widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, February 18, 2011

மவ்லிதை எதிர்ப்போம், மூடநம்பிக்கையை ஒழிப்போம்.



மவ்லிதை எதிர்ப்போம், மூடநம்பிக்கையை ஒழிப்போம்.

இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மீலாத் விழா கொண்டாடியும்,மவ்லித் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர்.இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மீலாது விழா கொண்டாடுவதையும், மவ்லிதுகளைப் பாடுவதையும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிலுந்து மீலாதுகளுக்கும் மவ்லிதுகளுக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை நாம் அறியாலாம.
சுப்ஹான மவ்லிது, பர்ஸஞ்சு மவ்லிது, புர்தா, யாகுத்பா, முஹ்யித்தீன் மவ்லித்து என்று வகை வகையான மவ்லிதுகள் உலாவருகின்றன. எல்லா மவ்லித்களுமே பொய்யும் புரட்டும் நிரைந்ததாகவும் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்க கூடியதாகவும் உள்ளன. அவற்றுள் முதலிடத்தைப் பெற்றுள்ள நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஓதப்படும் சுப்ஹான மவ்லிது. இது எவ்வாறு அபத்தக்களஞ்சியமாக அமைந்துள்ளது என்பதையும், திருக்குர்ஆனுக்கும்  நபி மொழிக்கும் எந்த அளவு முரணாக அமைந்துள்ளது என்பதையும் பின்னர் விவரிக்கபபடும்.
மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது
எந்த ஒரு காரியமும் வணக்கமாக கருதப்பட வேண்டுமானல் இன்னும் அதைச் செய்வதானால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் அந்த காரியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும். அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகறிக்க வேண்டும்.அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக மறுமையில் நன்மையளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதியாகும்.
இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. நபிகள் நாயகம் (ஸல்)அவர்களைத் தனது இறுதித்தூதராக அல்லாஹ் அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத்தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹி (இறைச்செய்தி) வரமுடியாது என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால்  போதும் இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் உருவாக்கலாம் என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் வணக்கங்களை முழுமையாக கற்றுத் தரவில்லை  என்று அவர் கருதுகிறார். மேலும் நபி (ஸல்) அவர்கள்ளுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ (இறைச்செய்தி) வரக்கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.
இன்றய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கு வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
(அல்குர்ஆன் 5:3)
நபி (ஸல்)அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப் படுத்தி விட்டதாக அல்லாஹ்  மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான். எனவே மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. புதிதாக எதையும் உருவாக்கிட அனுமதியில்லை. என்பதுதான் மேற்கண்ட வசனத்தின் பொருளாகும்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த மீலாது விழா மற்றும் மவ்லிதுகள் இருக்கவில்லை. அல்லாஹ்வால் பூர்த்தியாக்கப்பட்ட அல்குர்ஆனிலும் சொல்லப்படவில்லை. இதனாலேயே மீலாத் விழாவையும், மவ்லிதையும் நாம் நிராகரிக்க வேண்டும்.
நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி))
நூல் : முஸ்லிம் 3243
நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்.எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 2697, முஸ்லிம் 3242.
மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? நாம் எந்த ஒரு அமலை செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபி (ஸல்) அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளை இல்லாமல் எந்த ஒரு அமலை யார் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்டும் என்பதைத் தான் மேற்கண்ட நபி மொழிகள் கூறுகின்றன.
மீலாது விழா கொண்டாடுமாறும் மவ்லீது ஓதுமாறும் நபி (ஸல்) அவர்கள் எந்த கட்டளையும் பிறப்பிக்காதது அதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.
செய்திகளில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும்.வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ்
நூல் : முஸ்லிம் 1435
செய்திகளில் உன்மையானது அல்லாஹ்வின் வேதமாகும்.வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும்.மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் (அனாச்சாரம்) ஆகும் ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்.என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ்
நூல் : நஸாயி 1560
இவ்விரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? என்பதை முஸ்லிம்கள் கவனமாக சிந்திக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் புதிதாக உருவாக்கப்பட்டவை
 மிகமிக கெட்ட காரியம்
 வழிகேடு
 நரகத்தில் சேர்க்கும்.
என்றெல்லாம் கடும் எச்சரிக்கை உள்ளது. நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு பல நூராயிரம் வருடங்களுக்குப் பிறகு உறுவாக்கப்பட்ட இந்த மீலாத் விழாக்களாலும், மவ்லீத்களாலும் எந்த நண்மையுமில்லை என்பது ஒருபுறம் இருக்க இதனால் நரகத்திற்குச் செல்லும் நிலை தான் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும் மீலாத் கொண்டாடுமாறும் மவ்லீத்கள் ஓதுமாறும் கூறவில்லையென்றால் அது எப்படி ஒரு வணக்கமாக முஸ்லிம் சமுதாயத்தில் நிலைபெற்றது?
நபியைப் புகழுதல்
சுப்ஹான மவ்லீத் என்பது நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து பாராட்டுவதற்காகத்தான் இயற்றப்பட்டது. அந்த நோக்கத்தில் தான் நாங்களும் பாடுகிறோம். சில நபித்தோழர்கள் நபிகள் நாயகத்தை புகழ்ந்து கவி பாடியதை நபி(ஸல்) அவர்களே அங்கீகரித்துள்ளார்கள். உண்மையான எந்த முஸ்லிமும் நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதற்கு தடை விதிக்கமாட்டார்கள் என மவ்லீது அபிமானிகள் மவ்லீதை நியாயப்படுத்திக் கூறும் ஆதாரங்கள் இவை.
நபி (ஸல்) அவர்களை புகழ்வது அல்ல பிரச்சினை. நமது முழு வாழ்நாளையும் அவர்களை புகழ்வதற்காக பயன்படுத்தலாம். நல்லொழுக்கம், வீரம், நேர்மை போன்ற எத்தனையோ நற்குணங்களை நபி(ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். அவற்றையெல்லாம் உலகரிய உரைப்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் மவ்லீது இந்தப் பணியைத் தான் செய்கின்றதா?
1. நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்று கூறும் இவர்களிடம் போய் “என்ன சொல்லிப் புகழ்ந்தீர்கள்? நபி(ஸல்) அவாகளின் எந்தப்பண்பை புகழ்ந்தீர்கள்” என்று கேட்டுப்பாருங்கள். கூலிக்குப்பாடியவர்களில் பலருக்கு தெரியாது.அவர்களை அழைத்துப் பாடச்சொன்ன்வர்களுக்கும் தெரியாது.
2. மவ்லீதை செவிமடுத்த மக்கள் நபி (ஸல்)அவர்களின் எந்தச் சிறப்பை அறிந்துக்கொண்டார்கள்? எதுவுமே இல்லை.
3. புகழுதல் என்ற போர்வையில் ஒரு வணக்கம் தான் நடக்கிறது. அல்லாஹ்வின் வேதத்தை பொருள்; தெரியாமல் ஓதினாலும் ஒரு எழுத்திற்கு பத்து நண்மைகள் கிடைக்கும் என்று மார்க்கம் கூறுகின்றது. மவ்லீதையும் இது போன்ற நம்பிக்கையில் தான் பாடியும், கேட்டும் வருகின்றனர். யாரோ ஒரு மனிதனின் கற்பனையில் உதித்த சொற்களை பொருள் தெரியாமல் வாசித்தால் நண்மை உண்டு என நினைப்பது தான் நபி (ஸல்) அவர்களைப் புகழ்தலா?
4. சாதாரண மனிதனின் சொற்களை வாசிப்பதால், கேற்பதால் அங்கே அல்லாஹ்விடமிருந்து பரகத் கிடைக்கும் என்று நம்புவதற்கு பெயர் தான் நபி (ஸல்) அவர்களைப் புகழுதலா?
5. இந்தப்பாடலைப் பாடிய உடன் அங்கே வைக்கப்பட்டிருந்த உணவுப் பதார்த்தங்களுக்குத் தனி மகத்துவம் வந்து விட்டதாக நம்பப்படுகிறதே. இதற்குப் பெயர் தான் நபி(ஸல்) அவர்களைப் புகழுதலா? புகழுதல் என்பது போர்வைதான் உள்ளே நடப்பவை யாவும் புதிதாக உருவாக்கப்பட்ட வணக்கங்கள் தான்.
6. நபி(ஸல்) அவர்கள் வாழும் போது அவர்களைப் பல நபித்தோழர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். இதற்கு ஹதீஸ் நூற்களில் ஆதாரம் உள்ளது. ஆனால் இந்தப்பாடல்களை நபித்தோழர்கள் ஒவ்வொறுவரும் ஆளுக்கொரு பிரதி வாங்கி வைத்துக் கொண்டு வீட்டில் ஓதிக்கொண்டிருந்தார்களா?
ஆனால் ஒருவர் விரும்பினால் நபி (ஸல்) அவர்களைப் புகழந்து
 மேடையில் பேசலாம்
 கட்டுரை எழுதலாம்
 கவிதையும் இயற்றலாம்
மார்க்கம் வகுத்துள்ள வரம்புக்குள் நின்று இவற்றைச் செய்யலாம். அது போல் மவ்லிது பாடக்கூடியவர்கள் தாங்களாக தினம் ஒரு கவிதையை இயற்றி அதன் பொருளை உணர்ந்து நபி(ஸல்) அவர்களைப் புகழட்டும்! இதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். எவரோ தவறாக புகழ்ந்து பேசியதை, பாடியதை அச்சிட்டு வைத்துக்கொண்டு அதை உருப்போடும் போது தான் அது போலி வணக்கமாகவும், மோசடியாகவும் ஆகிவிடுகின்றது. மேலும் நபி (ஸல்) அவர்களைப் புகழவே இந்த மவ்லிதுகள் என்று இனியும் வாதிட்டார்களென்றால் அவர்கள் கூறுவது பொய் என்பதை அவர்களது நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.
 நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது நோக்கம் என்றால் வீடு வீடாகச் சென்று கூலி பெறுவது ஏன்?
 நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதற்கான கூலியை மறுமையில் தானே எதிர்பார்க்க வேண்டும்?
 விடி மவ்லிது, நடை மவ்லிது என்று கொடுக்கப்படும் தட்சனைக (கூலிக)ளுக்கு ஏற்ப மவ்லிது விரிவதும், சுருங்குவதும்
ஏன்?
 பணம் படைத்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் பாரபட்சம் காட்டுவதுதான் நபி(ஸல்) அவர்களைப் புகழும் இலட்சணமா?
மார்க்க அறிஞர்களுக்கு எந்த வருமானமும் இல்லாத காலத்தில் அன்றைக்கு வாழ்ந்த அறிஞர்கள் இதை வருமானத்திற்காக உருவாக்கினார்கள். அதை இன்றைக்கும் நியாயப்படுத்துவது சரிதானா? என்பதை மார்க்க அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இல்லாத வணக்கத்தை உருவாக்கிய குற்றத்தை மறுமையில் சுமக்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும். புரோகிதர்கள் என்ற இழிவு மார்க்க அறிஞர்களுக்கு ஏற்பட இதுதான் காரணம் என்பதை மார்க்க அறிஞர்கள் உணர்ந்தால் அவர்களின் மரியாதையும் உயரும்.
மேலும் நபி (ஸல்) அவர்களை புகழலாம் என்றாலும் அதற்கு வரம்பு உள்ளது.
“கிரிஸ்த்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீரிப் புகழாதீர்கள்! அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்” என்பது நபி மொழி.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி- 3445,6830)
“நபி (ஸல்) அவர்களைப் புகழவே இந்த மவ்லிதுகள்” என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வரம்பை மீறியே புகழ்கிறார்கள். ஸ{ப்ஹான மவ்லிதில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலையில் நிறுத்தக் கூடிய பாடல்கள் பல உள்ளன.
மவ்லிதின் அபத்தங்கள்
திருக்குர்ஆன் வசனங்களையும், நபி வழியையும் அலட்சியம் செய்யும் வகையிலும், புறக்கனிக்கும் வகையிலும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தகர்கக்கூடியதாகவும், இன்னும் இஸ்லாத்தைவிட்டு வெளியேற்றக் கூடியதாகவும், பல்வேறு நச்சுக்கருத்துக்களை கொண்டதாகவும் இந்த ஸ{ப்ஹான மவ்லிது கிதாபில் காணப்படுகிறது. உதாரணமாக,
பாவங்களை மன்னிப்பது நபிகள் நாயகமா?
நபி (ஸல்) அவர்களிடம் பாவமன்னிப்பு கோரும் விதமாக மவ்லிதில் பல வரிகளை நாம் காணமுடியும்.
அவற்றில் சில வரிகள் …..

