widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, March 28, 2012

ளுஹா தொழுகை


ஆன்சார் தப்லீகி

சிலர் ளுஹா தொழுகை தொழ வேண்டும் எனக் கூறுகிறார்கள்.இதேவேளை நபி (ஸல்) அவர்கள் 
தொழவில்லை எனவும் கூறுகின்றார்கள் . இதன் நிலைப்பாடு என்ன?
விடை
ளுஹா தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் வரக் கூடிய ஆதாரமான 
ஹதீஸ் களை நாம் பார் க்கும் போது இதற் கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் ளுஹா தொழமாட் டார்கள். ஆனால் வெளியில் சென்று வந் தால் 
தொழுவார் கள்.
இதை ஆயிஸா (ரழி) அவர் கள் அறிவிக் கின்றார்கள்.
அப்துல் லாஹ் பின் ஸகீக் கூறுகின்றார் நபி (ஸல்) அவர்கள் ளுஹா தொழுபவர்களாக 
இருந்தார்களா ? என ஆயிஸா (ரழி) அவர் களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'இல் லை . 
வெளியிலிருந்து வந் தால் தவிர'' என பதிலளித் தார் கள். (புகாரி)
இவ்வாறே மக்கா வெற்றியின் போது நான் நபி (ஸல்) அவர் களிடம் சென்றிருந் த வேளையில் 
அவர் கள் எட் டு ரக் அத்துகள் தொழுததாக உம்முஹானி (ரழி) அவர் கள் கூறுகிறார்கள். (புகாரி).
இதேவேளை நான் கு ரக்அத்துகளும் தொழுபவர் களாவும் இருந்திருக் கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எத் தனை ரக் அத்துகள் ளுஹா  தொழுபவர் களாக இருந் தார்கள் என ஆயிஸா 
(ரழி) அவர்களிடம் கேட்ட போது நான்கு ரக்அத் தொழுபவர் களாக இருந் தார்கள். மேலும் 
அதைவிடவும் கூடுதலாகவும் தொழுவார்கள். (புகாரி)
ஏன் தொடராக தொழவில்லை?
மக்களுக்கு பர்ளாக் கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக அதைத் தொழாதவர் களாக 
அவர்கள் இருந் திருக்கிறார் கள் என்பதையும் ஆயி~h (ரழி) அவர் கள் பின்வருமாறு 
விளக்குகிறார் கள்.
நபி (ஸல்) அவர்கள் ஓர் சில அமலை அவர்கள் செய் வதை பார் த்து மக் களும் செய் தால் மக்கள் மீது 
கடமையாக் கப்பட்டு விடுமோ எனப் பயர் கின்ற போது அதை செய்வதற்கு விரும்பினாலும் அதை 
செய்வதை விட்டுவிடுவார்கள். நபி (ஸல்) அவர் கள் அறவே ளுஹா தொழவில்லை (வெளியில் 
இருந்து வந் தால் தவிர) . ஆனால் நான் தொழுது வருகின்றேன். (புகாரி)
ஏனையவர்கள் வழமையாக்கிக் கொள்ளலாமா?
இது நபி (ஸல்) அவர்களின் நிலையாக இருந் தாலும் பிறருக்கு தொழுவதற் கு ஆசையூட்டுபவர்களாக 
இருந்துள்ளார்கள். 
அபூஹ_ரைரா (ரழி )அவர் கள் கூறுகின்றார்கள்இரண்டு ரக் அத் ளுஹா தொழுவதற்கும் ஒவ் வொரு மாதத்திலும் மூன்று நோன்பு பிடிப்பதற்கும் 
தூங்குவதற்கு முன் வித்று தொழுவதற் கும் என் னுடைய நேசர் எனக்கு உபசேதம் செய்தார்.
இதனால் தான் ஆயி~h (ரழி) அவர்களும் நபி (ஸல்) அவர் கள் தொழாவிட்டாலும் நான் 
தொழுதுவருகின் றேன் எனக் கூறியுள்ளார் கள்.
இதே வேளை இன்னும் சில ஸஹாபாக்கள் நபி (ஸல் ) அவர்கள் ளுஹா தொழவில்லை எனக் கூறி 
உள்ளனர். இப் னு உமர் (ரழி)அவர்கள் இது பித் அத் என கூறிய செய் திகளும் வந்துள்ளது. அந்த 
செய்திகள் தொழுததாக வருவதற்கு முரண்படாது.
ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் பெரும்பாலும் ளுஹா தொழுபவராக இல்லாததால் 
அதிகமானவர் களுக்கு அவர்கள் சில சந்தர்ப்பங் களில் தொழுதது தெரியாதிருந்திருக் கிறது. 
அதனால் அவர் கள் தொழவில் லை என அறிவித் திருக் கின்றார்கள்.
இதேவேளை சில சந் தர்ப்பங்களில் தொழுததை கண்ணுற்ற ஆயிஸா (ரழி) போன்ற ஒருசிலர் 
தொழுததாகவும் அறிவித்துள்ளார் கள்.
இதனாலேயே இந் த மாறுபட்ட அறிவிப்புகள் வந்துள்ளது.
எனவே முடியுமானவர்கள் வழமையாக இரண் டோ அல்லது நாலோ அல்லது எட்டோ முடியுமானதை 
தொழுதுவரலாம். தவறினால் முடியுமான நேரங்களில்  தொழுது கொள்ளலாம். அதிலும் குறிப்பாக 
பிரயானங்களிலிருந்து வந்தால் தொழுது கொள்ளலாம். 
இவ்வாறே ளுஹா நேரத் தில் ஊருக் கு வரவேண்டி ஏற்பட்டால் ஆரம்பத்தில்; பள்ளிவாயலுக்கு சென்று 
இரண்டு ரக் அத் தொழுவிட்டு பின்னர் வீட்டிற்கு வருவது நபிவழியாக வந்துள்ளதால் அதைப் போன் று 
நாமும் செய்ய பழகிக் கொள் வோமாக.
இவ்விரண்டு ரக்அத்துகள் பள்ளிக் காணிக்கையா ? அல் லது ளுஹாத் தொழுகையா ? எனும் 
சர்ச்சை இருந்தாலும் அந் த நேரத்தில் அவ்வாறு தொழுவது சுன்னாவாகும்.
Source: srilankamoors.com

0 comments:

Post a Comment