widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, November 9, 2012

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு!


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிரவேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு!
  யூஸூஃப் கர்ளாவி 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் அறியாமையின் காரணமாகப் பிடிவாதம் பிடித்தால் அவர் வழிகேடர்.
''ஒருவரைப் பின்பற்றிக்கொண்டு அவர் சொல்வது மட்டுமே சரியானது, மாறான அனைத்தும் தவறானது'' என்று பிடிவாதமாகப் பின்பற்றுவதை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிடித்தமான, வலிமையான ஆதாரங்களைக் கொண்ட உண்மையைப் பின்பற்றுவதுதான் சரியானது.
''சுன்னாவின் அடிப்படையில் பார்த்தால் ஒரு அறிஞரைப் பின்பற்றுவது கடமை, மற்றொரு அறிஞரைப் பின்பற்றுவது கூடாது'' என்று பேசிட யாருக்கும் உரிமையில்லை. சுன்னாவில் வந்துள்ள அனைத்தும் தாராளமாகப் பின்பற்ற வேண்டியவை.
''இந்த இமாம்களில் யாரேனும் ஒருவரைத்தான் பின்பற்ற வேண்டும் இது கடமை, இன்னொருவரைப் பின்பற்றக்கூடாது'' எனும் கருத்தை கொள்கையாகக் கொண்டிருப்பவன் காஃபிராகி விட்டான். அவன் தவ்பாச் செய்திட வேண்டும். தவ்பா செய்திட மறுத்தால் அவன் கொல்லப்பட வேண்டும். இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி]
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு!
அறிஞர் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
ஒருவர் சில பிரச்சனைகளில் தனது மத்ஹபின் படி செயல்படவில்லை. ஒரு ஹனஃபீ ருகூவுக்கும் முன்னரும் பின்னரும் கைகளை உயர்த்தினார். ஒரு மத்ஹபில் நிலைத்திருக்காத தடுமாற்றமுள்ளவர் என்று அவரின் நண்பர்கள் கண்டிக்கின்றனரே! உங்கள் கருத்து என்ன?
சில சட்டப்பிரச்சனைகளில் தன்னுடைய மத்ஹபு அல்லாத மற்றொரு மத்ஹபு சரியானது என்று கருதி பின்பற்றினால் சரிதான். இதற்காக அவரது நடுநிலைத்தன்மை, மார்க்கப்பற்றை குறைகூற முடியாது. இதில் மாறுபட்ட கருத்து ஏதுமில்லை. உண்மையில் இது மிக ஏற்றமானது.
இமாம்களான அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி, மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷாஃபீஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி, அஹ்மது ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஆகியோரில் ஒருவரைப் பின்பற்றிக்கொண்டு அவர் சொல்வது மட்டுமே சரியானது, மாறான அனைத்தும் தவறானது என்று பிடிவாதமாகப் பின்பற்றுவதை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிடித்தமான, வலிமையான ஆதாரங்களைக் கொண்ட உண்மையைப் பின்பற்றுவதுதான் சரியானது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் அறியாமையின் காரணமாகப் பிடிவாதம் பிடித்தால் அவர் வழிகேடர்.
''இந்த இமாம்களில் யாரேனும் ஒருவரைத்தான் பின்பற்ற வேண்டும் இது கடமை, இன்னொருவரைப் பின்பற்றக்கூடாது'' எனும் கருத்தை கொள்கையாகக் கொண்டிருப்பவன் காஃபிராகி விட்டான். அவன் தவ்பாச் செய்திட வேண்டும். தவ்பா செய்திட மறுத்தால் அவன் கொல்லப்பட வேண்டும்.
"ஸைது - அம்ரு" என்று எந்த மனிதரின் பெயரையும் குறிப்பிட்டுக் கூறாமல் யாரேனும் ஓர் இமாமைப் பின்பற்றுவது பொது மனிதருக்கு (ஆமிக்கு) வாஜிபாகும். சுன்னாவுக்கு தோதுவாக எந்த இமாமின் கருத்து இருக்கிறது என்று தனக்குத் தோன்றுகிறதோ அதைப் பின்பற்றுபவரே சிறந்தவர். மற்றவர்களைவிட சிறந்த நிலையில் இருப்பவர்.
இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் பிற இமாம்களும் கூட முதலில் ஒரு கருத்தை கூறிவிட்டு அதற்கு எதிராக ஆதாரம் தெளிவாகக் கிடைத்துவிட்டால் தமது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளனர்.
''சுன்னாவின் அடிப்படையில் பார்த்தால் ஒரு அறிஞரைப் பின்பற்றுவது கடமை, மற்றொரு அறிஞரைப் பின்பற்றுவது கூடாது'' என்று பேசிட யாருக்கும் உரிமையில்லை. சுன்னாவில் வந்துள்ள அனைத்தும் தாராளமாகப் பின்பற்ற வேண்டியவை. இகாமத்தின் வாசகங்களை ஒருதடவை கூறியவரும், இருதடவை கூறியவரும் அழகிய சுன்னாவை கடைப்பிடித்திவிட்டனர். ஒன்றுதான் சரியானது, கடமையானது என்பவர் வழிகேடர். தவறிழைப்பவர்.
- நூல்: ''நாம் பிரிந்துவிட வேண்டாம்'' - யூஸூஃப் கர்ளாவி

0 comments:

Post a Comment