widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, September 28, 2012


நேரடி ஒளி,ஒலிபரப்பு பற்றிய அறிவித்தல்


இந்தியா மற்றும் இலங்கையில் பிரசித்திபெற்ற மார்க்க அறிஞர்கள் பங்குபற்றும் தேசிய இஸ்லாமிய இஜிதிமா-2012

ஜமாஅத் அன்சார் சுன்னத்தில் முஹம்மதியாவின் ஏற்பாட்டில் இன்ஷா அழ்ழாஹ் இம்மாதம் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
பரகதெனிய ஷலபியா கலாபீட மைதானத்தில் நடைபெறும் இவ் இஜ்திமா நிகழ்வை அங்கிருந்து உலகம் முழுவதும் ஜமாஅத் அன்சார் சுன்னத்தில் முஹம்மதியாவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.jasm.lk ஊடாகவும் அத்தோடு இணைந்து www.zajinews.lk, www.zajilfm.comwww.islamkalvi.comwww.jasmlive.com ஆகிய இணையத்தளங்கள் ஊடாகவும் நேரடியாக ஒளி, ஒலிபரப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அழ்ழாஹ் குறித்த இரு தினங்களிலும் இவ் இணையத்தளங்கள் ஊடாக இம் மாபெரும் இஜிதிமாவை கேட்டும் பார்த்தும் பயன் பெற தாவராதீர்கள்.

இவ்வார ஜூம்ஆ உரை (28.09.2012)
குத்பா உரை: மௌலவி- நஸ்மல் பலாஹி
தலைப்பு:  யார் இந்த முஹம்மது?


Thursday, September 20, 2012

இன்று ஏறாவ+ரில் அஸர், மஹ்ரிப் தொழுகையின் பின் நடைபெறும் மௌலவி ஆதில் ஹஸன் அவர்களின் பயான் நிகழ்ச்சிகளை www.zajilfm.com ஊடாக நேரடியாகக் கேட்கலாம்

இவ்வார ஜூம்ஆ உரை (21.09.2012)
குத்பா உரை: மௌலவி ஆதில் ஹஸன்
தலைப்பு: 


முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு: பிரதிபலிக்கும் உண்மைகள்!


முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு: பிரதிபலிக்கும் உண்மைகள்!
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத பிற மதங்களைச் சேர்ந்த அல்லது மதக்கோட்பாடுகளில் ஈடுபாடு காட்டாத அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் இவை:
o  முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். - ஜவஹர்லால் நேரு
o  துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். - எஸ். எச். லீடர்
o  இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்? - வாஷிங்டன் இர்விங்
o  நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. - டாக்டர் ஜான்சன்
o  அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே. - கிப்பன்
o  முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். - பெர்னாட்ஷா
o  திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. - நெப்போலியன்
o  இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது. - ஜி.ஜி. கெல்லட்
o  சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது. - வில்லியம்மூர்
o  ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். - காந்திஜி
o  நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். - தாமஸ் கார்லைல்
o  நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. - டால்ஸ்டாய்
o  எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு 'குடிஅரசு' எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார். - கவியரசி சரோஜினி நாயுடு
o  இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.
எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது. - மைக்கேல் ஹெச். ஹார்ட் ('The 100' என்ற நூலில்).
சுருக்கமாக சொல்வதென்றால், தெளிந்த சிந்தனையும் நடுநிலை நோக்கும் கொண்ட அறிஞர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்வைப் புரட்டிப் பார்க்கையில் அதில் சுயநலமற்ற தொலைநோக்குக் கொண்ட சீரிய சிந்தனை பிரதிபலிக்கக் கண்டார்கள். கீழ்த்தரமான எண்ணங்களும் குறுகிய மனப்பான்மையும் உடையவர்கள் தங்கள் மனப்போக்கிற்கு ஏற்றவாறு அண்ணலார் மீது களங்கம் சுமத்த ஏதும் வாய்ப்பு கிடைக்காதா என இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
 நன்றி: திண்ணை


