widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Saturday, June 30, 2012


பெயரளவில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள்!

தலைப்பை பார்த்தவுடன் அதிர்ந்து விடாதீர்கள். இஸ்லாம் எந்தளவுக்கு இன்றைய முஸ்லிம்களின் வாழ்கையில் பிரதிபலிக்கிறது என்பதை ஒவ்வொருவரும் தங்களை தாங்களே எடை போட்டு பார்த்தால் தெரியும். 

இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யக் கூடிய வணக்க வழிபாடுகளாகட்டும் நடைமுறை வாழ்க்கை தொடர்புடையவைகளாகட்டும் நாம் எந்தளவுக்கு தூய இஸ்லாமிய மார்க்கத்தினை பின்பற்றுகிறோம், மார்க்க வரம்புக்குற்பட்டு நடக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். 

திருக்குர்ஆனை பெரும்பாலான முஸ்லிம்கள் அரபியில் ஓதுவதோடு சரி. அதன் அர்த்தம் என்ன அந்த வசனம் என்ன சொல்கிறது என்பதை பார்க்க மாட்டார்கள். இவர்கள் வெறும் மறுமை நன்மைக்காக மட்டுமே ஓதுகிறார்கள். அதனால் இம்மையில் கிடைக்கும் மற்றொரு நன்மையை இழந்து விடுகிறார்கள். அது தான் நேர்வழி. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறியக் கூடிய வழி. இந்த திருக்குர்ஆனை பொருளறிந்து ஓதுவதால் நமக்கு இருக்கும் பல்வேறு சந்தேகங்கள் குழப்பங்கள் நீங்கி நாம் என்றென்றும் நேர்வழியில் இருக்க முடியும்.

மேலும் திருக்குர்ஆனை ஓதுவதற்கு முன்னும் பின்னும் அதை முத்தம் இடுவதும் கண்களில் ஒத்திக் கொள்வதும் ஏன் என்று தெரியவில்லை. இது போன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நம்மை நாளடைவில் பித்அத்தான காரியங்களிலும் இனைவைப்பான காரியங்களிலும் கொண்டு சென்று விடும். இதுபோன்று புதிது புதிதான காரியங்களை செய்வதிலிருந்து விலகிக் கொள்வோம்.

தொழுகையிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாக இருக்கிறார்கள். நிதானம் இல்லாமல் வேகமாக தொழுவதும், இமாமை முந்துவதும், பர்லான தொழுகை நடக்கும்போது அதில் சேராமல் சுன்னத்தான தொழுகைகளை தொழுவதும், வரிசைகளை பேணாமல் இருப்பதும் மேலும் இது போன்ற பல தவறுகளையும் சாதராணமாக பள்ளிவாசல்களில் காணலாம். தொழுகையில் ஓதக் கூடிய சூராக்கள் மற்றும் துஆக்கள் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தெரிவதில்லை. அதை மனப்பாடம் செய்வது ஒன்றும் கடினமில்லை. சிறு வயதில் ஓதவில்லை படிக்கவில்லை என்று பலர் காரணம் கூறிக் கொள்கிறார்கள். இதன் மூலம் பல நல்ல பாக்கியங்களை இழக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தொழுகை நோன்பு போன்றவற்றை முறையாக கடைபிடிக்கும் பல முஸ்லிம்கள் இணைவைப்பை நோக்கி சர்வ சாதரணமாக செல்வதையும் காணலாம். படைத்த அல்லாஹ்விடம் மட்டுமே எந்த ஒன்றையும் (வணக்கம், துவா மற்றும் நேர்ச்சை போன்றவைகள்) கேட்க வேண்டும் என்கிறது இஸ்லாம். ஆனால் இன்றைய நிலைமை அவுலியாக்களிடம் சென்று அவர்களிடம் கோரிக்கை வைப்பதும் நேர்ச்சை செய்வதும் சமாதிகளை வணங்குவதும் ஏராளம் ஏராளம். இதற்கு வருமானத்திற்க்காக மார்க்கத்தை விற்கும் தலைப்பாகை சகிதம் உலாவரும் போலி உலமாக்களும் விதிவிலக்கல்ல! இதற்கும் சிலை வணக்கத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முகையத்தின் ஆண்டவரிடம்?? கேற்பதும் ஒன்றுதான் முருகனிடம்?? கேற்பதும் ஒன்றுதான். இதிலே சமாதி வழிபாடு சந்தனகூடு வழிபாடு கொடி வழிபாடு பாத்திஹா மௌலூது ராத்திபு பஞ்சா தீமிதி தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல் செய்வினை சூனியம் இது போன்ற கருமாந்திரங்கள் எல்லாம் அடங்கும். இவற்றை எல்லாம் சர்வ சாதரணமாக செய்யும் பெயரளவில் வாழும் முஸ்லிம்களே நாளை மறுமையில் இறைவனை சந்திக்க இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கஷ்டப்பட்டு செய்த அமல்களை வீணாக்கி விடாதீர்கள்.

ஹஜ்ஜுக்கு செல்லும் பொது இவர்கள் செய்யும் அலப்பறை இருக்கிறதே. இவர்கள் செய்யும் வீண் செலவுகளும் ஆடம்பரமும் பந்தாவும் இவர்கள் ஹஜ்ஜுக்கு செல்வத்தின் உண்மை நோக்கம் என்ன என்ற சந்தேகத்தை உருவாக்கி விடும். இதையெல்லாம் தவிருங்கள்.

திருமணம் செய்யும் போது வரதட்சணை வாங்குவது தற்போது குறைந்திருந்தாலும் முழுமையாக நம் சமுதாயம் அதை விட்டு நீங்கவில்லை. ஒரு பெண் வயதிற்கு வந்தால் அதற்கும் சாப்பாடு போட்டு கொண்டாடுகிறார்கள். சிறுவர்களுக்கு விருத்த சேதனம் செய்யும் போதும் அதற்கும் விருந்து. அதற்கும் ஒரு ஆலிம் வருவார். அவர் வந்து அல் பாத்திஹா சொன்னால் தான் கத்தி வெட்டும் இல்லையென்றால் வெட்டாது போல. இதெல்லாம் பரவாயில்லை இறந்தவர் வீட்டில் இவர்கள் செய்யும் அநியாயம் இருக்கிறதே ஏதோ கல்யாண வேட்டைப் போல விருந்தும் சாப்பாடும். இப்படி எல்லாம் செய்யும் நீங்கள் முஸ்லிம்களா? இல்லை பெயரளவில் மட்டுமே நீங்கள் முஸ்லிம்கள். 

ஒரு முஸ்லிம் சிறந்த கல்வியாளனாக சுய சிந்தனை உடையவனாக மார்க்க வரம்புக்குற்பட்டவனாக குர்ஆனையும் ஹதீசையும் பின்பற்றி வாழக் கூடியவனாக இஸ்லாம் தடுத்திருக்கும் சமூகக் கொடுமைகளை விட்டும் நீங்கியவனாக தொழுகை நோன்பு மற்றும் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துகளை பேணி நடப்பவனாக ஒரு சிறந்த ஏகத்துவவாதியாக இருக்க வேண்டும். பொறாமைக் கொள்வதையும் அவதூறு சொல்வதையும் நிறுத்த வேண்டும்.

சொத்துக்களை முறையாக பங்கிடுவது என்பது இன்றைய முஸ்லிம்களிடம் ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. சொத்துக்களை பிரிக்கும் போது பெண்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இது போன்ற காரனங்களால் இன்று பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்களில் சகோதர சகோதரிகளுக்கிடையில் பிரச்சனை. ஆண்களே உங்களுக்கு எப்படி உங்கள் தந்தையின் சொத்தில் உரிமை இருக்கிறதோ அதுபோல அவர்களுக்கு பிறந்த பெண்களுக்கும் மார்க்க சட்டப்படி அவர்களுக்குரிய பங்கு உண்டு. அல்லாஹ் விதித்ததில் விளையாடும் முஸ்லிம்களே நீங்கள் உண்மையான முஸ்லிம்களா?பி.ஜைனுலாபிதீன் அவர்களின் இஸ்லாம் கூறும் குடும்பவியல் தொடர் இஸ்லாத்தின் குடும்ப அமைப்பை முழுமையாக விளக்குகிறது. மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும். முஸ்லிம்கள் அனைவரும் கேட்க வேண்டிய உரை.

இன்று வியாபாரத்தில் முஸ்லிம்களும் சர்வ சாதாரணமாக பொய் சொல்லுகிறார்கள். வட்டி வாங்குகிறார்கள். இறையச்சம் இல்லாததே இதற்கு காரணம். பொருளாதாரத்தின் மீது இவர்களுக்குள்ள வெறி இவர்களின் கண்ணை மறைத்து விடுகிறது. பி.ஜைனுலாபிதீன் அவர்களின் இஸ்லாம் கூறும் பொருளியல் தொடர் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விசயங்களை முழுமையாக அலசுகிறது. மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

இன்று முஸ்லிம்கள் பல தரப்பட்ட சமுதாய இயக்கங்களாலும் அரசியல் கட்சிகளிடம் ஒரு சீட்டுக்காக காலமெல்லாம் கா கா என்று காக்காப் பிடிக்கும் கூட்டங்களாலும் சிதறுண்டு கிடக்கிறது. இதில் பெரும்பாலான அமைப்புகள் பணம் சம்பாதிக்கவும் தனது அரசியல் செல்வாக்கை அதிகரித்து எம்பி எம்எல்ஏக்கள் ஆகும் கனவுகளோடும் முஸ்லிம் சமுதாயத்தை கூறு போடுகின்றன. இத்தகைய இயக்கங்கள் பின்னால் செல்லும் முஸ்லிம் சமுதாயமே சரியான இயக்கத்தை தேர்வு செய்வதில் உங்களுக்கு கடமை இருக்கிறது. உங்களுக்கென்று சுயமான அறிவும் இருக்கிறது. 

தமிழகத்திலே இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையான தவ்ஹீத்தின் அவசியத்தை மக்களிடம் உணர்த்தி பெரும்பாலான மக்களை இணைவைத்தல் எனும் கொடுமையில் இருந்து மீட்டெடுத்து தூய்மையான இஸ்லாத்தை அறியச் செய்து மேலும் அவர்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக பல பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் எந்த ஒரு சுய ஆதாயத்திற்க்காகவும் இல்லாமல் அல்லாஹ்வுக்காக (அல்லாஹ்வே அறிந்தவன்) செய்து வருகிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கம். இந்த இயக்கத்தை நாம் முழுமையாக அறிந்து அதன் நடவடிக்கைகளில் நம்மை ஈடுபடுத்துவோம். இந்த இயக்கத்தின் சார்பாக அன்பான அழைப்பு விடப்படுகிறது. மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும். கொள்கை ரீதியாக பிரிந்து கிடக்கும் லட்டர் பேடு இயக்கங்கள் சில காலங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இந்த இயக்கத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஒன்று சேர்ந்து போஸ்டர் அடித்து ஓட்டியதும் அதன் மீது அவதூறு செருகலை வீசுவதும் மகா கேவலம்.

இஸ்லாத்தின் அடிப்படையான தவ்ஹீதின் அவசியத்தை நாம் அனைவரும் உணர வேண்டும். லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமாவை நன்கு விளங்கி அதன் உண்மையான அர்த்தத்தின்படி நாம் வாழ வேண்டும். நாம் பெயரளவில் மட்டுமல்லாது உண்மையிலேயே அல்லாஹ்வையும் அவனது தூதர் ஸல் அவர்களையும் முற்றிலும் பின்பற்றி வாழக் கூடியவர்களாக மாற வேண்டும். அதுதான் இந்த உலகத்திலும் வெற்றி மறு உலகத்திற்கும் வெற்றி.

Source: http://mpmpages.blogspot.com

0 comments:

Post a Comment