widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, March 28, 2012

கொள்கைவாதிகளுக்குள் மறைந்திருக்கும் சீதனம்


ஆசிரியர் பஹீம் தாலிப் -

கொள்கைவாதிகளே சீதனத்தை திருப்பிக் கொடுத்துவிட்டீர்களா?
பல கன்னிப் பெண்கள் கன்னிகளாகவே முதிர்ந்து விட்ட பரிதாபமான நிலமைக்கு எங்கள் இளைஞர் சமுதாயம்; கேள்வி கணக்கு 
கேட்கப்படும்  நாளில் பதில் சொல்லக் கடமைபட்டுள்ளனர்.
குர்ஆன் சுன் னாவின்; எழுச்சிக்குப் பின்னர் எங்கள் நாட்டில் சில இளைஞர்கள் மஹர் கொடுத்து திருமணம் செய்யக் 
கூடியவர்களாக சுன்னாவினடிப்படையில் இருக்கிறார்கள் . 
இது உண்மையில் மகிழ்ச்சிக்குரிய சந்தோசப்பட வேண்டிய விடயமாகும்.
தன்னை நம்பிவரும் பெண்ணுக்கு இருக்க இடமும் உடையும் உணவும் கொடுக்க எவன் சக்தி பெறவில்லையோ அவன் அவற்றை 
பெறும் வரை நோன்பு பிடிக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியிருப்பது  எந்தளவு பெண்ணுக்கு ஆண் பொறுப்பானவன் 
என்பதை காட்டுகிறது.
ஆனால் அதிகமானவர்கள் திருமணம் பேசும் புரோகிதரர்;களிடம் முதலில் கேட்பது பெண்ணுக்கு அவளுடய தாய் தகப்பன் என்ன 
கொடுப்பாங்க என்பதுதான். 
தன்னை வெட்கமின்றி விற்றுவிடும் இளைஞர்கள் இன்று எத்தனை பேர் பெருமையுடன் அதனை மற்றவர்களிடமும் பீற்றிக் 
கொள்கின்றனர்.
தன்னுடய ஆண்மையை அடகுவைத்த இத்தகையவர்களை ஆண்கள் என்று அழைக்கலாமா?
இது மட்டுமல்லாமல் இன்னும் சிலர் கொள்கையை ஏற்பதற்கு முன் னர் சீதனம் வாங்கி இருப்பார்கள்
ஒரு சிலரைத் தவிர அதிகமானவர்கள் அதனை திருப்பிக் கொடுப்பதில்லை. 
அவர்கள் சொல்லும் நொண்டிச் சாட்டு என்னவென்றால் அது என் மனைவியுடய பங்கு, அவள் எனக்கு அனுமதித்திருப்பதால் 
நான் அதனை அனுபவிக்கிறேன்.
இப்படி சொல்பவர்கள் பாமரர்கள் மட்டுமல்ல மேடையேறி மக்களுக்கு உபதேசம் செய்யும்  மௌலவிமார்களாகவும் இருப்பது 
மிகவும் கவலைக்குரிய விடயமுமாகும்.
அவர்களில் ஒருசாரார் தௌஹீத் கொள்கையை ஏற்பதற்கு முன்னும்; திருமணத்துக்கு முன்னும் மிகவும் சாதாரண நிலையில் 
இருந்தவர்கள்.
மனைவியின் தகப்பனால் இஸ்லாத்தினடிப்படையில் பிரிக்கப்படாத சொத்திலிருந்து கைக் கூலியாக கொடுத்ததை வைத்துக் 
கொண்டு அதனை முதலீடாக பயன்படுத்தி தொழில் செய்து இன்று பெரிய பணக்காரர்களாய் இருக்கின்றனர். 
பின்னர் இது தவறு என்று தெரிந்தாலும் நப்ஸ_க்கு கட்டுபட்டவர்களாக அவற்றை திருப்பிக் கொடுப்பதில்லை.  
அப்படி கொடுக்காமல் நாங்களும் தௌஹீத் வாதிகள் தான் என் று இன்று எம் மத்தியில் மார் தட்டிக் கொண்டிருப்பதும் 
கவலைக்குரிய விடயமாகும். 
எத்தனையோ பேர் அவர்கள் சுமந்திருப்பது அவர்களுடய மனைவியின் சகோதரர்களுக்கு சேர வேண்டிய பங்குளான நரகத்தின் 
நெருப்பாகும் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.
சிலர் அதற்கு இஸ்லாத்தில் எங்கேயாவது வீக் பொயின்ட் இருக்கிறதா என்று தேடுகின்றனர். அதாவது நபி (ஸல்) அவர்கள் 
அன்னை கதீஜாவினுடய வீட்டில் இருந்தார்கள் தானே என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கேட்கின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்துக்கு முன் தான் அன்னையவர்களை மணந்தார்கள் மஹருடய சட்டம் இறங்கிய பின்னாலல்ல 
என்பதை இவர்கள் சிந்திக்கவேண்டும்

source: srilankamoors.com

0 comments:

Post a Comment