"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Wednesday, March 30, 2011
இஸ்லாத்தின் பார்வையில் மூடர் தினம்!
இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களோ அறிவுப்பூர்வமான எந்தவிதக் கொள்கையோ இல்லாமல் தங்களின் மனோ இச்சைகளையே கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும் கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி, அவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, அந்த நாட்களைக் கொண்டாடுவது ஆகும்.
இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் எந்த விதமான காரணங்களைச் சொன்னாலும் முஸ்லிம்களாகிய நாம் நமக்கு வழிகாட்டியாக வந்தக் குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு, “தின”ங்களில் வெளிப்படும் தீமைகளைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும் நேர்வழி பெறவும் முயல வேண்டும்.
பொய்யை, பரிகாசத்தை, ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த “மூடர் தினம்”. மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல்(முட்டாள்) ஆக்குவதற்காகப் பொய் பேசுகின்றார்கள். பிறரைப் பரிகாசப்படுத்திப் பார்க்கும் இவ்விஷயம், மக்களுக்கு மத்தியில் சாதாரணமாகத் தெரிந்தாலும் இஸ்லாமியப் பார்வையில் பெருங்குற்றம் ஆகும்.
Sunday, March 27, 2011
நல்ல மனைவியரின் நற்குணங்கள்
பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன் முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும்.
ஒவ்வொரு பெண்களும் அவர்கள் வெளியே செல்லும் போது தலைக்குனிந்து செல்லக்கூடிய பெண்மணியாகவும் மற்றும் தலை முந்தாணைகள் சரியாக இருக்கின்றாதா என்பதனை அடிக்கடி பார்க்கக்கூடிய பெண்மணிகளாகவும்; இருக்க வேண்டும். வெளி நபர்கள் நம்மை பார்ப்பார்கள் என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்." (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
அல் குர்ஆனின் அழகிய திருநாமங்கள்
பேரற்புதம் வாய்ந்த எதற்கும் நிகரில்லாத திருக்குர்ஆனுக்கு அல்லாஹ் குர் ஆனிலேயே பல இடங்களில் பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான்.ஒவ்வொரு பெயரும் திருகுர் ஆனின் சிறப்புத்தன்மையை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.ஒரு பொருளுக்கு அதிகமான பெயர்கள் இருப்பது அதனுடைய சிறப்பையும்,உயர்வையும் காட்டக்கூடியது என்பது திண்ணம்.
1. அல் கிதாப் - வேதநூல்
2. அல் பயான் - தெளிவுரை
3. அல் புர்ஃகான் - நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிப்பது
4. அல் புர்ஹான் - தெளிவான அத்தாட்சி
5. அத் திக்ரு - நினைவுறுத்துவது
6. அந் நூர் - ஒளி
7. அல் ஹக்கு - சத்தியமானது
8. அல் கரீம் - கண்ணியத்திற்குறியது
9. அல் முபீன் - தெளிவுபடுத்தக்கூடியது
10. அல் ஹகீம் - ஞானம் நிறைந்தது
11. அல் அஜீஸ் - மதிப்பிற்குறியது
12.அல் ஹுதா - நேர்வழி
13. அர் ரஹ்மத் - அருள்
14. அஷ் ஷிபா - நிவாரணமளிப்பது
15. அல் மவ்இளத் - நல்லுபதேசம்
16. அல் ஹிக்மத் - ஞானம்
17. அல் முஹைமின் - பாதுகாவலாக இருப்பது
18. அல் கய்யிம் - உறுதியானது
19. அந் நிஃமத் - அருட்கொடை
20. அர் ரூஹ் - உயிருள்ளது
21. அத் தன்ஜீல் - இறக்கிவைக்கப்பட்டது
22. அல் ஹுக்மு - சட்டம்
23. அல் முபாரக் - புனிதமாக்கப்பட்டது
24. அல் முஸத்திக் - உண்மையாக்கி வைக்கக்கூடியது
25. அல் பஷீர் - நற்செய்தி கூறுவது
26. அந் நதீர் - அச்சுறுத்தி எச்சரிப்பது.
27. அல் முதஹ்ஹரா - பரிசுத்தமாக்கப்பட்டது
28. அல் முகர்ரமா - சங்கைக்குறியது
29. அல் மஜீத் - மேன்மைக்குறியது
30. அல் அரபிய்யு - அரபி மொழியுடையது
31. அல் மர்ஃபூஆ - உயர்வானது
32. அல் அஜப் - ஆச்சரியமானது
33. அல் பஸாயிர் - ஆதாரமுள்ளது
34. அத் திக்ரா - நினவூட்டும் உபதேசம்
35. ஹப்லுல்லாஹ் - அல்லாஹ்வின் கயிறு
தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்!
மாதவிடாய் நாட்களைத்தவிர்து மற்ற நாட்கள் அனைத்துமே கணவன் மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபட ஏற்ற நாட்கள்தான். இருந்தாலும்சில நாட்களில் அந்த இல்லற (உடல்) உறவை தவிர்த்திருப்பது ஆரோக்கியம். அவை எந்தெந்த நாட்கள்? இதோ உங்களுக்காக!
o கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.
o பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை!
காஃபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது.’மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.’ (16:125)
ஆனால் நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீதுபழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு.
மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.]
அழகில்லை.... இது அழகில்லை!
1. ஏழைகளுக்கு பெருமை அழகில்லை
2. உலமாக்களுக்கு பேராசை அழகில்லை
3. அரசர்களுக்கு அவசரம் அழகில்லை
4. சீமான்களுக்கு கஞ்சத்தனம் அழகில்லை
5. மேதைகளுக்கு மாண்பற்ற செயல் அழகில்லை
6. உயர் வம்சத்தினருக்கு வஞ்சிப்பது அழகில்லை
7. கணவனுக்கு சந்தேகம் அழகில்லை.
8. மாணவர்களுக்கு மறதி அழகில்லை.
9. மனைவிகளுக்கு மறைத்தல் அழகில்லை
10. வியாபாரிகளுக்கு எடைகுறைப்பு அழகில்லை
11. யாசகர்களுக்கு ஆணவம் அழகில்லை
12. ஆசிரியர்களுக்கு பாரபட்சம் அழகில்லை.
13. உயர் அதிகாரிகளுக்கு மெத்தனம் அழகில்லை
14. காவலாளிக்கு தூக்கம் அழகில்லை.
15. நண்பர்களுக்கு எதிர்பார்ப்பு அழகில்லை.
16. போட்டியாளருக்கு பொறுமையின்மை அழகில்லை.
17. பெரியவர்களுக்கு புலம்பல் அழகில்லை.
18. சிறியவர்களுக்கு அகம்பாவம் அழகில்லை.
19. மருத்துவர்களுக்கு மனிதநேயமின்மை அழகில்லை.
20. மனிதனுக்கு சகிப்பின்மை அழகில்லை.
அல்குர்ஆன் எச்சரிக்கும் மன இச்சைகள்!
2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) "நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி" என்று சொல்லும். அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடையஇச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான். ஆனால் தங்கள் (கீழ்தரமான)இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
வாழ்வைச் சீரழிக்கும் வரதட்சணை
[ அறியாமைக் கால அரேபியர்களாவது பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்துவயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும்இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்.
"வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, பள்ளிவாசலுக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும்தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.
இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானேபள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.
"ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி" இது முதுமொழி. இப்போது "ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி" இது புதுமொழி.]
Saturday, March 26, 2011
உலகில் மனிதன் புரியும் பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே!
Jafar Ali
"ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் தூதர்களை அனுப்பி இருக்கிறோம்। (அத்தூதர்கள் அச்சமுகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (ஷைத்தான்களாகிய) தாகூத்துகளிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்." (அந்நஹ்ல்: 36)
"உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம்முடைய தூதர்களிடம் அர்ரஹ்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா? என்று கேட்பீராக!." (அல்ஜுக்ருஃப்: 45)
"எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனைக் கொத்திக்கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துச் சென்றதைப் போன்றோ இருக்கின்றான்." (அல்ஹஜ்: 31)
"நிச்சயமாக அல்லாஹ் இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்." (அந்நிஸா: 48)
"மனிதர்களே! நீங்கள் உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம்.’ (அல்பகரா: 21)
"மனிதர்களே! நீங்கள் உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம்.’ (அல்பகரா: 21)
Friday, March 25, 2011
மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை
மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை (டார்வின் கோட்பாடு தகர்க்கப்பட்டுள்ளது)
CHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான்’ எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. ‘மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்’; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
திருக்குர்ஆன் கூறும் அச்சமும் துக்கமும் இல்லாதவர்கள் இவர்களே!
o ''(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 10:62)
o ''எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 46:13)
o ''யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." (அல்குர்ஆன் 2:38)
o ''எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 7:35)
o ''நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 6:48)
o ''முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 5:69)
o ''எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 2:112)
o ''யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 2:274)
திருக்குர்ஆன் கூறும் அச்சமும் துக்கமும் இல்லாதவர்கள் இவர்களே!
o ''(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 10:62)
o ''எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 46:13)
o ''யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." (அல்குர்ஆன் 2:38)
o ''எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 7:35)
o ''நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 6:48)
o ''முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 5:69)
o ''எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 2:112)
o ''யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 2:274)
சிந்திக்கத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம்
நெல்லை இப்னு குலாம்ரசூல்
உலகில் வாழும் மனிதர்கள் பல்வேறு மதங்களை மார்க்கங்களைப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் பின்பற்றும் அம்மதங்களின் அடிப்படை வேதங்களாகவோ புராணங்களாகவோ மனிதர்கள் சிலரின் வழிகாட்டுதல்களின் தொகுப்பாகவோ எல்லாமே இயற்கையாகவே நிகழ்ந்து இயற்கையின் நியதிப் படி முடிவுறுகின்றன என்ற சித்தாந்தத்தைக் கொண்டதாகவோ இருக்கின்றன.
நம்மைப் படைத்த இறைவன் ஒருவன்தான் என்பதில் பல்வேறு மதத்தார் ஒரே கருத்தில் இருந்தாலும் கூட அவர்கள் சார்ந்திருக்கும் வேதங்கள் புராணங்கள் இக்கருத்தை நன்றாக வலியுறுத்தியும் கூட வழிநடாத்திச் செல்லும் மதகுருமார்கள் பண்டிதர்கள் முன்னோடிகள் மார்க்க அறிஞர்கள் செய்யும் போதனைகளால் அம்மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய மக்கள் அவர்கள் சார்ந்துள்ள சமயங்களின் அடிப்படையையே மறந்து புதிய மாற்றமான புகுத்தப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.
இதனால் ஓரிறைக் கொள்கை மறைந்து ஒன்றுக்கு மேற்பட்ட பல்கிப் பெருகிய பல தெய்வங்களின் வருகையும் அத்தெய்வங்களின் கற்பனை செய்யப்பட்ட உருவகங்களுக்கு பூஜை புனஸ்காரங்கள் வழிபாடுகள் என்ற பெயரால் புனையப்பட்டவைகள் நடைமுறையில் இருப்பதையும் நாம் காண்கிறோம்.
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
Thursday, March 24, 2011
கருத்து முரண்பாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும்
அஷ்ஷைக்: எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தனமானது, அவனது அருளும், சாந்தியும் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழி நடந்த ஸஹாபாக்கள், தாபீயீன்கள் தபவுத்தாபியீன்கள் அனைவர் மீதும் நிலையான சாந்தியும், சமாதானமும் நிலைக்கட்டுமாக!
சீரமைப்பின் அவசியம்
முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் மார்க்கம் தொடர்பான முரண்பாடுகளை இனம் கண்டு அவற்றை காத்திரமான வழிமுறைகள் மூலம் சீரமைப்பது தகுதியும், அறிவும் உள்ள இஸ்லாமிய அழைப்பாளர்கள் மீதுள்ள கடமையாகும்.
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
Next>
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
Next>
பண்பாடுகளில் மிளிரும் இஸ்லாம்
ஒரு நாள் மதிய வேளை. நானும் எனது குடும்பத்தினரும் சாலையில் வாகனத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். கடுமையான வெயிலின் காரணமாக, எதிரே தென்பட்ட ஹோட்டலின் முகப்பு பகுதியில் நிழலுக்காக ஒதுங்கினோம். சாலையில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. ஹோட்டலில் ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை.
ஹோட்டலுக்கு முன்பாக சாலையில் அரபி ஒருவர் வாடகை வாகனத்தில் அமர்ந்திருந்தார். டிப்டாப்பான உடை தரித்திருந்த அவருடைய முகத்தில் கடுமையான எரிச்சல் தென்பட்டது. காரணம் அவருடைய வாகனம் செல்ல முடியாதவாறு முன்னால் வேறொரு வாகனம் நின்றுக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அவ்வாகனத்தின் உரிமையாளர் ஹோட்டலிலிருந்து தனது மூட்டைமுடிச்சுகளுடன் சாகவாசமாக வெளியே வந்தார். அவரது குழந்தைகளோ அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. நேரம் செல்லச் செல்ல வாடகை வாகனத்திலிருந்த அரபி பொறுமையிழந்து வாகனத்தை எடுக்குமாறு ஹாரனை அழுத்தி ஒலி எழுப்பினார். உடனே, அவருடன் சண்டை போட துணிந்துவிட்டார் முன்னால் நிறுத்தியிருந்த வாகனத்தின் சொந்தக்காரரான அரபி. இவர்களின் சண்டையை வேடிக்கைப் பார்க்க பலரும் அங்கே கூடிவிட்டனர்.
