widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Monday, February 21, 2011


ஆங்கிலத்தில் கடிதங்கள்: இனி எளிதாக எழுதலாம்!


ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரிந்த பலருக்கு சரியாக எழுதத்தெரியாது.
இனி அந்த கவலையே வேண்டாம்.
பள்ளி முதல் கல்லூரிவரைஅலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள் வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ் நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து எழுதுகின்றனர்.
அலுவலகத்துக்கோகல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு அனுபவம் இல்லை என்றுஅனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.

ஆங்கிலத்தில் இனி எந்த கடிதம் வேண்டுமானாலும் எழுதலாம் நமக்கு உதவுவதற்க்காகவே ஒரு இணையதளம் உள்ளது.


இந்த தளத்திற்க்கு சென்று நம் பெயரைக் கொடுத்து எளிதாக எந்த கடிதம் வேண்டுமானாலும் உருவாக்கலாம்சம்பிரதாய கடிதங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க நமக்கு ஒவ்வொரு படியையும் கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறது.

எந்த இடத்தில் எதற்க்காக என்ன பெயர் கொடுக்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் சம்பள உயர்வுவேண்டும் என்றால் எப்படி கடிதம் எழுத வேண்டும் யாருக்கு எந்த பதிவியில் இருப்பவர்களுக்கு எழுதவேண்டும்எதை மையப்படுத்தி நாம் கேட்க வேண்டுவதை ஆங்கிலத்தில் எப்படி எல்லாம் எளியமுறையில் இலக்கண பிழை இல்லாமல் எழுதலாம் போன்ற அத்தனை தகவல்களையும் கொண்டு நம்மை ஆங்கிலத்தில் சம்பிரதாய கடிதங்கள் எழுத உதவுகிறதுபார்ப்பதற்க்கு எளிதாக எந்த விளம்பரமும் இல்லாமல் தெரிகிறதுகண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்


0 comments:

Post a Comment