widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Thursday, September 15, 2011

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்


அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
அல்லாஹ் தடுத்துள்ளவைகளில் முதன்மையானது ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெரும் பாவச் செயலாகும்.
பெரும் பாவங்களிலேயே மிகப்பெரிய பாவங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்)அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! ஆம், கூறுங்கள்! என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்..  என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மன்னித்துவிடலாம். ஆனால் இணைவைத்தலை மட்டும் மன்னிக்கவேமாட்டான். ஏனெனில் இதற்கு மட்டும் பிரத்தியேகமாக பாவமீட்சி பெறவேண்டியுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)
ஷிர்க் -அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்- எனும் பெரும்பாவம் முஸ்லிமை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும். இணைவைக்கும் கொள்கையுடம் இறந்து விட்டவன் நிரந்தர நரகத்திற்குரியவனாவான்.
கப்ர் வழிபாடு
நல்லடியார்களின் கப்ர்களிலும், அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தியும் மார்க்கத்திற்கு முரணான, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பல செயல்கள் நடக்கின்றன. அவற்றில் ஓரிறைக் கொள்கைக்கு முரணான சிலசெயல்களும் அவை தவறு என்பதற்கான ஆதாரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1) சிலர், இறந்துவிட்ட நபிமார்களிடமும் நல்லடியார்களிடமும் -அவ்லியாக்களிடமும்- தங்களின் தேவைகளை கேட்டுப் பிரார்த்திக்கின்றனர், பரிந்துரைக்க வேண்டுகின்றனர். துன்பங்களை நீக்கக் கோருகின்றனர், அவர்களிடம் உதவி, அடைக்கலம் மற்றும் பாதுகாப்புத் தேடுகின்றனர்.பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!. அவனுக்கே உரிய இவ்வணக்கத்தை பிறருக்குச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.அல்லாஹ் கூறுகிறான்:


وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ(நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)


أَمَّنْ يُجِيبُ الْمُضطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَئِلَهٌ مَعَ اللَّهِதுன்பத்திற்குள்ளானவனின் அழைப்பிற்கு பதிலளித்து, அவனுடைய தீங்கை நீக்குகின்ற, மேலும் உங்களை பூமியின் பிரதிநிதிகளாக்குகின்ற அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? (நிச்சயமாக இல்லை) (அல்குர்ஆன் 27:62)2) சிலர், சில பெரியார்கள் மற்றும் அவ்லியாக்களின் பெயர்களை நிற்கும் போதும், உட்காரும் போதும், கஷ்டத்தின் போதும் கூறும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் ஒருவர்: யா முஹம்மத்! என்கிறார். மற்றொருவர்: யா அலீ! என்கிறார். மற்றொருவர்: யா ஹுஸைன்! என்கிறார். அவர்: யா பதவீ! என்கிறார். இவர்: யா ஜீலானி! யா முஹைதீன்! என்கிறார். அவர்: யா ஷாதலீ! என்கிறார். இவர்: யா ரிஃபாயீ! என்கிறார். அவர் ஐதுரூஸை அழைக்கிறார். இவர் ஸெய்யிதா ஜைனபை அழைக்கிறார். மற்றொருவர் இப்னு அல்வானை அழைக்கிறார்.அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)3) கப்ரை வழிபடும் சிலர் அதனை வலம் வருகிறார்கள். அதன் மூலைகளை கையால் பூசி அதனை உடலில் தடவிக் கொள்கிறார்கள். அதன் மணலை முத்தமிடுகிறார்கள். முகத்தில் பூசிக் கொள்கிறார்கள். கப்ர்களைக் கண்டால் உடனே ஸஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள். மேலும் கப்ர்களுக்கு முன்னால் மிகவும் பயபக்தியுடனும் பணிவுடனும் சிரம் தாழ்ந்தவர்களாக, அச்ச உணர்வுடன் நின்று கொண்டு, நோயை நீக்க, குழந்தை கிடைக்க, தேவைகள் நிறைவேற மற்றும் இதுபோன்ற தன் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள். என்னுடைய தலைவரே! நெடுந்தூரம் பயணம் செய்து உங்களிடம் வந்துள்ளேன். எனவே என்னை நஷ்டமடைந்தவனாக வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிடாதீர்! என்றுகூட சிலர் வேண்டுகிறார்கள். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்:
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ

மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிகவழிகெட்டவன் யார்? அவர்களோ, இவர்களின் அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 46:5)நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக பிரார்த்தித்தவனாக மரணித்தவன் நரகம் புகுந்துவிட்டான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் -ரலி, நூல்: புகாரீ 4497)4) சிலர் கப்ர்களுக்கு சென்று மொட்டையடித்துக் கொள்கின்றனர். சிலர் கப்ர்களின் கண் கொள்ளாக்காட்சி, அவ்லியாக்களின் அபரிமித ஆற்றல் என்றெல்லாம் பல தலைப்புக்களில் கட்டுக் கதைகளை இட்டுக்கட்டி எழுதியுள்ளனர். அந்த புத்தகத்திற்கு மனாஸிக் ஹஜ்ஜில் மஷாஹித் -கண்கூடான ஹஜ் வழிபாடு- என்றும் பெயர் சூட்டியுள்ளனர். சிலர் அவ்லியாக்கள்தான் இவ்வுலகில் ஆட்சி செய்கிறார்கள் என்றும் துன்பம் தரவும் இன்பம் தரவும் அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.அல்லாஹ் கூறுகிறான்:
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ


அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குபவன் அவனைத் தவிர(வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை அடையச் செய்கின்றான். அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 10:107)
 அல்லாஹ் அல்லாதவருக்காகப் பலியிடல்
 அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டிய தொழுகை போன்ற வழிபாடுகளில் பலியிடுதலும் ஒன்றாகும். அதனை பிறருக்காகச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.அல்லாஹ் கூறுகிறான்:
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
எனவே நீர் உமது இரட்சகனைத் தொழுது, (குர்பானியும் கொடுத்து அதனை அவனுக்காக) அறுப்பீராக! (அல்குர்ஆன் 108:2)அதாவது: அல்லாஹ்வுக்காகவே பலியிடுவீராக! அல்லாஹ்வுடைய பெயர் கூறியே அறுப்பீராக!நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ
அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அலீ -ரலி, நூல்: முஸ்லிம் 3657)அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதில் இரண்டு விதமான குற்றங்கள் உன்னள. 1) அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுப்பது2) அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறி அறுப்பது.இவ்விரண்டில் எந்த ஒன்று நிகழ்ந்தாலும் அதனை சாப்பிடுவது ஹராம் ஆகும். நமது நடைமுறையில் மலிந்து கிடக்கும் அறியாமைக் காலச் சடங்குகளில் ஷைத்தானுக்காக பலியிடும் வழக்கமும் ஒன்றாகும். வீடு வாங்கினாலோ, வீடு கட்டினாலோ, கிணறு தோண்டினாலோ ஷைத்தானின் துன்பத்திற்கு பயந்தவர்களாக அந்த இடத்திலோ, அல்லது அந்த மண் மீதோ அறுத்துப் பலியிடுகிறார்கள். இதுவும் தவறான பலியிடுதலேயாகும்.சூனியம், குறி, ஜோஸியம் பார்த்தல்சூனியம் இறைநிராகரிப்புச் செயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் என்பது எந்தப் பயனையும் பெற்றுத்தராத, மாறாக தீமைகளையே விளைவிக்கும் பாவச்செயலாகும்.அல்லாஹ் கூறுகிறான்:
وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ
அவர்களுக்கு எந்தப் பயனும் தராத, அவர்களுக்கு துன்பமிழைக்கும் ஒன்றை- சூனியத்தை- கற்றுக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 2:102)


وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىசூனியக்காரன் எங்கு வந்த போதிலும் வெற்றி பெற மாட்டான். (அல்குர்ஆன் 20:69)


1) நிச்சயமாக சூனியம் செய்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்:


وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ
மேலும் ஸுலைமான் (சூனியம் செய்து அல்லாஹ்வை) நிராகரிக்கவில்லை. எனினும் நிச்சயமாக ஷைத்தான்கள் தான் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சூனியத்தையும் பாபிலோ(ன் நகரி)னில் ஹாரூத், மாரூத் எனும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்த(தாகக் கூறி, பல)வற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். மேலும் அவ்விருவரும் நாங்கள் சோதனையாக இருக்கின்றோம். ஆதலால் (இதைக்கற்று) நீ காஃபிராகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. (அல்குர்ஆன் 2:102)

சூனியம் செய்பவர்களை கொலை செய்வதே மார்க்கத்தீர்ப்பாகும். சூனியத்தால் சம்பாதிப்பது ஹராமான, இழிவான செயலாகும். அறிவிலிகளும் அநியாயக்காரர்களும் பலவீனமான ஈமான் கொண்டவர்களும் தங்களின் எதிரிகளை சூனியத்தின் மூலம் பழிவாங்குவதற்காக சூனியக்காரர்களிடம் செல்கின்றனர். அநீதம் செய்தவர்கள் அதன் எதிர்விளைவாக தங்களை சூனியம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக சூனியக்காரர்களிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.குல்அவூது பிறப்பில் ஃபலக், குல்அவூது பிறப்பின் னாஸ் மற்றும் இவைபோன்ற சில திருமறை வசனங்களின் மூலம் -மார்க்கம் அனுமதித்த முறையில்- அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடக் கடமைப்பட்டவர்கள் ஷிர்க்கான, ஹராமான வழிகளில் எங்கோ ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.2) நிச்சயமாக ஜோஸியக்காரர்களும் குறிகாரார்களும் மகத்தான அல்லாஹ்வை நிராகரிக்கும் காஃபிர்களாவார்கள்.மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறியமுடியாதபோது இவர்கள் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றார்கள். மூட நம்பிக்கையுடையவர்களிடம் பணம் பறிப்பதற்காக பலவழி முறைகளை கையாளுகிறார்கள். மண்ணில் கோடிட்டுப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பாத்திரத்தில் நீரூற்றிப் பார்ப்பது, வெற்றிலையில் மைதடவிப் பார்ப்பது, கண்ணாடியில் பார்த்து மறைவானவற்றைக் கூறுவது போன்ற பலவழிகளில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.இவர்கள் ஒரு முறை உண்மை கூறினால் 99 முறை பொய்யுரைப்பார்கள். ஆனால் மதிமயங்கியவர்கள். அவர்கள் ஒரு முறை கூறிய உண்மையை வைத்துக் கொண்டு இட்டுக்கட்டி பொய்யுரைக்கும் அனைத்தையும் உண்மையென நம்பிவிடுகின்றனர். திருமணம், வியாபாரம் மற்றும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் இன்ப, துன்பங்கள் பற்றி கேட்பதற்காகவும், காணாமல்போன பொருட்களைத் திரும்பப் பெறவும் அவர்களிடம் செல்கிறார்கள்.3) சூனியம் மற்றும் ஜோஸியக்காரனிடம் சென்று, அவன் கூறுவதை உண்மை என நம்புபவன் இஸ்லாத்தை விட்டும் வெளியாகிவிட்ட காஃபிர் ஆவான்.நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:


مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍசூனியக்காரனிடமோ, ஜோஸியக்காரனிடமோ சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகின்றவன், நிச்சயமாக முஹம்மது நபி(ஸல்)அவர்களின் மீது இறக்கப்பட்ட (மார்க்கத்)தை நிராகரித்து விட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல்: அஹமத் 9171)இவர்களுக்கு மறைவான ஞானமெல்லாம் கிடையாது என்று தெரிந்து கொண்டே அவர்களை சோதிப்பதற்காகவோ அல்லது இதுபோன்ற வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ அவர்களிடம் செல்பவன் காஃபிராகி விடமாட்டான். எனினும் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். 
مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً
யாரேனும் குறிகாரனிடம் வந்து அவனிடம் ஏதேனும் கேட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: ஸஃபிய்யா -ரலி, நூல்: முஸ்லிம் 4137)


அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் நாற்பது நாட்களும் தொழுவது அவன் மீது கடமையாகும். மேலும் அவன் தான் செய்த இப்பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
தாயத்து தகடுகளில் பயன் இருப்பதாக நம்புதல்

 சூனியம் மற்றும் ஜோஸியக்காரர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தாயத்து தகடு தட்டு போன்ற அல்லாஹ்வுக்கு இணைவைக்க காரணமாகும் பொருட்களில் நிவாரணம் இருப்பதாக நம்மில் பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே அதனை கழுத்தில் கட்டிக் கொள்கின்றனர். கண்திருஷ்டி போன்றவைகளிலிருந்து பாதுகாப்புத் பெற அதனை அவர்களது குழந்தைகளின் கழுத்திலும் கட்டிவிடுகிறார்கள். உடலில் கட்டிக் கொள்கிறார்கள். வீடுகளிலும் கடைகளிலும் வாகனங்களிலும் தொங்க விடுகிறார்கள்.




 துன்பம் மற்றும் சோதனைகளிலிருந்து விடுபட பாதுகாப்புப்பெற பல வடிவங்களில் மோதிரங்களை அணிந்து கொள்கின்றனர். நிச்சயமாக இவைஅனைத்தும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கு மாற்றமான கொள்கைகளாகும். தவறான இக்கொள்கைகள் ஈமானில் பலவீனத்தையே அதிகப்படுத்தும். இவைகளின் மூலம் நோய் நிவாரணம் தேடுவது ஹராம் ஆகும்.
நிவாரணத்திற்காக இவர்கள் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் தாயத்து தகடுகளில் பெரும்பாலானவை இணைவைக்கும் வாசகங்கள், ஜின் ஷைத்தான்களிடம் அடைக்கலம் தேடுதல், புரியாத வரைபடங்கள், விளங்கிக் கொள்ளமுடியாத வாசகங்கள் ஆகியவைகளைக் கொண்டதான் தயாரிக்கப்படுகின்றன.
 மேலும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்காக ஓதவேண்டிய திருக்குர்ஆனில் சில வாசகங்களையும் சிலர் எழுதுகின்றனர். ஆனால் அதனுடன் ஷிர்க்கான வாசகங்களையும் கலந்து விடுகின்றனர். சில பாவிகள் திருக்குர்ஆனின் வசனங்களை அசுத்தத்தைக் கொண்டும் மாதவிடாயின் இரத்தத்தைக் கொண்டும்கூட எழுதுகின்றனர். எனவே தாயத்து தகடு தட்டு போன்றவற்றைக் கட்டுவதோ தொங்கவிடுவதோ ஹராமாகும்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَதாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)
தாயத்து தட்டுகளில் நன்மையோ தீமையோ கிடைக்கிறது என்று நம்புகின்றவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டான். அவன் அல்லாஹ்விடம் இப்பெரும் பாவத்திற்காகத் தவ்பாச் செய்யவில்லையெனில் அல்லாஹ் அவனை மன்னிக்க மாட்டான். அவனுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிடும் மேலும் அவனுக்கு சொர்க்கம் ஹராமாகி நிரந்தர நரகவாதியாகிவிடுவான்.
 அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்தல்
அல்லாஹ் தனது படைப்பினங்களில் அவன் நாடியவற்றின்மீது சத்தியம் செய்வான். ஆனால் படைப்பினங்களாகிய நாம் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்யக் கூடாது.
பலர் அல்லாஹ்வின் படைப்பினங்களின் மீது சத்தியம் செய்கின்றனர். சத்தியம் செய்யப்பட தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும்  எதுவும் கிடையாது. அவனே மகத்தானவன், மேன்மைமிக்கவன், அமைத்தையும் நன்கறிந்தவன்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

أَلَا إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ وَإِلَّا فَلْيَصْمُتْ
அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் உங்களுடைய தந்தையரின் மீது சத்தியம் செய்வதை நிச்சயமாக அல்லாஹ் தடுக்கின்றான். யாரேனும் சத்தியம் செய்வதானால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும். அல்லது -வாய் மூடி- மௌனமாக இருக்கட்டும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரீ 6108)

مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ

0 comments:

Post a Comment