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
இந்த நாவிலிருந்து உண்மையைத்தவிர வேறு எதுவும் வராது’
அல்லாஹ் மனிதகுலத்திற்கு வழங்கிய மிகச்சிறந்த அருட்கொடைகளில் ஒன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தனது தூதராக அனுப்பியது. இதை தனது திருமறையிலேயே அல்லாஹ் குறிப்பிட்டுக்காட்டுகிறான்.
‘நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.’ (அல்குர்ஆன்: 3:164)
< Prev Next >
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!
[ இன்று உலகில் இறைவனை நம்பாத நாத்தீக மக்களும் வாழ்கிறார்கள். இந்த நாத்தீக மனிதர்களில் சிலர், இறைவனால் அனுப்பப்பட்ட இறுதி நெறி நூல் உயிருடன் இருப்பதை அறிந்துள்ளார்கள். ஆனால் தமது பெற்றோர்களின் கற்பனைகள் நிறைந்த மதங்களை நம்பாது இருக்கின்றனர். அதே நிலை இந்த இறுதி நெறிநூலிலும் இருக்கும் என ஊகித்து அவர்கள் ஒளிமிக்க அல்குர்ஆன் இருப்பதை அறிந்தும் அதை பார்க்காது விட்டு விடுகின்றனர்.
தமது மூதாதையர்களின் ஒரு பிரிவினரே தம்மைச் சூழவாழும் முஸ்ஸிம்கள் என தப்பாக நம்புகின்றனர். எனினும் அவர்கள் தமது பெற்றோரின் பிழையான சமூக கட்டமைப்பில் இருந்து உண்மையின் பக்கம், இறுதி உண்மை நெறிநூல் அல்குர்ஆனின் பக்கம் வர தயங்குகிறார்கள். எனவே இந்த நாத்தீக மக்களும், அவர்களின் தலைவர்களும் ரோமாபுரிஹெர்குலிஸ் மன்னனைப் போல் சமுதாயத்திற்கு பயந்தவர்களே.
இந்த நாத்தீக மக்களும் தம்மை தமது பெற்றோரின் மடமை நிறைந்த மூடக் கொள்கையிலிருந்து நீங்கிய பகுத்தறிவாளர் எனக் கூறிக் கொண்டாலும் இவர்களும் மறைமுகமாக தமது பெற்றோரின் மூட நம்பிக்கைகளைத் துறந்து நேர்வழியின் பக்கம் வரத் தயங்கும் அடிமைகள் எனலாம். இதற்கு ஆதாரமாகத் தமது பெற்றோரின் மதங்களின் மூட நம்பிக்கைகளை விமர்சித்து வரும் திராவிட பகுத்தறிவாளர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிச் சிறப்பாக அறிந்திருந்தாலும், தமது பெற்றோரின் சமூகத்திலிருந்து சத்தியத்தின் பக்கம் வரத் தயங்குகின்றனர்.]
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
Next >
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
Next >
Wednesday, March 23, 2011
சவுதி அரேபியாவில் அரசியல் கட்சி உதயம் – அரசாட்சிக்கு வேட்டு வைக்கும் புதிய முயற்சியா?
மத்திய
கிழக்கின் மையமாகவும், முஸ்லீம்களின் முக்கிய கேந்திர நிலையமாகவும்
செயல்படும் ஒரு நாடாக சவுதி அரேபிய ராச்சியம் செயல்படுகிறது.
முஸ்லீம்களின்
முக்கிய வணக்கத் தளங்களான மக்கா, மதினா போன்ற சிறப்பு மிக நகரங்களை
உள்ளடக்கிய நாடாக இருக்கும் சவுதி பல காலமாக மன்னர்களினால் ஆட்சி
செய்யப்படுகிறது.
சவுதியின்
தற்போதைய மன்னர் அப்துல்லாஹ்வின் பாட்டனான அப்துல்லாஹ் பின் சுஊத்
அவா்களின் பெயரின் அமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த சவுதி
அரேபியா.
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
ஃபர்ளுத் தொழுகைக்குப் பிறகு கூட்டு ''துஆ'' நபிவழியா?
[ பெரும்பாலும் நமது நாட்டில் தொழுகைக்குப்பின் கூட்டு துஆ என்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அதனாலேயே அது நம்மிடம் பழக்கமாகிப்போனது.
இதில் பெரும் வினோதம் என்னவெனில் கூட்டு ''துஆ'' என்பது நபி வழி அல்ல என்பது மக்களுக்கு தெளிவாக விளங்கிவிட்ட இக்காலத்தில் ''இல்லையில்லை கூட்டு ''துஆ''விற்கு நபிவழியில் ஆதாரம் இருக்கிறது...'' என்று ஆலிம்களில் சிலர் சுற்றிவளைத்து விளக்கம் அளிப்பது அவர்களின் நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்குகிறது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
Tuesday, March 22, 2011
kl;/Vwht+H Al Azhar Vid tpj;jpahya khztpfs; ,k;Kiw GCE(O/L) guPl;irapy;
100tPj rpj;jp
fle;j 2010k; Mz;L brk;gH khjk; eilngw;w GCE(O/L) guPl;irapy; 35 khztpfs; Njhw;wp 35 khztpfSk; rpj;jpaile;jJld; 35 khztpfSk; GCE caHju fy;tp ngWtjw;F jFjp ngw;Ws;sdH. fle;j 2009k; Mz;L GCE(O/L) guPl;irapy; 96.42 tPjj;jpid ngw;W khfhz kl;lj;jpy; 3k; ,lj;ijAk; khtl;l kl;lj;jpy; 1k; ,lj;jpidAk; ngw;Wf;nfhz;lik Fwpg;gplj;jf;fjhFk;.
fle;j 2010k; Mz;L brk;gH khjk; eilngw;w GCE(O/L) guPl;irapy; 35 khztpfs; Njhw;wp 35 khztpfSk; rpj;jpaile;jJld; 35 khztpfSk; GCE caHju fy;tp ngWtjw;F jFjp ngw;Ws;sdH. fle;j 2009k; Mz;L GCE(O/L) guPl;irapy; 96.42 tPjj;jpid ngw;W khfhz kl;lj;jpy; 3k; ,lj;ijAk; khtl;l kl;lj;jpy; 1k; ,lj;jpidAk; ngw;Wf;nfhz;lik Fwpg;gplj;jf;fjhFk;.
fzpj> tpQ;Qhdk;>
jkpo;nkhop> ,];yhk; Gtpapay;> Rfhjhuk;> tHj;jfk;> Fbapay; Mfpa
ghlq;fspy; 100 tPj rpj;jpiaAk; Mq;fpyg; ghlj;jpy; 65.1 tPj rpj;jpiaAk;
ngw;Ws;sJ. ,NjNtis 3 khztpfs; vy;yhg;ghlq;fspYk; 9A
rpj;jiaAk; ngw;Ws;sdH. 2 khztpfs; 8A
rpj;jiaAk;> NkYk; ,UtH 7A
rpj;jiaAk; ngw;Ws;sdH vd;gJ
Fwpg;gplj;jf;fjhFk;.
1974k; Mz;L Muk;gpf;fg;gl;l
,g;ghlrhiy kl;lf;fsg;G khtl;lj;jpy; tsHr;rpaile;J tUfpd;w ghlrhiyahFk;. ,jd;
tsHr;rp Nghf;fpy; Kjd; Kjyhf 2004;k; Mz;L GCE(O/L) guPl;irf;F Njhw;wpa midj;J khztHfSk; caHju jFjp ngw;wdH.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது கல்வீச்சு
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது.
கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கீ மூன் பங்குபற்றியிருந்தார்.
அங்கிருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்ல அவர் வெளியே வந்தபோது,
லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப்படைகளின்
தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களால் பான் கீ மூன் மீது
கற்கள் வீசப்பட்டன.
எனினும் இதனால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
அத்துடன் ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு எதிரனா கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
ஆனால் அவர் மீண்டும் அரபு லீக் தலைமையக கட்டிடத்திற்கு உள்ளே செல்ல
நிர்பந்திக்கப்பட்டார். பின்னர் மற்றொரு வாசல் வழியாக கார் மூலம் அவர்
வெளியேறினார்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக பாரிய
ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவரை பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய
வைத்ததில் தஹ்ரிர் சதுக்கம் பெயர் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
Monday, March 21, 2011
மட். ஏறாவூர் புகையிரத நிலையத்துக்கு அருகில் திடிரென நிலத்தில் இருந்து வந்த தண்ணீர்
மட்டக்களப்பு
ஏறாவூர் பகுதியில் உள்ள புகையிரத நிலையத்துக்கு அருகில் நீர்க்குமிழிகள்
தோன்றுவது தொடர்பில் யாரும் அச்சம்கொள்ளத் தேவையில்லையென மட்டக்களப்பு
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று
முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏறாவூர் புகையிரத நிலையம் அதனை அண்டிய
பகுதிகளில் உள்ள நிலங்களில் நீர் வெளியேறி வருவது தொடர்பில் மட்டக்களப்பு
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரி ஏ.எம்.எம்.ஹசீரை
தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சந்திரன்
பூமியை நெருங்கிவந்தபோது வாயு மண்டலத்தில் ஏற்பட்ட அமுக்க நிலைமை காரணமாக
நிலத்தின் கீழ் உள்ள நீர் மட்டத்தில் ஏற்பட்ட உயர்வு காரணமாகவே இந்த
நிலையேற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏறாவூர்
புகையிரத நிலையம் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள நிலங்களில் நீர்
வெளியேறிவருவதுடன் அப்பகுதியில் உள்ள கிணறுகளின் நீர் மட்டமும் உயர்ந்து
வருகின்றது.
கரை தாண்டும் கணவனும் கறை படியும் மனைவியும்!
[ அடிப்படையான நிபந்ததை என்னவென்றால் திருமணமானவர் வெளிநாடு சென்று
பொருளாதரத்தை திரட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக தன்னுடைய மனைவியையும் அங்கு
அழைத்துச் செல்லவேண்டும். அவ்வாறு அழைத்து செல்ல முடியாத பட்சத்தில் அங்கு சென்று சம்பாதிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கணவன் மனைவியிடத்தில் கோபப்படும் போது மனைவியுடன்
கூடுவதில்லை என்று சத்தியம் செய்வதற்கு ''ஈளா'' என்று கூறப்படும். ஆனால்
இஸ்லாம் இந்த ஈளாவுக்கும் வழங்கக்கூடிய வரையரை நான்கு மாதங்கள் தான்.
மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் வணக்க
வழிபாடுகளில் ஈடுபடுவதை இஸ்லாம் கண்டிக்கிறது என்றால் பொருளாதாரம்
திரட்டுவதற்கு தன்னுடைய மனைவியைப்பிரிந்து வெளிநாடு செல்வதை ஒருபோதும்
இஸ்லாம் அனுமதிக்காது.
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
''நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது!''
பத்ர் சிங்கங்களுக்கு நாடியதை செய்துகொள்ள அருளாளன் தந்த அனுமதி!
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அலீ இப்னு அபீ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்;
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூ மர்ஸத் (ம்னாஸ் இப்னு ஹுஸைன்) அவர்களையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில் இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள்.
Sunday, March 20, 2011
இஸ்லாத்தைப் பற்றி இந்துக்களால் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்
டாக்டர் ஜாகிர் நாயக்
(நிறுவனர், இஸ்லாமிய ஆய்வு மையம், மும்பை)
(நிறுவனர், இஸ்லாமிய ஆய்வு மையம், மும்பை)
கேள்வி எண்: 1 இந்து மதத்தில் சிலை வணக்கம் இல்லை என்பதை இந்து பண்டிதர்களும் இந்து அறிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மனிதன் வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில் அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் பக்குவம் வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை. சரியா?
பதில்: மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்: மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் உள்ளவர்கள் இஸ்லாமியர்களே! மனிதன் கடவுளை வணங்கத் துவங்கும் ஆரம்ப காலகட்டங்களில் அவனது மனதை ஒருமைப்படுத்த சிலை அவசியமாகிறது. மனித மனம் ஒருமைப்படும் நிலை வந்த பிறகு அந்த சிலை அவசியமில்லை என்பது சரியானது எனில், மனதை ஒருமை படுத்துவதில் உச்சநிலையில் உள்ளவர்கள் இஸ்லாமியர்கள்தான். ஏனெனில் இஸ்லாமியர்களாகிய நாங்கள் அல்லாஹ்வை வணங்கும்போது, மனதை ஒருமைப்படுத்த எங்களுக்கு சிலை எதுவும் தேவையில்லை என்பதை நான் உங்களுக்கு இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
Subscribe to:
Posts (Atom)