"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Tuesday, December 27, 2011
யாழ் முஸ்லிம்களை மீள்குடியேற்றுங்கள் - தவ்ஹீத் ஜமாத் கூட்டத்தில் 10 தீர்மானங்கள்
யாழ் முஸ்லிம்களை மீள்குடியேற்றுங்கள் - தவ்ஹீத் ஜமாத் கூட்டத்தில் 10 தீர்மானங்கள்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் கடந்த 24-12-2011 சனிக்கிழமை அன்று கொழும்பு வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஜமாத்தின் தேசிய தலைவர் ஆர்.எம். ரியால் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜமாத்தின் தேசிய நிர்வாகக் குழு உருப்பினரும் “அழைப்பு” மாத இதழின் துணை ஆசிரியருமான சகோதரர் ரஸ்மின் தீர்மானங்களை வாசிக்க பொதுக் குழு உறுப்பினர்கள் தக்பீர் கூறி அவற்றை ஆமோதித்தார்கள்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1.இரண்டு தசாப்த காலம் இலங்கையை ஆற்கொண்டிருந்த யுத்தம் நீங்கி இலங்கை மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சுபீட்சத்துடனும் வாழும் இந்நேரத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வை பேச்சு வார்த்தை மூலம் பெற்றுக்கொள்வதற்காக முஸ்லீம்கள் தரப்பில் தனிக் குழுவை பேச்சு வார்த்தையில் அரசு இணைத்து முஸ்லீம்களையும் பேச்சு வார்த்தையில் பங்காளர்களாக ஆக்க வேண்டும் என்று இலங்கையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியை இப் பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.
2. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் இவ்வேலையில் அதன் பரிந்துரைகள் அனைத்தும் நடை முறைக்கு கொண்டு வர வேண்டும் என்று இப் பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
3. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனைக் குழுவின் பரிந்துரைகளில் முஸ்லீம்கள் சார்பாக குறிப்பிட்டிருக்கும் விடயங்களை நடை முறைப்படுத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆளும் அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என இப் பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது.
4. இலங்கையில் ஏகத்துவப் பிரச்சாரம் மற்றும் சமுதாயப் பணிகளை செய்து வரும் தவ்ஹீத் அமைப்புக்களை தீவிர வாத அமைப்புகளாக சித்தரித்து “வஹாபிய ஆயுதக் குழுக்கள்” இயங்குகின்றன என்று பொய்ப் பிரச்சாரம் செய்து சொற்ப இலாபங்களுக்காக சமுதாயத்தை காட்டிக் கொடுக்க முனையும் அரசியல்வாதிகளையும், குறிப்பாக ஆளுனர் அலவி அவர்கள் இது தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்களையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் இப் பொதுக் குழு வண்மையாகக் கண்டிக்கிறது.
5. யுத்தம் நீங்கி சுதந்திரமான சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நிலையில் வடகிழக்கில் விடுதலைப் புலிகளினால் வடகிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை மீண்டும் அவர்களின் சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்வதற்கும் அவர்களுக்குறிய வாழ்வாதார உதவிகளை செய்து கொடுப்பதற்கும் அரசு இன்னும் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும் என்று இப்பொதுக் குழு வேண்டிக் கொள்வதுடன், குறிப்பாக யாழ்மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள் குடியேற்ற வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.
7. அனைத்து இன மக்களும் சுபீட்சத்துடன் வாழும் இவ்வேலையில் இனங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்கி சகோதரத்துவத்தை கெடுக்க நினைக்கும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அரசு அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் இப்பொதுக் குழு வேண்டிக்கொள்கிறது.
8. முஸ்லீம்கள் தங்கள் சமயக் கடமைகளான தொழுகை, நோன்பு, குர்பான், ஹஜ் போன்றவற்றை நிறை வேற்றுவதற்கு தடையாக இருப்பவர்களை அரசு எச்சரிப்பதுடன், முஸ்லீம்களின் வாழ்வுரிமையை உரிதி செய்யுமாறும் கோரிக்கை விடுக்கிறது.
8. இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் கொச்சைப் படுத்தும் விதமாகவும் பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் முகமாகவும் பத்திரிக்கை மற்றும் இணையதளங்கள் வாயிலாக விஷமக் கருத்துக்களைப் பரப்பும் இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளை தடை செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் படியும் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
9.முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் வேண்டுமென்று மூக்கை நுழைத்து மோதல்களுக்கு வழிவகுத்து நிலையான உள்நாட்டு யுத்தத்திற்கு வழி வகுக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அதன் நேச நாடுகளின் வக்கிரப் புத்தியை இச் செயற்குழு வண்மையான எதிர்கிறது.
10. ஊடகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ள இந்நாட்டில் அடிக்கடி ஊடகவியலாளர்கள் காணாமல் போவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்பில் அரசு ஆழ்ந்த அக்கறை செலுத்த வேண்டும் என்று பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment