"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Tuesday, February 22, 2011
கை தட்டி ஆரவாரித்தல் - யாருடைய நடைமுறை?
[
''மேலும், (அல்லாஹ்வின்) இல்லத்தில் அவர்களின் தொழுகையெல்லாம்
சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறு (எதுவுமாக) இருக்கவில்லை,;
''ஆகவே நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (இன்றையத்தினம்)
வேதனையைச் சுவையுங்கள்,"" (என்று மறுமையில் கூறப்படும்)." (அல்குர்ஆன் 8:35)
எவர்
ஒருவர் என்னால் ஏவப்படாத (மார்க்கக்) காரியத்தை நன்மையான காரியம் என்று
கருதித் செயல்படுகிறாரோ அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் . இதை அன்னை ஆயிஷா
ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)]
கை
தட்டி ஆரவாரித்தல் என்பது இன்று உலகலாவிய ரீதியில் அனைத்து மனித
சமூகங்களுக்கிடையிலும் ஒரு பழக்கப்பட்ட வழக்கமான செயலாக இருப்பதை
அவதானிக்காதவர்கள் இருக்க முடியாது. சுருக்கமாகச் சொல்லப் புகுமிடத்து
நாமும் கூட சில சமயங்களில் நம்மையறியாமலேயே இந்தச் செயலைச் செய்கிறோம்.
இன்று
மேடைகளில் உரையாற்றுபவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் என்று
சமூகத்தில் எந்தவொரு கோணத்தைப் பார்த்தாலும் அவர்கள் தம் வெற்றிக்காக
மற்றவர்கள் கைதட்டி ஆரவாரித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று
எதிர்பார்க்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment