widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, April 3, 2011

ஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை


ஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை தொழுகையைக் கடைபிடியுங்கள். ஜகாத்தையும் கொடுத்து விடுங்கள். ருகூஃ செய்வோருடன் சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்! (2:43)

மேற்காணும் வசனத்திற்கு ''ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுங்கள்'' என்பதாக இப்னுஅப்பாஸ்(ரழி) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (தப்ஸீர் இப்னு அப்பாஸ்)

ஜமாஅத்துடன் தொழுவதற்கும், தனிமையாகத் தொழுவதற்குமிடையே நன்மையில் ஏற்ற தாழ்வு: ''ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

அபூஸயீத்(ரழி) வாயிலாக புகாரீயில் இடம் பெற்றுள்ள அறிவிப்பில் 25 பங்கு பதவியில் கூடுதலாகும். என்றும், அபூஹுரைரா(ரழி) வாயிலாக புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகளில் 20க்கு மேலதிகமான பங்கு பதவியால் கூடுதலாகும் என்றும் உள்ளது.

0 comments:

Post a Comment