widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Wednesday, June 27, 2012

இக்வானும் எகிப்தும்!

இக்வானும் எகிப்தும்!             
தந்தையின் ஷஹீதாக்கப்பட்ட (உயிர் தியாகம்) அந்த உடலை சுமந்து செல்லும்போது வீர மகள் கூறிய வார்த்தைகள்;
"என்னருமை தந்தையே! உங்களின் இந்த இறுதி ஊர்வலத்தில் பூமியில் வசிக்கும் யாருமே இல்லை. அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கபட்டுள்ளார்கள் ஆனால் வானிலுள்ளோரை (வானவர்களை) யாரால் தடுத்து நிறுத்த முடியும்?"
1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி
எகிப்து மன்னன் ஃபாரூஃக் பாஷா வின் கட்டளைப்படி "இஃக்வானுல் முஸ்லிமீன்" (Muslim Brotherhood) நிறுவனர், தலைவர் (முர்ஷித் ஏ ஆம்) இமாம் ஹசனுல் பன்னாவை கலந்துரையாடல் என்ற சாக்கில் தன்னந்தனியாக ஓரிடத்திற்கு அழைக்கப்பட்டு கடுமையான இருள் சூழ்ந்த இரவில் காவல்துறையினரால் துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்ட இரவு. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஊரடங்கு உத்தரவு அமுலில், பத்திரிகை, செய்தி நிறுவனங்கள் மீது தடையுத்தரவு, இயக்க உறுப்பினர்கள், அனுதாபி, ஆதரவாளர்கள் அனைவரும் சிறைக்கொட்டடிகளில், பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்ற தடை, எவரும் ஷஹீதின் நல்லடக்க இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்ற உத்தரவு.
இந்த நிலையில் ஷஹீதின் வயோதிக தந்தையார், "வீட்டில் ஆண்கள் எவரும் இல்லை. சடலத்தை வண்டிவரை கொண்டு செல்லவாவது யாரையேனும் அனுமதியுங்கள்" என கோரிக்கை விடுக்கின்றார்.

"ஆண்கள் இல்லையெனில் பெண்கள் "ஜனாஸாவை" தூக்கிச்செல்லட்டும்" அரசு பயங்கரவாதத்தின் பதில் உடனே வந்தது.
ஆதலால் குடும்ப பெண்மணிகளே ஜணாஸாவை சுமந்து சென்று "மஸ்ஜித் ஃகைஸூம்" இல் இறுதி தொழுகை நடத்தப்படுகிறது பின்னர் "இமாம் ஷாஃபி ஃகப்ருஸ்தானில் " (இடுகாட்டில்) துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் கடும் பாதுகாப்பில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த குழுவின் பயணம் தொடர்கிறது.
பின்னர்.........
2012 ஜூன் 24 ஆம் தேதி...
எங்கும் ஒளி வெள்ளம் சூழ
இமாம் ஹஸனுல் பன்னா ஷஹீதின் "இஃக்வானுல் முஸ்லிமீன்" இன்று எகிப்தின் ஆட்சியாளர்கள்.!!
நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிறைவேற்றியே உள்ளான்.
எகிப்திய மக்கள் "இஃக்வானுல் முஸ்லிமீன்" இயக்க வெற்றியின் அறிவிப்பினை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் வண்ணம் கெய்ரோ நகரின் தஹ்ரீர் சதுக்கத்தில் "சஜ்தா" செய்கிறார்கள்.
Source : www.nidur.info

0 comments:

Post a Comment