத்திய நாகரிகத்தை தங்களின் தனிப்பட்ட வாழ்வில் பின்பற்றி மக்களை ஏமாற்றுவதற்காக முஸ்லிம் பெயர்தாங்கிகளாகத் திகழ்ந்த இந்த அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டு மக்களாட்சிக்கு வழிவகுத்து ஒதுங்கிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள், இன்னும் உணரவில்லையானால் அதே மக்களால் தங்கள் நாட்டை விட்டே ஓட ஓட விரட்டப்படுவார்கள் என்பது திண்ணம்.
பூமியில் இருந்து இறைவன் அளித்த எண்ணெய் அருட்கொடைகளை தங்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்குமாக பங்கிட்டுக்கொண்டு மிச்சத்தை மட்டும் நாட்டுமக்கள் நலத்துக்கு பயன்படுத்தி வந்த இந்த ஆட்சியாளர்களின் கொட்டம் அடங்கப்போகும் நாள் ஆரம்பமாகிவிட்டது என்றே தோன்றுகிறது.
மறுமை சிந்தனை மறந்து உலக வாழ்வின் உல்லாசத்தில் மிதந்த இந்த ஆட்சியாளர்களுக்கு இப்பொழுதாவது தங்களையும் ஆட்சி செய்யக்கூடிய ஒருவன் இருக்கின்றான் அல்லாஹ் என்கின்ற பெயரில், எனும் நினைவு வந்திருக்க வேண்டும்!

0 comments:

Post a Comment