widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, November 9, 2012

மார்க்க அறிஞர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவது வழிகேடே!


 பீ.ஜெய்னுல் ஆபிதீன்   

குர்ஆனில் கூறப்படாத ஒன்றை அல்லது கூறப்பட்டதற்கு மாற்றமான ஒன்றை குர்ஆனில் தடுக்கப்பட்ட ஒன்றை அறிஞர் என்று மதிக்கப்படும் நபர் கூறினால் அந்த அறிஞரின் திறமையைத்தான் கருத்தில் கொள்கின்றனர். குர்ஆனின் கூற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த அறிஞரின் கூற்றை எடுத்து நடக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
மத்ஹபுகளில் கூறப்படுகின்ற எத்தனையோ சட்டங்கள் குர்ஆனுடன் மோதுகின்றன. ஆயினும் மத்ஹபின் முடிவில் சிலருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது. எத்தனையோ மவ்லவிமார்களின் போதனைகள் குர்ஆனுடன் நேரடியாக மோதுகின்றன. அதை சுட்டிக்காட்டிய பின்னர் கூட குர்ஆனை அலட்சியம் செய்து மவ்லவிகளின் முடிவை செயல்படுத்துவோர் ஏராளம். இப்படி மார்க்க அறிஞர்கள் என்று சொல்பவர்களை கண்மூடி பின்பற்றலாமா? என்றால் . அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் கடுமையாக கண்டித்துள்ளதைப் பார்க்கலாம் .
திருக்குர்ஆனையும் நபிவழியையும் புறம் தள்ளிவிட்டு மார்க்க அறிஞர்கள் பெரியோர்கள் முன்னோர்கள் ஆகியோரைப் பின்பற்றுவதை திருக்குர்ஆன் பல இடங்களில் வன்மையாகக் கண்டிக்கிறது. அல் குர்அன் (33: 66,67) (9: 31)]
இஸ்லாமிய சமுதாயம் பல்வேறு பிரிவுகளாக பிரிவு பட்டுக் கிடப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. என்றாலும் அவற்றுள் முக்கியமான காரணம் மூலாதரங்களாக எவற்றை ஏற்பது என்பதில் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் மூலாதரங்களில் ஒத்த கருத்தை எட்டிய சமுதாயம் ஒன்று படுவதற்கு முயன்றால் எளிதில் ஒன்று பட்டு விடலாம் .
பெருமான்மை மக்கள் எப்படி நடக்கிறார்கள்? என்று பார்த்து அதையே ஆதாரமாகக் கொண்டு செயல்படுபவர்கள் ஒரு அறிஞரின் மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்வது அனைத்தையும் ஆதாரமாகக் கொண்டு செயல்படுபவர்கள் நீண்ட காலமாக ஒரு நடைமுறை அமுலிஇல் இருந்தால் அதையே ஆதாரமாகக் கொண்டு பின்தொடர்பவர்கள் ஏதாவது அரபு நூஇலில் எழுதப்பட்டு விட்டால் போதும் என்று அதையே ஆதாரமாகக் கருதக்கூடியவர்கள் இந்த சமுதாயத்தில் உள்ளனர் . இதன் காரணமாக கொள்கையிலே வேறுபாடு கோட்பாடுகளில் வேறுபாடு வணக்க வழிகளில் வேறுபாடு .
மூலாதாரங்கள் எவை என்பதில் ஒத்த கருத்தை எட்டிவிட்டால் கொள்கையில் கோட்பாட்டில் வணக்கமுறையில் சமுதாயம் ஒத்த கருத்தை எட்டமுடியும் .
முஸ்இலிம் சமுதாயம் பல விசஸ்ங்களில் தங்களுக்கிடையே சர்ச்சை செய்துகொண்டாலும் அனைவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளனர் . இஸ்லாத்தை ஒருவர் ஏற்க வேண்டுமாயின் அவர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை , முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதை உறுதியாக நம்பி மொழிய வேண்டும் . இதன் மூலம் அவர் இஸ்லாத்தில் இணைந்து விடுகிறார்.
அனைவரும் ஒப்புக்கொண்ட இந்த அடிப்படைக் கொள்கை இஸ்லாத்தில் மூலாதாரங்கள் இரண்டே இரண்டுதான் என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றது .
கடவுளாக அல்லாஹ்வை ஏற்றதன் மூலம் அவனது கட்டளைகள் அனைத்துக்கும் கட்டுப்படுவதாக ஒருவன் உறுதியளிக்கின்றான் . அல்லாஹ்வின் கட்டளைகள் யாவும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால் குர்ஆனுடைய கட்டளைகள் அனைத்தையும் மூலாதாரமாக அவன் நம்புகிறான் . அல்லாஹ்வை நம்புவதாகக் கூறிவிட்டு அவன் கட்டளைகளை நம்ப மறுப்பது அல்லாஹ்வையும் நிராகரிப்பதாகும் .
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்று உறுதிமொழி எடுப்பதின் மூலம் நபியவர்களைத் தனது வழிகாட்டியாக ஒருவன் ஒப்புக்கொள்கிறான் . அவர்கள் மனிதராகப் பிறந்து வாழ்ந்து மரணித்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் தூதராக வந்தவர்கள் . அவர்கள் நமக்குரிய ஒவ்வொரு செய்தியையும் இறைவனின் அனுமதியுடனும் இறைவனின் புறத்திஇருந்தும் வந்தது என்பதையும் ஒப்புக்கொள்கின்றான்.
அவர்களின் சொல் , செயல் , அவர்கள் அங்கீகரித்தவை ஆகிய அனைத்தையும் தனது வாழ்க்கைக்கு முன்னுதாரணமாகவும் இதன் மூலம் ஒருவன் ஒப்புக்கொள்கிறான்.
இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை முழக்கமாக அனைவரும் ஒப்புக்கொள்கின்ற திருக்கஇலிமா இரண்டு மூலாதாரங்களைத் தவிர வேறில்லை என்பதை பறைசாற்றுகின்றது. எந்த அறிஞரின் கூற்றையோ எந்த சமுதாயத்தின் முடிவையோ ஆதாரங்களாக் கொள்ளத் தேவையில்லை என்பதை தெளிவாகக் கூறுகின்றது . ஆனாலும் மக்களில் ஆழமாக சிந்திக்கத் தெரியாதவர்களும் இருப்பார்கள் என்பதால் மிகத் தெளிவாக திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகின்றான் .
அல்லாஹ்வின் மீதும் இத்தூதரின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம் . மேலும் (அவர்களுக்குக்) கட்டுப்பட்டு நடக்கிறோம் என்று கூறுகின்றனர் . பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணித்து விடுகின்றனர். இவர்கள் முஃமின்கள் (நம்பிக்கை கொண்டோர்) அல்லர். (அல்குர்ஆன் 24 : 27)
மேலும் தம்மிடையே தீர்ப்பு பெறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கனித்து விடுகின்றனர். (அல்குர்ஆன் 24 : 28)
அவர்களது உள்ளங்களில் நோய் இருக்கிறதா? அல்லது அவர்கள் சந்தேகப்படுகின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனது தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? (அவ்வாறு) அல்ல, இவர்கள்தான் அநியாயக்காரர்கள். (அல்குர்ஆன் = 24 : 50) (24 : 51) (24 : 52)
அல்லாஹ்வின் கட்டளைக்கும் அவனது தூதரின் கட்டளைக்கும் கட்டுப்படுவதுதான் முஃமின்களின் பதிலாக இருக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்படாதவர்கள் முஃமின்கள் அல்ல, அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் சந்தேகிப்பவர்கள், அவர்கள் அநியாயக் காரர்கள் என்றெல்லாம் இங்கே இறைவன் கடுமையாக எச்சரிப்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படாதவர்கள் நரகில் புரட்டப்படுவார்கள் (33 : 66) என்றும் , கட்டுப்பட்டவர்தாம் சுவர்க்கத்தில் பிரவேசிக்க முடியும் (4 : 13), (48 : 17) என்றும், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படாமல் மற்றவர்களுக்குக் கட்டுப்பட்டு நல்ப்பவர்கள் செய்யும் நல்லறங்கள் பாழாகிவிடும் (47 : 33) என்றும் பல இடங்களில் இறைவன் தெளிவுபடுத்துகிறான் .
திருக்குர்ஆன் நெடுகிலும் இந்தக் கருத்தில் எண்ணற்ற வசனங்களைக் காணலாம் .அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவது மட்டுமின்றி வேறு எதற்கும் எவருக்கும் கட்டுப்படக்கூடாது எனவும் இறைவன் தெள்ளத் தெளிவாக பல இடங்களில் அறிவிக்கின்றான்,
குர்ஆனில் கூறப்படாத ஒன்றை அல்லது கூறப்பட்டதற்கு மாற்றமான ஒன்றை குர்ஆனில் தடுக்கப்பட்ட ஒன்றை அறிஞர் என்று மதிக்கப்படும் நபர் கூறினால் அந்த அறிஞரின் திறமையைத்தான் கருத்தில் கொள்கின்றனர். குர்ஆனின் கூற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த அறிஞரின் கூற்றை எடுத்து நடக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
மத்ஹபுகளில் கூறப்படுகின்ற எத்தனையோ சட்டங்கள் குர்ஆனுடன் மோதுகின்றன. ஆயினும் மத்ஹபின் முடிவில் சிலருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது. எத்தனையோ மவ்லவிமார்களின் போதனைகள் குர்ஆனுடன் நேரடியாக மோதுகின்றன. அதை சுட்டிக்காட்டிய பின்னர் கூட குர்ஆனை அலட்சியம் செய்து மவ்லவிகளின் முடிவை செயல்படுத்துவோர் ஏராளம். இப்படி மார்க்க அறிஞர்கள் என்று சொல்பவர்களை கண்மூடி பின்பற்றலாமா? என்றால் . அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் கடுமையாக கண்டித்துள்ளதைப் பார்க்கலாம் .
திருக்குர்ஆனையும் நபிவழியையும் புறம் தள்ளிவிட்டு மார்க்க அறிஞர்கள் பெரியோர்கள் முன்னோர்கள் ஆகியோரைப் பின்பற்றுவதை திருக்குர்ஆன் பல இடங்களில் வன்மையாகக் கண்டிக்கிறது. அல் குர்அன் (33: 66, 67) (9 : 31)
யூதர்களும் கிறித்தவர்களும் தங்கள் மதகுருமார்களைக் கடவுள் என்று நம்பியதில்லை . அவர்கள் தமது மதகுருமார்களை சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்தவர்கள் என்று நம்பினார்கள். வேதங்களைப் படிக்காமல் மதகுருமார்கள் சொல்வதையே சட்டமாகக் கொண்டார்கள். இவ்வாறு நம்பியதன் காரணமாகவே அவர்கள் மதகுருமார்களைக் கடவுளர்களாகக் கருதிவிட்டனர் என்று இறைவன் இங்கே கண்டிக்கின்றான்
முஸ்லிம்கள் தங்களின் எல்லா வணக்கங்களுக்கும் திருக்குஆனையும் நபிவழியையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அவ்விரண்டையும் தவிர வேறு எவரது அபிப்ராயங்களையும் அடிப்படையாகக் கொள்ள முடியாது என்பதை இவ்விரு வசனங்களும் இன்னும் பல வசனங்களும் அறிவிக்கின்றன.
 

0 comments:

Post a Comment