السلام عليك يا ماحي الذنوب  السلام عليك يا جالي الكروب

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம்!
கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம்!

أنت غفار الخطايا           والذنوب الموبقات

இழிவூட்டும் சிறுபழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ!
அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ!

غفروا عني ذنوبي واعف لي عن سيئات

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொருத்தருள் புரிபவரே!
என்று சுப்ஹான மவ்லிது கிதாபில் எழுதி வைத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தும் அந்த வரிகளை உண்மை முஸ்லிம்கள் ஏற்க முடியுமா? குர்ஆனையும், நபி வழியையும் மதிக்கக்கூடியவர்கள் இந்த நச்சுக் கருத்தை ஆதரிக்க முடியுமா? பாவங்கள் செய்தோர் அதற்கான மன்னிப்பை அல்லாஹ்விடம் தான் பெற வேண்டும் இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.
“அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்கு தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.”
ஆல் குர்ஆன் (3:135)
“தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ்) கூறுவதை தெரிவிப்பீராக!”
அல்குர்ஆன் (39:53)
தன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது எனவும், அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளது எனவும் அவற்றில் வேறு யாருக்கும் பங்கில்லை எனவும் இந்த வசனங்கள் மூலம் இறைவன் அறிவிக்கின்றான்.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும், வானவர்களையும் சம்பந்தப்படுத்தி இட்டுக்கட்டப்பட்ட இந்த கப்ஸாக்களை
படிப்பது பாவமா? புன்னியமா? ஏன்பதை மவ்லிது பக்தர்கள் சிந்திக்கட்டும்.! நன்மை என்று என்னிக் கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி நரகத்திற்கு இழுத்துச் செல்லும் இந்த மவ்லிது பாடலை உண்மை முஸ்லிம்கள் ஆதரிக்கலாமா?
திருக்குர்ஆனுக்கும், நபி வழிக்கும் முரண்பட்டுள்ள மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள, மேலும் இஸ்லாத்தில் பலதெய்வ வழிபாட்டு முறையை திணிக்க முயன்றுள்ள இந்த மவ்லிதிலிருந்து விடுபட்டு உண்மை இஸ்லாத்தை நிலைநாட்டுவோம்.

0 comments:

Post a Comment