widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, February 22, 2011

இந்த சர்வாதிகாரிகள் ஒவ்வொருவரும் அட்டைப்போல் ஆட்சியில் ஒட்டியிருந்த காலத்தை பார்க்கும்போது சராசரியாக 30 அல்லது 40 ஆண்டுகள். எத்தனை லட்சக்கணக்கான கோடிகளை சுருட்டியிருப்பார்கள்?! அத்தனையும் அந்தந்த நாட்டு மக்களுக்குப் போய்ச்சேரவேண்டிய செல்வமல்லவா?
எகிப்தின் முன்னால் சர்வாதிகார அதிபர் ஹோஸ்னி முபாரக் ஸ்விஸ் பேங்கில் போட்டிருந்த பணமே 40,000 கோடி டாலர் - அதாவது சுமார் 20 லட்சம் கோடி (ஸ்பெக்ட்ரம் ஊழலோடு ஒப்பிடப்படும்போது (1,76,000 கோடி) அதைவிட இத்தொகை 12 மடங்கு அதிகம். இவ்வளவு இமாலயத்தொகையை இந்த சர்வாதிகாரி கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி ஸ்விஸ் பேங்கில் போட்டு வைத்து என்ன செய்யப்போகிறார்....? (தற்போது இந்த தொகை முடக்கப்பட்டுள்ளது வேறு விஷயம்)
இந்த ஒரு ஆட்சியாளரே இவ்வளவு சுரண்டியிருக்கிறார் எனும்போது மற்ற மற்ற ஆட்சியாளர்கள் விழுங்கியிருக்கும் பணத்துக்கு கணக்கு அவர்களைப்படைத்த அந்த ஏக இறைவனைத்தவிற வேறு எவரால் கண்டுபிடிக்க முடியும்?
அத்தனையும் பொது மக்களுக்கு பயன்பட வேண்டிய செல்வமல்லவா? எவ்வளவு பஞ்சம் பட்டினி உலகெங்கும் தலை விரித்தாடுகிறது? குறைந்தபட்சம் இதனை, தன் சொந்த நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக இவர்கள் பயன்படுத்தியிருந்தால் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை எவ்வளவு சிறந்தோங்கிருக்கும்.
இங்குதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ''ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது.....''
(அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு).
இதுபோன்ற ஆட்சியாளர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே தனது வேதத்தில் இறைவன் பாடம் கற்பித்துள்ளான். ஆனால் உண்மையான ஏழைகளான இந்த ஆட்சியாளர்கள் தங்களை பணக்காரனாக எண்ணிக்கொண்டு அந்த உண்மையான பணக்காரனாகிய அல்லாஹ்வை மறந்து வாழ்ந்தது தவறு என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்.
இதோ உலக மக்களுக்கு அந்த ஏக இறைவன் விடுக்கும் செய்தி:
''(நபியே!) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;. இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்;. நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;. நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;. நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்." (3:26)
''(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.'' (3:27)
''முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.'' (3:28)
ஃபலஸ்தீனில் மக்கள் படும் தொல்லைகளைக்கண்டு உலகமே கண்ணீர் சிந்தும்போது அண்டைநாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் சுகத்துக்காக கோடி கோடியாய் மக்கள் பணத்தை விழுங்கும் கொடுமை வேறெங்கிலும் உண்டா? என கேட்கத் தோன்றுகிறது. இப்பொழுதுதான் தெரிகிறது; ஏன் ஒரு குட்டி நாடான இஸ்ராயிலிடம் அத்தனை அரபு நாடுகளும் தோற்றுக்கொண்டே இருக்கின்றனர் என்று!

0 comments:

Post a Comment