"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Saturday, January 28, 2012
தப்லீக் இயக்கத்தினர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டமை சரியானதே!
தப்லீக் இயக்கத்தினர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டமை சரியானதே!
கடந்த சில நாட்களுக்கு முன் தப்லீக் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இலங்கையை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார்கள். இது தொடர்பாக லங்கா நவ் என்ற இணையதளம் “தப்லீக் இயக்கத்தினர் வெளியேற்றப்பட்டமை சரியானதே!” என்ற தலைப்பில் தனது ஆசிரியர் தலையங்கத்தை அமைத்துள்ளது. அந்த ஆக்கத்தை எவ்வித மாற்றமும் இன்றி நாமும் இங்கு வெளியிடுகிறோம்.
இலங்கை நாட்டின் சிறுபான்மை சமுதாயத்தில் இஸ்லாமியர்கள் முக்கியமானவர்கள். இவர்களில் தப்லீக், தவ்ஹீத், தரீக்கா, ஜமாத்தே இஸ்லாமி என்று பல பிரிவினர் இயக்க ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் ஜமாத்தே இஸ்லாமி, தரீக்கா, தப்லீக் போன்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் அமீர் என்றொருவரை ஏற்படுத்திக் கொண்டு அவர் சொல்படி கேட்டு நடப்பவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களில் ஜமாத்தே இஸ்லாமி, தரீக்கா, தப்லீக் போன்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் அமீர் என்றொருவரை ஏற்படுத்திக் கொண்டு அவர் சொல்படி கேட்டு நடப்பவர்களாக இருக்கிறார்கள்.
தவ்ஹீத் என்ற அமைப்பனரோ முஹம்மது நபிதான் எங்கள் தலைவர் அவர் பேச்சைத் தான் நாங்கள் கேட்போம் அதற்குப் பின்புதான் மற்றவர்களின் பேச்சுக்களுக்கெல்லாம் முன்னுரிமை தருவோம் என்று வாதிடுகிறார்கள்.
எது எப்படியோ இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபலமாக பேசப்படும் இரண்டு இயக்கத்தவர்களில் தப்லீக் மற்றும் தவ்ஹீத் ஆகிய இயக்கத்தவர்கள் முக்கியமானவர்கள்.
நாட்டின் இறையான்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
உலகின் எல்லா நாடுகளும் தங்கள் இறையான்மையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவணம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. கவணம் செலுத்த வேண்டும். நிலைமை இப்படியிருக்க கடந்த ஒரு சில நாட்களாக இலங்கைக்கு தப்லீக் விஷயமாக வருகை தந்த தப்லீக் இயக்க வாதிகள் சிலர் நாட்டை விட்டும் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் அப்படி வெளியேற்றப்பட்டமைக்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அரச அனுமதியின்றி மதப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதே காரணமாக சொல்லப்படுகிறது.
எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜை நாட்டுக்குள் நுழைவதாக இருந்தாலும் அவர்கள் முறையான அனுமதியை பெற்றுக் கொண்டுதான் நாட்டுக்குள் நுழைய வேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட நாடு அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது சகஜமான ஒன்றாகும்.
அந்த அடிப்படையில் தான் மேற் கூறப்பட்ட இஸ்லாமிய இயக்கத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதப் பிரச்சாரத்திற்கு தனி அனுமதி.
இனிமேல் மதப் பிரச்சாரத்திற்காக வருகை தரும் மார்க்க அறிஞர்களுக்கு மார்க்கப் பிரச்சாரத்திற்கான அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் மதம் தொடர்பான விடயங்களுக்காக நாட்டுக்குள் நுழையும் பட்சத்தில் அவர்கள் மதப் பிரச்சாரத்திற்கான முறையான அனுமதியைப் பெற்றால் மாத்திரமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாவர்கள் என்பது மேலதிக தகவல்.
வெளிநாட்டினர் வருகையே இலங்கையின் முக்கிய வருமானம்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு பின்புலமாக கூறப்படும் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருக்கிறது. ஒரு நாட்டிற்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வரும் போது அவர்கள் தங்குவதற்காக உல்லாச விடுதிகள் வசதிக்கு ஏற்றால் போல் எல்லா நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வருகை தரும் தப்லீக் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விடுதிகளுக்கு பதிலாக பள்ளிகளில் தங்குவது நாட்டின் வருமானத்துக்கு குறை ஏற்படுத்துவதாகவும்இ இதே நேரம் அவர்கள் தங்கும் காலங்களில் எங்கு தங்குகிறார்கள் என்ற தெளிவான அறிவித்தல்கள் இல்லாத காரணத்தினால் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் கேள்விகள் எழுவதும் நியாயமானதே!
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டில் உலக மட்டத்தில் நன்மதிப்பைப் பெற்ற பிரபல பேச்சாளரான தென்னிந்திய இஸ்லாமிய அறிஞர் ஜெய்னுலாப்தீன் இலங்கை அழைத்து வரப்பட்டார். தற்போது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் நாடலாவிய ரீதியில் இயங்கும் இயக்கத்தினரே இவரை அப்போது இலங்கைக்கு அழைத்து வந்தனர்.
கொழும்பு மாவனெல்லை காலி புத்தளம் காத்தான்குடி அகுரனை போன்ற இடங்களில் இவர் பகிரங்க சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவரின் சொற்பொழிவுகளுக்கு பல்லாயிரக் கணக்கில் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வரவேற்பளித்தனர்.
இலங்கை வரலாற்றில் இஸ்லாமிய இயக்கத்தினரின் நிகழ்ச்சிகளில் இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டப்பட்டது அதுவே முதல் தடவையாக இருந்தது.
இவரின் இறுதி நிகழ்ச்சி கொழும்பில் நடக்க இருந்த நேரம் பிரச்சினை உருவானதினால் நாட்டை விட்டு இவர் வெளியேற்றப்பட்டார். ஜெய்னுலாப்தீன் வெளியேற்றப்பட்டமைக்கு முழுக்க முழுக்க ஆனந்தத் தாண்டவம் ஆடியவர்கள் தப்லீக் இயக்கத்தை சேர்ந்தவர்களே.
தற்போது தங்கள் இயக்கத்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் மாத்திரம் அரசாங்கத்தை குறை காண்பதென்பது எப்படி நியாயமாகும்.
தனக்கு ஒரு கண் போனாலும் பாரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று நினைத்தால் இறுதியில் தனக்கும் அந்த நிலை வரும் என்பதை மனதில் வைக்க வேண்டும்.
எது எப்படியோ தப்லீக் இயக்கம் தொடர்பாக இப்போது ஒரு உடன்பாடு கண்டுள்ளதாக ஊடகங்கள் பேசிக் கொள்கின்றன.
ஆனால் எவ்வியக்கமாக இருந்தாலும் நாட்டின் சட்டத்தை மதித்து நடப்பதுதான் முறையானதாகும். மற்றவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன் அதனை தங்கள் வாழ்வில் தப்லீக் இயக்கத்தினர் கொண்டு வருவார்கள் என்று நாமும் நம்புவோமாக!
Source: http://www.rasminmisc.tk/
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment