widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, March 1, 2012

ஹராம் ஹலால் ஒழுக்கம் இலங்கையில் மட்டுமா பேணப்படவேண்டும்? - பஹீம் தாலிப் -



இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் படிப்பதற்காகவும் தொழில் வாய்ப்புக்களுக்காகவும் மேற்கத்திய நாடுகளான இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளுக்கும் அதிகமாக போகக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
இப்படியான இளைஞர்களில் பெரும்பாலானோரின் நிலை இன்று மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. நாங்கள் முஸ்லிம்கள் என்பதையே மறந்து போகக்கூடியவர்களாகத் தான் பெரும்பாலான இளைஞர்கள் இருக்கின்றனர்.
தாய்நாட்டில் ஹராத்தையும் ஹலாலையும் பேணிவாழ்ந்தவர்கள் கூட தங்களுடய வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்காக ஹராமான தொழில்களை செய்கின்றனர்.
டெஸ்கோ இ ஸெயின்ஸ்பரி போன்ற இன்னும் பல சுப்பர்மாக்கெட்டுகளில் அங்கு விற்கப்படும் பன்றி இறைச்சி மற்றும் மதுபானங்களை அவர்களுடய கரங்களால் எடுத்து பார் கோட் பிடித்து கொடுப்பதும் அத்தகைய பொருட்களை அடுக்கிவைப்பது போன்ற பணிகளை செய்கின்றனர்.
அதுமட்டுமல்ல மெக்டொனால்ட் போன்ற இடங்களில் பன்றியை பொரித்து பரிமாறுகின்றனர். சில ரெஸ்டூடன்ட்களில் வேலைசெய்யும் இளைஞர்கள் மதுவை ஊற்றிக் கொடுக்கின்றனர். சிலர் பார்களில் குடித்து முடித்த கின்னங்களை துப்பரவுசெய்யும் தொழில் செய்கின்றனர். இப்படி ஹராமான பணிகள் செய்வதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தை ஊரில் ஹராம் ஹலால் பேணிவாழும் தங்களுடய பெற்றோருக்கும் மனைவி பிள்ளைகளுக்கும் அனுப்புகின்றனர்.
பன்றி என்பதை வாயால் சென்னாலே பாவம் என்று அதனை கட்டை கால் என்று சொல்லும் இவர்களின் பெற்றோர் இஎங்கே மாதம் முடிகிறது எங்கே மகன் பணம் அனுப்புகிறான் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தபணத்தில் ஹஜ்ஜுக்கும் இந்தபெற்றோர் போகிறார்கள்.மகன்கள் தொலைபேசியில் பேசும் போது பணம் அனுப்பச் சொல்லும் பெற்றோரே! உங்கள் மகன் உங்களுடன் பேசும் போது எங்கே நீங்கள் வேலைசெய்கிறீர்கள் என்பதை எப்பொழுதாவது கேட்டதுண்டா? அல்லது என்ன வேலை செய்கிறீர் என தெளிவாக விசாவரித்ததுண்டா?
உங்கள் மகன்களை இலங்கையில் பன்றி இறைச்சி மதுபானம் விற்கும் இடங்களில் நீங்கள் வேலைசெய்ய அனுமதிப்பீர்களா? வெளிநாடுகளில் விற்கப்படும் பன்றி இறைச்சி சாராயம் இன்னும் பல இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டவைகள் பக்கற்றுகளிலும் டின்களிலிலும் போத்தல்களிலும் அழகாக அடைக்கப்பட்டு விற்றால் அவை ஹலாலாகிவிடுமா?
இப்படியான தொழில் செய்பவர்கள் கூறும் சாட்டு என்வென்றால் வேறு வழியில்லை நிர்ப்பந்தத்தின் காரணமாகதான் இந்த தொழில் செய்கிறார்களாம்.
இந்த இளைஞர்கள் அமெரிக்கா கனடா ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு செல்ல நிச்சயமாக பலலட்ஷங்களை செலவுசெய்திருப்பார்கள். உண்ண உணவில்லாமல் உடுக்க உடையில்லாமல் இருக்க வீடில்லாத நிலையில் இந்த நாடுகளுக்கு போனவர்கள் யாரும் இருக்கமுடியாது. இவர்கள் வெளிநாடு போக செலவழித்த
இந்தபணத்தில் சொந்த நாட்டிலேயே எவ்வளவோ ஹலாலான தொழில்கள் செய்து வாழ வழியுண்டு.
இவர்கள் கூறும் இந்த நிர்ப்பந்தம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் நிர்ப்பந்தமாக ஆக முடியாது.
சோமாலியா போன்ற பட்டினியால் சாவும் மக்களுக்குதான் இந்த நிர்ப்பந்தம் பொருந்தும். இலங்கையில் பல லட்ஷங்களை செலவுசெய்து எல்லாரும் போகிறார்கள் வசதியாக வாழ்கிறார்கள். நாமும் அதுபோல் வசதியாக வாழவேண்டும் என்ற பேராசையால் இப்படி போகிறவர்கள்தான் அதிகமானவர்கள்.
மிகவும் இளம் பிராயத்து இளைஞர்கள் இது போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு போய் அங்கு சுய கட்டுப்பாடிழந்தவர்களாக கெட்டு சீரழிந்து மதுவுக்கும் விபச்சாரத்துக்கும் அடிமையாகி தடம்புரண்டுபோவது இன்னுமொரு அவலம். ஒன்றாக வேலைசெய்யும் அன்னியப் பெண்களுடன் தவறான உறவுகொண்டு அவர்கள் மூலமாக பிள்ளைகளையும் பெற்று பின்னர் சமூகத்துக்கு பயந்து குழந்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் விடுகின்றனர். அதனால் அரசாங்கம் காபிரான தாயிடமே வளர்ப்பதற்கு உதவிசெய்கிறது. அந்தக் குழந்தைகள் தகப்பனிருந்தும் அனாதைகளாக காபிர்களாக வளரும் கொடுமையும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
சில இலங்கை இளைஞர்கள் வங்கியில் பெரியளவில் கடனெடுத்து கடனட்டைகளில் கொடுக்கப்படும் அதிகப்படியான பணத்தையும் சுருட்டிக் கொண்டு நாட்டுக்கு ஓடிவிடுகின்றனர். குறுகியகாலம் இருந்துவிட்டு கோடிக்கணக்கான பணத்துடன் இந்த இளைஞர்கள் நாடுதிரும்பும் போது பெற்றோர்களும் மனைவிமார்களும் கேட்பதில்லை எப்படி இந்தபணத்தை சப்பாதித்தாய் என்று.
இலங்கையில் இருந்து சரியான தகுதிகளுடன் படிப்பதற்கென்று வரும் மாணவர்கள் மற்றவர்கள் செய்துவிட்டுபோன இந்த குழப்பங்களால் நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பவர்களாக இருக்கின்றனர்.
சில பெற்றோர் மேற்கத்திய நாட்டில் மாப்பிள்ளை என்றால் அங்கு மகள் வசதியாக வாழ்வாள் என்று கண்ணை மூடிக் கொண்டு கட்டிக் கொடுக்கின்றனர். உங்கள் மகளுக்கு பேசும் மாப்பிள்ளை என்ன தொழில் செய்கிறார்இமற்றும் அவருடய பழக்கவழக்கங்களை பற்றி விசாரித்தீர்களா? உங்கள் மகளுக்கு சரியான துணையை அமைத்துக் கொடுக்காத பாவத்தை நீங்கள் சுமக்கபோகிறீர்களா?
பெற்றோரே மனைவிமார்களே சிந்தியுங்கள் நீங்கள் உண்பதும் உங்கள் குழந்தைகள் உண்பதும் ஹலாலா?

Source : www.srilankamoors.com



0 comments:

Post a Comment