Wednesday, September 19, 2012


அமெரிக்காவை இஸ்லாம் ஆளும், இன்ஷா அல்லாஹ்
  அமெரிக்காவை இஸ்லாம் ஆளும், இன்ஷா அல்லாஹ்   
இஸ்லாத்தையும், உத்தம தலைவரையும் கிறிஸ்தவ, யூத சியோனிச பயங்கரவாதம் எதிர்ப்பதற்கு காரணம் என்ன?
அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் மிக வேகமாக பரவும் மார்க்கம்.
முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.
சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.
இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.
அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.
அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த பத்து வருடங்களில் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையானது வியக்கத்தக்கவகையில் அதிகரித்துள்ளது. பள்ளிவாசல்களை அமைப்பதற்கான பொதுத்தடை இருந்தபோதிலும், பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2000 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் அமெரிக்காவில் 1209 பள்ளிவாசல்கள் மாத்திரமே காணப்பட்டது.எனினும் தற்போது அமெரிக்காவில் 2106 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றதாக கணக்கெடுப்பொன்று தெரிவிக்கின்றது. 2000 ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 74சதவீத அதிகரிப்பாகும்;.அதிகமான முஸ்லிம்கள் புறநகர் வாழ்க்கையைத் தழுவிவாழ்வதாகவும் இது காட்டுகின்றது.
நகர் பகுதிகளிலேயே பள்ளிவாசல்களின் எண்ணிக்கை கூடியளவில் அதிகரித்துள்ளது.2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது புறநகர்பகுதிகளில் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 16 சதவீதத்திலிருந்து 28 சதவீதம்வரை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் அதிபட்சமாக 257 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக கலிபோர்னியாவில் ஏறத்தாள 256 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன.
பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதானது அமெரிக்காவில் இஸ்லாம் மிகவேகமாக வளாந்துவரும் சமயமாக விளங்குகின்றது என ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்போது இருக்கும் இஸ்லாமிய எண்ணிக்கையை பார்க்கும் போது 2020 ல் அமெரிக்காவை இஸ்லாம் ஆளும் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹு அக்பர் !!! அல்லாஹு அக்பர் !!!
அயோக்கிய கூட்டத்தின் திரிபுவாதங்கள் தவிடுபுடியாகும். இன்ஷா அல்லாஹ்...
Thanks,,, Only One Ummah...

Saturday, September 15, 2012

நவீன ஜாஹிலிய்யத்தில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்கள்.....!

