widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, December 24, 2011


இணை வைத்தல்


அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள், ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த ஒன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் ஆகும்.



இணை வைத்தல் மாபெரும் அநியாயம்

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ”என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 31:13)


மன்னிக்கப்படாத குற்றம்

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)


நிரந்தர நரகம்

அல்லாஹ்வுக்கு *இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (அல்குர்ஆன் 5:72)


இணைவைத்தலால் நல்லறங்கள் அழிந்துவிடும்


”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; (அல்குர்ஆன் 39:65)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :  அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.
அறிவிப்பவர் :  முஆத்(ர­)
நூல்: புகாரீ (2856)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.
நூல் : ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ர­)
நூல் : புகாரீ (1238)



தர்ஹா வழிபாடு



இறந்து போன நல்லடியார்களிடம் முஸ்­ம்கள் சிலர் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றனர்.



அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. ”இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்தான். ”எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். ”ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். ”அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதை யையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது ”அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார். (அல்குர்ஆன் 2:259)



இவ்வசனத்தில் மிகச் சிறந்த நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான். அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே அவரது உடல் கிடந்தது.



ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதை அவரால் அறிய இயலவில்லை. ஒரு நாள் தூங்கியதாகவே நினைக்கிறார். பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் அவரால் தனக்கு என்ன நேர்ந்தது என்பதையே அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள், எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.



மேலும் இவர் நல்லடியார் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும். ஆனால் தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் நல்லடியார்களாகத் தான் இருப்பார் கள் என்று எந்த உறுதியும் கூற முடியாது. மறுமையில் தான் அது பற்றிய விபரம் தெரியும். எனவே சமாதிகளில் வழிபாடுகள் நடத்துவோருக்கு எதிராக இந்த ஒரு வசனமே போதுமானதாகும்.



இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்



உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர் களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன் 35:22)

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! (அல்குர்ஆன் 27:80)


பிரார்த்தனைக்கு பதிலளிக்க மாட்டார்கள்



பின்வரும் வசனங்கள் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் செவியேற்க மாட்டார்கள் என்று தெளிவாக எடுத்துரைக்கிறது.


அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (அல்குர்ஆன் 35:13,14)
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (அல்குர்ஆன் 7:194)


கப்ரை கட்டுவது, பூசுவது கூடாது!



நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ர­)
நூல்: முஸ்­ம் (1610)



உயர்த்தப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்குதல்



அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்கள் :
அ­(ர­) அவர்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்த சிலையையும் அதனை அழிக்காமலும் எந்தக் கப்ரையும் அதனைத் தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே! என்று கூறினார்கள்.
நூல் : முஸ்­ம் (1609)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.
அறிவிப்பவர் : ஃபழாலா பின் உபைத் (ர­)
நூல் : அஹ்மது : (22834)



அல்லாஹ்வின் சாபம்



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யூத, கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். (ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக எடுத்துக் கொண்டனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ர­)
நூல் : புகாரீ (1330)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் சமாதிகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டார்கள். நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன்.
அறிவிப்பவர் :  ஸ்ரீன்துப் (ர­)
நூல் :  முஸ்­ம் (827)



படைப்பினங்களிலேயே மோசமானவர்கள்



அறிந்து கொள்ளுங்கள், மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டவர்கள்தான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉபைதா(ர­)
நூல் அஹ்மத் (1599)



தாயத்து, தாவிஸ் அணிதல்



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் தாயத்தைத் தொங்கவிடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர்(ர­)
நூல் : அஹ்மத் (16781)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் தாயத்தைத் தொங்கவிடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்கமாட்டான். யார் சிப்பியை தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்றமாட்டான்.
அறிவிப்பவர் உக்பா பின் ஆமிர்(ர­)
நூல் அஹ்மத் (16763)
இம்ரான் பின் ஹுஸைன்(ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர் வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் இதை கழற்றி விடு. இது உனக்கு பலஹீனத்தைத்தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெறமாட்டாய். என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (19149)


”வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ”அல்லாஹ்” என்று கூறுவார்கள். ”அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த் திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!” என்று கேட்பீராக! ”அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவ னையே சார்ந்திருப்பார்கள்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 39:38)
தாயத்து, தாவீதுகளைக் கட்டுதல், தட்டுகளில் எழுதிக் கரைத்துக் குடித்தல், வீடுகளில் கற்கண்டு போன்று வெள்ளைக்கல்லை தொங்கவிடுவது, சிறிய பாட்டில்களையும் பூசணிக்காய், உருவப்பொம்மைகள் போன்றவற்றை தொங்கவிடுவதும் இணைவைப்புக் காரியங்களாகும். இவற்றைத் தவிர்ந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.



அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் ப­யிடுதல்

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வ­யச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:173)


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தன் பெற்றோரைச் சபித்தவனை அல்லாஹ் சபித்துவிட்டான். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் ப­யிடுபவரையும் அல்லாஹ் சபித்துவிட்டான். பித்அத் செய்பவனையும் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஏற்படுத்துபவனுக்கு அடைக்கலம் அளிப்பவனையும் அல்லாஹ் சபித்துவிட்டான். அடையாளக்கல்லை மாற்றுபவனையும் அல்லாஹ் சபித்துவிட்டான்.
அறிவிப்பவர் : அலீ பின் அபீதா­ப்(ர­)
நூல் : முஸ்­ம் (3657)



நேர்ச்சை செய்தல்



யார் அல்லாஹ்வுக்கு வழிபடும் விஷயத்தில் நேர்ச்சை செய்தாரோ அவர் (அதனை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடட்டும்.  யார் அவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் நேர்ச்சை செய்தாரோ (அவர் அதை நிறைவேற்றி) நிறைவேற்றி அவனுக்கு மாறு செய்யவேண்டாம்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ர­)
நூல் :  புகாரீ (6696)



வரம்பு மீறிப் புகழ்தல்



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான்தான். அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள்,
அறிவிப்பவர் : உமர் (ர­)
நூல் : புகாரீ (3445)
இன்று முஸ்­ம்கள் பரவலாக ஓதக்கூடிய சுப்ஹான மவ்­து, முகைதீன் மவ்­து, புர்தா, சாகுல் ஹமீது மவ்­து போன்ற எந்த மவ்­தாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்களையும் மற்றவர்களையும் இறைவனுடைய அந்தஸ்திற்கு வரம்பு மீறிப் புகழ்ந்து வரிகள் அதில் நிறைந்துள்ளன.
உதாரணத்திற்கு,

நீர்தான் எங்கள் பாவங்களை அழிக்கக்கூடியவர்.

أَ
எங்களுடைய தீமைகளை மறைக்கக்கூடியவரும் நீர்தான்
இதுபோன்ற இணைவைப்பு வரிகள் மவ்­துகளில் வருகின்றன. இவற்றைச் சாதாரணமாகப் படிப்பது கூட தவறாகும்.



ஜோசியம் பார்த்தல்



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்துவிட்டான்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா(ர­)
நூல் : அஹ்மத் (9171)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பாளர் ஸஃபிய்யா
நூல் : முஸ்­ம் (4137)
பரவலாக முஸ்­ம்களுக்கு மத்தியில் பால்கிதாப் பார்த்தல் என்ற ஒரு நடைமுறை காணப்படுகிறது. இதுவும் ஜோதிடத்தில் சேர்ந்ததுதான். எனவே, பால்கிதாப் பார்ப்பதும் இணைவைப்புக் காரியமேயாகும்.



நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல்



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தொற்றுநோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. பீடை மாதமும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ர­)
நூல் : புகாரீ (5757)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சகுனம் பார்ப்பது இணைகற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊது(ர­)
நூல் : அபூதாவூத் (3411)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.
அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ர­)
நூல் : அஹ்மத் (6748)
இன்றைக்கு அதிகமான முஸ்­ம்கள் திருமணம், பயணம், மேலும் பல காரியங்களுக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கின்றனர்.
அதே போன்று விதவைப் பெண், பூனை குறுக்கே வருவதும் கெட்ட சகுனம் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இது போன்ற நம்பிக்கைகள் அனைத்துமே இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்கள் ஆகும்



சூனியம் செய்தல்



அல்லாஹ்வின் விருப்பம் இன்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது. (அல்குர்ஆன் 2:102)
சூனியம் என்ற வித்தை மூலம் பார தூரமானக் காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர்.
இருப்பதை இல்லாமல் ஆக்கவோ; இல்லாததை உருவாக்கவோ; ஒன்றை வேறொன்றாக மாற்றவோ; எந்த வித்தையும் கிடையாது.
தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். அவ்வளவு தான்! இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்து பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.



”நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தை களைப்) போட்ட போது மக்களின் கண் களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (அல்குர்ஆன் 7:116)

இவ்வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
”இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது (அல்குர்ஆன் 20:66)
இவ்வசனத்தில் பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.


மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடிய வில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர் களாக சிலர் ஆகியிருக்க முடியும்.
இதி­ருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும்.



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று நபர்கள் சொர்க்கம் புகமாட்டார்கள். 1. மது அருந்துபவன் 2. உறவுகளைத் துண்டிப்பவன் 3. சூனியத்தை உண்மை என்று கருதுபவன்.
நூல் : அஹ்மத் (18748)



அழித்துவிடும் ஏழு பாவங்களில் நபி(ஸல்) அவர்கள் சூனியத்தையும் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் : புகாரீ (2767)



அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்தல்


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருவர் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ர­)
நூல் : புகாரீ (2679)



முகஸ்துதி (பிறருக்கு காட்டுவதற்காக செய்தல்)



நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் உங்களிடம் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைத்தலைத்தான் என்று கூறினார்கள். நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள் முகஸ்துதி என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (22528)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார், பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார்.
நூல் : அஹ்மத் (16517)



காலத்தைத் திட்டுதல்



அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதில் (மூலம்) எனக்குத் துன்பம் தருகிறான். நான்தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில்தான் அதிகாரம் உள்ளது. நான்தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ர­)
நூல் : புகாரீ (4826)

0 comments:

Post a Comment