widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, March 14, 2012

போலி முல்லாக்கள்


ஸ்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்கிய, அதனை மதமாக்கிய முல்லாக்கள் பிடியில் முஸ்லிம் சமுதாயம் கட்டுண்டுக் கிடக்கிறது. முஸ்லிம்கள், அற்பமான இவ்வுலக வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். தன் கையே தனக்குதவி என்று பாடு படுகிறார்கள். பட்டம், பதவி, சொத்து, சுகங்களை அடைகிறார்கள். பல தலைமுறைகளுக்குத் தேவையானதை இவர்களே சேர்த்து வைக்கிறார்கள். அது மட்டுமல்ல! இவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முல்லாக்களுக்கும் அள்ளித் தருகிறார்கள்.
இங்கு இவர்களது கை மேலேயும் (கொடுப்பதாகவும்) முல்லாக்களின் கை கீழேயும் (வாங்குவதாகவும்) இருப்பதைக் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். தங்களின் இவ்வுலகத் தேவையைக்கூட சாதாரண மக்களிடம் கையேந்தி நிற்கும் இந்த போலி முல்லாக்கள், இவர்கள் எப்படி நாளை மறுமையில் நமக்குச் சொர்க்கத்தைப் பெற்றுத்தர முடியும்? என்று முஸ்லிம்கள் சிந்திப்பதில்லை. அப்படி சிந்தித்தால் உண்மையை இவர்களாலும் உணர முடியும்.
“கூறையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா?” என்று தமிழ் வழக்கில் கூறுவது போல இவ்வுலக அற்பத் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ள முடியாதவர்கள்; சாதாரண மக்களிடம் கையேந்தி நிற்பவர்கள்; மறு உலக வாழ்க்கைக்கு உரியவற்றை இந்த மக்களுக்கு எப்படி பெற்றுத்தர போகிறார்கள்? சிறிது சிந்தித்து பாருங்கள். அவர்களின் ஏமாற்று வித்தை எளிதாகப் புரிந்துவிடும். இவர்களின் பிடியில் இருந்து விடுபடாதவர்கள் பரிதாபத்துக்குறியவர்களே.
وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءنَا فَأَضَلُّونَا السَّبِيلَا “எங்கள்இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவருக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (33:67)
முஸ்லிம் சகோதர, சகோதரிகளே முல்லாக்களின் பிடியிலிருந்து விடுபடுங்கள். அவர்களை நம்பிச் செயல்படாதீர்கள். நீங்களே களத்தில் இறங்குங்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் குர்ஆன், ஹதீஸ் துணையோடு சரிபாருங்கள். எப்படி உலக காரியங்களில் நீங்களே உழைத்து பாடுபடுகிறீர்களோ அதே போல் மார்க்க காரியங்களில் நீங்களே முயற்ச்சி செய்து குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை பாருங்கள். “குர்ஆன், ஹதீஸ் விளங்காது” என்று ஓலமிடுவதை நீங்கள் நம்பாதீர்கள்.
குர்ஆன், ஹதீஸ் விளங்க 16 கலைகள் கற்ற பண்டிதர்களே விளங்க முடியும் என்று ரீல் விடுவார்கள். கலப்படம் மூலம் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் வியாபாரிகள் கலப்படம் இல்லாத பொருள்களை எங்கிருந்து பெறுகிறார்கள் என்பதை மறைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். காரணம் மக்களுக்கு அது தெரிந்துவிட்டால் அவர்களது வியாபாரம் படுத்துவிடும். அதுபோல் இந்த போலிகளும் மார்க்கத்தை கலப்படமாக்கி மதமாக்கிவிட்டதால், உண்மை மார்க்கத்தை மக்கள் நெருங்குவதிலிருந்து தடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
அவர்களை நம்புவதைவிட, உங்களைப் படைத்த அல்லா‹வை நம்புங்கள். அவன் குர்ஆன் விளங்குவதற்கு எளிதானது என்று பல இடங்களில் வாக்களித்துள்ளான். மேலும் நபி (…ல்) அவர்கள் நடைமுறைகளுக்கு தேவையானவற்றை விளக்கியும், நடைமுறைப்படுத்தியும் காட்டித் தந்திருக்கிறார்கள். எனவே குர்ஆன், ஹதீஸ் முயற்சிப்பவர்களுக்கு தாராளமாகவே விளங்கும்.
எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். அல்குர்ஆன் (29:69)
Sourece:: Read Islam

0 comments:

Post a Comment