"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132
Friday, April 1, 2011
ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்த நாள்!
அந்நாளில்.......!!!
அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல
போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு)
பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது (உங்கள்
பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது. (அல்குர்ஆன் 42:47)
(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த
ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே
இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட
நாடும்; தன் கைசேதத்தையும் வெளிப்படுத்தும். (அல்குர்ஆன் 10:54)
ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில்,
ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக்
கொடுக்கப்படும் அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்
16:111)
ஒரு நாள் நாம் மலைகளை பெயர்த்து விடுவோம்; அப்போது,
பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம்,
(அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். (அல்குர்ஆன் 18:47)
காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக
பரப்பி வைப்போம். (அல்குர்ஆன் 18:100)
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
தொடர்ந்து பார்வையிட/படிக்க..
இணை வைக்காமல் மரணித்தவர் சுவர்க்கம் செல்வார்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மதீனாவுடைய
‘ஹர்ரா’ என்ற (கறுப்புக்கற்கள்) நிறைந்த பூமியில் நடந்து கொண்டிருந்தேன்.
வழியில் உஹது மலை எமக்கு எதிர்ப்பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அபூதர்ரே! என்று அழைத்தார்கள். நான் இதோ ஆஜராகி இருக்கிறேன்.
யாரஸ¥லல்லாஹ்! என்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் என்னிடம் "இந்த உஹதின் அளவு தங்கம் இருந்து கடனை
அடைப்பதற்காகவேயன்றி அதில் ஒரு தீனாரையாவது என்னிடம் வைத்துக் கொண்டு
மூன்று இரவுகள் கழிவதையும் நான் விரும்பவில்லை. மாறாக அல்லாஹ்தலாவின்
அடியார்களுக்கு இவ்வாறு, இவ்வாறு இவ்வாறெல்லாம் செலவழித்துவிடவே
விரும்புகிறேன்". என்று கூறி தனது வலப்புறமாகவும், இடப்புறமாகவும்
காட்டினார்கள்.
Subscribe to:
Posts (Atom)
