"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Tuesday, May 31, 2011
அடுத்த மாதத்தில் இரண்டு சூரிய கிரகணங்கள்- ஒரு சந்திர கிரகணம்!
ஏதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி முதல் ஜூலை 1ஆம் திகதிக்குள் ஒரே மாதத்தில்
அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய
கிரகணங்களாகும்- ஒன்று சந்திர கிரகணமாகும்.
இதில் இரண்டு சூரிய கிரகணங்களும் இலங்கையிலும் இந்தியாவிலும் தெரியாது. சந்திர கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும்.
ஜூன்
2ஆம் திகதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.55 மணி முதல் அதிகாலை 4.37 மணி
வரை சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. இதை சீனா- சைபீரியா- கிழக்கு ஆசிய
நாடுகளில் காண முடியும்.
ஜூன் 15ஆம் திகதி இரவு 11.52 மணி முதல்
அதிகாலை 3.33 மணி வரை சந்திக கிரகணம் ஏற்படும். இதை இலங்கையிலும்
இந்தியாவிலும்-ஆசியா- வளைகுடா நாடுகள்- ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா-
ஐரோப்பா- தென் அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் காண
முடியும்.
ஜூலை 1ஆம் திகதி மாலை 6.15 மணி முதல் இரவு 9.48 மணி வரை
அடுத்த சூரிய கிரகணம் ஏற்படும். இதை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும்-
அண்டார்டிகா பகுதியிலும்இ மடகாஸ்கரிலும் காணலாம். ஆனால்- இலங்கையிலும்
இந்தியாவிலும் இது தெரியாது.
இந்த மூன்று கிரகணங்களுமே வட அமெரிக்காவில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று கிரகணங்களுமே வட அமெரிக்காவில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment