widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, July 1, 2012


அல்லாஹ்வின்
நிழலைப் பெறுவோர்

நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள்
நவின்றார்கள் :
நிழலே இல்லாத (மறுமை) நாளில் அல்லாஹ் ஏழு
கூட்டத்தாருக்கு தனது பிரத்தியேகமான நிழலை
வழங்குகின்றான்:

1- நீதி தவறாத தலைவன்

2- இறைவனை இபாதத் செய்வதில் வளர்ந்த வாலிபன்

3- இறையில்லத்துடன் தொடர்புபட்ட மனிதன்

4- இறைவனுக்காக நேசம் கொண்டு அவனுக்காகவே பிரி;ந்த
இரு மனிதர்கள்

5-அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் (துர்நடத்தைக்காக)
அழைத்த போது, ‘நான் இறைவனை அஞ்சுகிறேன்’ என்று
கூறிய மனிதன்

6-தனது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத
வகையில் தர்மம் புரிந்த மனிதன்

7- தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வி;டும் ஒரு
மனிதன்
அறிவிப்பவர் : அபூஹ{ரைரா றழியல்லாஹ{அன்ஹ{
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்

மனங்கவர் மணிமொழி

இப்னு அப்பாஸ் றழியல்லாஹ{அன்ஹ{மா அவர்கள்
அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்
பின்னால் ஒரு முறை சென்று கொண்டிருந்தேன்.
அப்போது அவர்கள் சிறுவனே! நான் உனக்கு சில
வார்த்தைகளை கற்றுத் தருகிறேன். அவற்றை நீ உனது
மனதிலே வைத்துப் பாதுகாத்தால் அல்லாஹ்
உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை உன் மனதில்
வைத்துப் பாதுகாத்துக் கொள். நீ அல்லாஹ்வை
உனக்கு முன்னால் காண முடியும்.
நீ எதனையும் கேட்க நாடினால் அல்லாஹ்விடம்
கேட்பாயாக. உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி
தேடுவாயாக. அறிந்து கொள்: முழு மனித சமூகமும்
ஒன்று சேர்ந்து உனக்கு ஏதாவது நன்மை செய்ய
ந p i ன த ; த h லு ம ; அ ல ; ல h ஹ ; உ ன க ; n க ன
எழுதிதியவற்றைத் தவிர வேறு எந்த நன்மையையும்
அவர்களால் செய்துவிடமுடியாது.
அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஏதும்
தீங்கிழைக்க நினைத்தாலும் அல்லாஹ் உனக்கு
விதித்தவற்றைத் தவிர எந்தத் தீங்கையும் அவர்கள்
செய்து விட முடியாது. எழுதுகோல் உயர்த்தப்பட்டு
விட்டது. ஏடுகள் காய்ந்து விட்டன.
ஆதாரம் : திர்மிதி