"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Sunday, June 26, 2011
இஸ்ரேலிய பிரதமரின் இளம் மகன் முஸ்லீம்கள் குறித்து பேஸ்புக்கில் இழிந்து கருத்துக்களை வெளியிட்டார்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யஹூவின் 19 வயது மகனும், ராணுவ செய்தித் தொடர்பாளருமான யாயிர் நதன்யஹூ, அராபியர்களையும் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அவதூறான இழி கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு, யாஸிர் நெடான்யஹு தனது பேஸ்புக் பக்கத்தில் “மரணத்தையும் துவேஷத்தையும் கொண்டாடுபவர்கள் முஸ்லீம்கள் என்று கூறியுள்ளார்”. அத்தோடு மாத்திரம் நின்று விடாமல் “தீவிரவாதத்திற்கு ஒரு மதம் உண்டு என்றால் அது இஸ்லாம் மட்டுமே” (terror has a religion and it is Islam) என்று தனது நச்சுக் கருத்தை கக்கியுள்ளார்.
இந்த தீங்கான விஷக் கருத்துக்கள் உடனடியாக பாலஸ்தீனர்களின் கண்டனத்திற்கு உள்ளானது. அத்துடன் இவரின் தந்தை நெடான்யஹு தானா பாலஸ்தீனர்களுக்கு ஒரு நாட்டை அமைப்பதற்கான விருப்பத்தை அறிவித்தார் என்று பாலஸ்தீனர்கள் மத்தியில் கடும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், யாஸிர் நெடான்யஹு “பாலஸ்தீனம் ஒரு போதும் தனி நாடாக முடியாது” என்று எழுதியுள்ளதுடன், ஏற்கனவே 23 பேருடன் சேர்ந்து ஒரு குரூப்பை பேஸ்புக்கில் ஆரம்பித்து,“அரபு தொழில்களையும், உற்பத்திப் பொருட்களையும் யூதர்கள் புறக்கணிக்க வேண்டு்ம்”என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
யாயிரின் இந்த விஷக் கருத்துக்கள் குறித்த செய்தி வெளியான இரண்டு மணி நேரத்தில், பேஸ்புக், யாசிரின் கருத்துக்களை நீக்கி விட்டது. இதுகுறித்து பெஞ்சமின் நதன்யஹூ இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல் அரசு வழக்கறிஞர் டேவிட் ஷிம்ரோன் கூறுகையில், இரு ஒரு இளைஞனின் கோபத்தால் எழுந்த வார்த்தைகள்தான். தற்போது அது நீக்கப்பட்டு விட்டது.
யாயிரின் இந்த அவதூறு கருத்துக்கள் குறித்த செய்தி வெளியான இரண்டு மணி நேரத்தில், பேஸ்புக், யாசிரின் கருத்துக்களை நீக்கி விட்டது. இதுகுறித்து பெஞ்சமின் நதன்யஹூ இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல் அரசு வழக்கறிஞர் டேவிட் ஷிம்ரோன் கூறுகையில், இரு ஒரு இளைஞனின் கோபத்தால் எழுந்த வார்த்தைகள்தான். தற்போது அது நீக்கப்பட்டு விட்டது.
பிரதமர் நதன்யஹூவும், அவரது மனைவியும் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். மத பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் அவர்கள் மதிக்கிறார்கள். தங்களது பிள்ளைகளையும் அவர்கள் அப்படித்தான் வளர்த்தி வருகிறார்கள். ஏதோ கோபத்தில் யாயிர் அவ்வாறு எழுதி விட்டார். தற்போது அது பேஸ்புக்கில் இல்லை என்றார்.
பாலஸ்தீன செய்தித் தொடர்பாளர் ஹுசம் ஸோம்லாட் இந்த கருத்து தொடர்பாக கூறுகையில்,
“இதுதான் அவருடைய தந்தையின் போதனை. அதைத்தான் இப்போது மகன் வெளிப்படுத்தியுள்ளான். இதுதான் நதன்யஹூவினால் உருவாக்கப்பட்ட குடும்பம், இதுதான் அவரால் உர்வாக்கப்பட்ட சமூகம். இதன்மூலம் தனது குடும்பத்தை எப்படி வளர்த்து வருகிறார் நதன்யஹூ என்பது யாயிரின் பேச்சைப் பார்த்தாலே தெரிகிறது” என்று கடுமையாக யாசிரையும், அவரது தந்தையையும் சாடியுள்ளார்.
இதற்கிடையே, யாயிரின் கருத்துக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, யாயிரின் கருத்துக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவத் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், யாயிர் நதன்யஹூவுடன் ராணுவத் தளபதிகள் பேசியுள்ளனர். அப்போது யாயிரின் தவறு அவருக்கு சுட்டிக் காட்டப்பட்டது. இதுபோன்ற செயலில் ஒரு ராணுவ வீரர் ஈடுபடக் கூடாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியாக்கம்: காத்தான்குடி இன்போ நிர்வாகம்
Saturday, June 25, 2011
19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்
![]() |
ஸ்டீபன் மற்றும் டைலர் டெல்ப் ஆகிய இருவரும் தலையால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்.
இருவரும் 19 வருடங்களாக ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மிக அரிதாகவே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துள்ளனர். அதுவும் கண்ணாடி வழியாகத்தான்.
தலையால் ஒட்டியிருக்கும் இவர்களின் முகங்கள் எதிர் எதிர் பக்கங்களாக அமைந்துள்ளன. எனவே ஒருவரை மற்றவர் கண்ணாடியின் உதவியின்றி பார்க்கவே முடியாது. உலகில் இத்தகைய இரட்டையர்கள் பிறந்து இவ்வளவு காலம் உயிர் வாழ்வதென்பது மிகவும் அபூர்வமான ஒரு விடயமாகும்.

இவர்கள் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் தென் ஜேர்ஸி பகுதியைச் சேர்ந்தவர்கள். முதல் தடவையாக இவர்கள் ஊடகங்களுக்கு முன்னாள் தோன்றி தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இவர்களுள் ஒருவர் எதிர்ப்பால் உணர்வுடையவர்.மற்றவர் ஓரினச் சேர்க்கை ஆர்வமுள்ளவர். ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு நொடி கூட பிரிந்திருக்க முடியாது.

இருவரும் நன்றாக வயலின் வாசிக்கக் கூடியவர்கள். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக மட்டுமன்றி நல்ல நண்பர்களாகவும் உள்ளனர்.
இவர்களின் பெற்றோர்கள் இவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். இருவருமே இறைவன் தங்களுக்களித்த கொடை என்று அவர்கள் நம்புகின்றனர்.
விஷேட தேவைகள் உடைய பிள்ளைகளுக்கான பாடசாலையில்தான் இருவரும் படித்து வருகின்றனர்.அதற்கு மேலதிகமாக பிரதான பாடசாலைக்கும் செல்லுகின்றனர்.
படிப்பில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று அவர்களின் அசிரியர்கள் கூறுகின்றனர். ஒருவர் திரைப்படத் துறையிலும் மற்றவர் இசைத் துறையிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக இவர்களின் அசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)