பெண்கள்.....! 
உலகிலே பெண்களுக்கான சுதந்திரம் கண்ணியம் கொளரவம், பாதுகாப்பு போன்ற உன்னத உரிமைகைளை உலகமே வழங்காத போது, ஆயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன், இஸ்லாம் பெண்களுக்கென வழங்கி, பெண்களும் சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர்கள் என்பதை பறைசாற்றியது.
"ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.’ (அல்குர்ஆன் 07:26)
அதில் ஒரு அமசம்தான் ஹிஜாப் அணிவது. இது இஸ்லாம் பெண்களுக்கென வழங்கிய ஓர் சுதந்திரமான சட்டமாகும். அறைகுறை துணிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொறுகிக் கொண்டு, இதுதான் சதந்திரம் என்று நடமாடும் மானம் கெட்ட அநாகரீக கூப்பாடிகளுக்கு மத்தியில், வலைத் தளங்களிடையே ஹிஜாப் ஓர் விமர்சன அம்சமாக நோக்கப் படுவதை பார்க்கிறோம்.
மேற்கத்தேய நாடுகிளில் ஹிஜாபுக்கெதிரான சதித் திட்டங்கள் தீட்டப் படுவதும், பின் அதர்க்கான வாக்கெடுப்புகள் நடந்தேறுவதும், பல எதிர்ப்பு ஆர்பாட்டங்களினால் அவைகள் இரத்துச் செய்யப் படுவதுமாய், சமீபத்திய நடப்புக்கள் நமக்குச் சொல்லி நிற்கிறது. இத்தனைக்கும் மத்தியில் நம் முஸ்லீம் பெண்களில் அசமந்தப் போக்குள்ள சிலர், இதனை ஆதரிப்பது போல், ஹிஜாபுகளினால் தன்னை அப்பட்ட விபச்சாரி என்று, சொல்லாமல் சொல்வதை, அவர்களின் ஆடையணிவதின் இலட்சணத்தை வைத்து, யாரும் அறிந்து கொள்லளாம்.
தன் கணவனிடம் காட்ட வேண்டிய அழகுகளை தெருவில் செல்லும் தெரு நாய்களிடம் காட்டி தன் அழகு மெச்சப் படுவதை அவள் விரும்புவதையும், அதர்க்கு கொஞ்சம் கூட எதிர்ப்ர்பு தெரிவிக்காமல் சூடு சுரணையற்று இருக்கும் கணவன்மார்களையும் பார்க்கும் போது நபியவர்கள் கூறிய முன்னறிவிப்புகள் நிஜமாவதை காணமுடிகிறது.
"உலக அழிவு நாளின் நெருக்கத்தில் பெண்களின் மூலமாக இந்த சமுதாயத்தில் நிகழும் "சமூக ஒழுக்க சீர்கேடுகளை" குறித்து எச்சரிக்கை செய்தார்கள். அதில் ஒன்றுதான் ஆடை குறைப்பு, அன்று அவர்கள் சொன்னது இன்று பெண்களால் கச்சிதமாக அரங்கேற்றப்படுவதை காணும்பொழுது நம்மை நெருங்கிவிட்ட மருமையை உறுதிப்படுத்திக் கொள்ளமுடிகிறது.. ஆயினும் நம்மில் பலர் இது குறித்து கவலை கொள்ளாதது நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.
அறியாமைகால "யூத கிறித்துவ" அநாகரீகங்களை நாகரீகம் என்று செய்து வரும் பெண்களில், நமது பெண்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர், என்று என்னும் பொழுது வெட்க்கித்தலைகுனிய வேண்டியுள்ளது. .
நபியவர்கள் கூறினார்கள், ‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-4316)
குறைந்துவிட்ட ஆடை:
இன்று ஆடைகளை மேலே குறைத்துக்கொள்வதும், கீழே குறைத்துக்கொள்வதும், நாகரீகம் ஆகிவிட்டது. இது போதாது என்று இறுக்கியும் கொள்கின்றனர். அது உண்டாக்கும் விளைவுகளை குறித்து யாரும் கவலை கொள்வது கிடையாது. அரசும் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிப்பதும் கிடையாது. மாறாக, இதனால் பாலுணர்வு தூண்டப்பட்டு, லேசாக தடுமாறும் ஆண்களைத்தான் "ஈவ்டீசிங்" என்ற பெயரில் கொண்டுபோய் குமுறு, குமுறு என்று குமுறுகின்றனர். அதற்க்கு காரணமானவர்களை விட்டுவிடுகின்றனர். காமத்தை கலையாகவும், ஆபாசத்தை ஆன்மிகமாகவும்,கொண்ட நாடும் அதைச்சார்ந்த அரசும் வேண்டுமானால் இப்படிப்பட்ட ஆடைகளுக்கு தடை விதிக்காமல் இருக்கலாம். ஆனால் ஆபாசத்தை ஆபாசமாகவே பார்க்கவேண்டும் என்று கருதக்கூடிய, அதை கண்டிக்கக்கூடிய இஸ்லாத்தை, கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம் நாடுகளிலேயே இந்தகூத்துக்கள் அரங்கேருவதுதான் வேதனையிலும் வேதனை.
பாலுனர்வைதூண்டுதல்:
ஆடைகளை இறுக்கியும், குறைத்தும் அணிவதால் மறையவேண்டிய பகுதிகள் மறையாமலும், இறுக்கத்தினால் உடலுறுப்புக்கள் நெறிக்கப்பட்டு, பெண்ணிடம் பாலுணர்வை தூண்டக்கூடிய கனபரிமாணங்கள் மெருகூட்டப்பட்டு, கவர்ச்சியின் விளிம்பிற்கே சென்று, ஆண்களின் கண்களையும், சிந்தனையையும் தன்பக்கம் ஈர்த்துவிடுகிறது. சில ஆண்கள் தங்களின் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் வரம்பு மீறும் சூழ்நிலை ஏற்படுகிறது. .இதனால் பாதிப்பு என்னவோ இரு தரப்பினருக்கும் தான். இருந்தாலும் அனேக ஆண்கள் கூச்ச உணர்வின் காரணத்தால் தலைகுனிந்து விடுவதையும் காணமுடிகிறது. ஆண்களுக்கு இருக்கும் இந்த வெட்க உணர்வும் பெண்களிடத்தில் இல்லாமல் போனது ஏனோ?
திரைஅரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும், இணையதலங்களிலுமே ஆபாசத்தை கண்டு பிஞ்சிலேயே பழுத்துவிட்ட சிறுவர்கள், திரைகளே இல்லாமல் live ல் காணும் பொழுது, மென்மேலும் கெட்டு நாசம் அடைகின்றனர். காதல் கத்திரிக்காய் என்று சிறுவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கிறது. இளைய சமுதாயமே சீரழிந்து வருகிறது
ஆடை எந்த நோக்கத்திற்காக அணியப்படுகிறதோ,அந்த நோக்கம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டத்தையும் காணமுடிகிறது. மறையவேண்டிய மர்ம உறுப்புக்கள், மறையாததாலும், பாலுணர்வை தூண்டுவதாலும் ,இப்படிப்பட்ட ஆடைகள் ஆடைகளே அல்ல, மாறாக இத்தகைய ஆடைகளை அணிந்திருக்கும் பெண்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருபப்வர்களைப் போன்றவர்கள் என்பதுதான் உண்மை.
குறைத்து அணிந்தாலே போதும் என்ற நிலையில் இருக்கும் ஆண்களே கூடுதலாக உடையணிந்து கண்ணியமாக இருக்கும்போது கூடுதல் ஆடையனியவேண்டிய பெண்கள் குறைத்து அணிவது எந்தவகையில் ஏற்புடையதாகும். இப்படிப்பட்ட கழிசடைகளைப்பற்றிதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உலக அழிவு நாளின் அடையாளமாக பின்வருமாறு கூறுகிறார்கள்.
ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம்]
அன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன இந்த நிகழ்வு , இன்று நாம் காணும் பொழுது நம்மை நெருங்கிவிட்ட மறுமையின் நெருக்கம் உறுதியாகிறது.
இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு:
ஒழுக்கத்திலும், பண்பாட்டிலும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும், முதுகெலும்பாகவும் இருக்கவேண்டிய நமது பெண்கள் ஆபாச யூத, கிருத்துவ கலாச்சாரத்தில் மூழ்கி அவர்களையே மிஞ்சிவிடும் அளவுக்கு சென்றுக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக செல்வம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் இந்த அவல நிலையைக் காணலாம். நமது அரபு பெண்களின் அட்டுழியங்களும், மார்க்கமுரனான காரியங்களையும் சொல்லிமாளாது. இறுக்கமான பேன்ட்டும், இறுக்கமான பனியன்களும் அணிந்துக்கொண்டு மார்புகள்மீது துணியே(கூடுதல்) இல்லாமல் இரு விரல்களுக்கு இடையில் சிகரெட் வைத்துக்கொண்டு கூத்தடிப்பதும், கும்மாளம் அடிப்பதும் காணும் பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய அந்த அரபு சமூதாயம் எங்கே?என்று என்ன தோன்றுகிறது.
இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்பைத்தேடி செல்லும் நமது பெண்மணிகளும் இவர்களுடைய இந்த நாகரீகத்தில்(?) தடம்புரண்டு தாவிவிடுகின்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று அலசுவோமேயானால் இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வு அறவே எடுபட்டுபோனதுதான்.
நமது தந்தை நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும்,தாய் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் இருந்த வெட்கம் குறித்து இறைவன் கூறும்பொழுது....
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான். (அல்குர்ஆன் 7:22)
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவரது மனைவி ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால், ஏக இறைவனால் தடை செய்யப்பட்ட குறப்பிட்ட மரத்தின் கனியை சுவைத்ததால் தங்களுக்கு வெட்கத்தலங்கள் ஏற்பட்டதை உணர்ந்தனர்.உடனே வெட்க்க உணர்வின் காரணத்தால் அங்குள்ள மரத்தின் இலைகளால் மர்ம உறுப்புக்களை மறைத்துக்கொள்ள முற்ப்பட்டனர் என்று இறைவன் கூறுகிறான்.
ஆபாசம் தொடர்பான சட்ட திட்டங்களை இறைவன் கூறுவதற்கு முன்பே அது தொடர்பான உணர்வு அவர்களிடத்தில் இருந்திருக்கிறது என்பதை இந்த வசனத்திலிருந்து அறியமுடிகிறது. ஆனால் இன்றுள்ள நமது பெண்கள், இறைவன் கூறிய ஆபாசம் குறித்த சட்ட திட்டங்களை தெளிவாக அறிந்த பிறகும் அதில் மேம்போக்கான நிலையில் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வெட்க்க உணர்வின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் இறையச்சத்தோடு தொடர்புபடுத்தி பின்வருமாறு கூறுகிறார்கள்:
'ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' (நூல்; புகாரி, எண் 9) .
'அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றார்கள். உடனே, 'அவரை(க் கண்டிக்காதீர்கள்;) விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.
வெட்கத்தை இறை நம்பிக்கையோடு தொடர்புபடுத்தி கூறியுள்ளதால் வெட்கத்தில் குறை வைப்போமேயானால் அது இறை நம்பிக்கையில் குறையை ஏற்ப்படுத்தும். எனவே இறை நம்பிக்கை முழுமையடையாமல் போய்விடும்.ஆகவே வெட்க்கவிஷயத்தில் பெண்கள் கவனமாகவும் பேணுதலாக இருக்கவேண்டும்.
வெட்கம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக இறைவன் கொடுத்த ஆயுதம் என்றும் சொல்லலாம்.இந்த ஆயுதத்தை பெண்கள் பேணுதலாக பயன்படுத்தினாலே அவர்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களை குறைத்துவிடலாம். எஞ்சியவைகளை வேறு வழிகளில் ஒழித்து விடலாம்.
அன்றைய பெண்களும் இறையச்சத்துடன் கூடிய வெட்க உணர்வும்:
ஜாஹிலிய்யத்திலும் இது போன்ற அறை குறை ஆடை அரங்கேரி இருந்த போது, அல்லாஹ்வின் வேத வசனங்கள் அப்பெண்களின் செவிகளில் விழுந்த பொழுது, தங்களின் திறந்த வெளி பெண் உடல்கள் பாதுகாப்பு வலயங்கள் போன்று ஆடையணிய ஆரம்பித்தார்கள் என்பதை வரலாறு நமக்கு சொல்லி நிற்கிறது.
அன்றைய பெண்களிடம் இருந்த வெட்க்க உணர்வையும்,இறையச்சத்தையும்,அறிந்து கொள்வதற்கு முன் அது தொடர்பான சில உண்மைகளை அறிந்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் ,(ஏனைய சஹாபி பெண்களும்) தனது சுய தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொழுது சாதாரண உடையிலேயே செல்லும் பழக்கம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்.அந்நிய ஆண்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஆடைகள் போதாது என்ற காரணத்தினால்,கூடுதல் ஆடை அணிவதை வலியுறித்தி, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதை கண்டுக்கொள்ளவில்லை.ஒரு தடவை நபி ஸல் அவர்களின் மனைவிகளில் ஒருவரான ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா ஓர் இரவு நேரத்தில் கழிப்பிடம் நாடி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இவர்களின் உயரத்தை வைத்து, இறைதூதரின் மனைவிதான் (இறைதூதர் மனைவியரிலேய அவர்தான் உயரமானவர்கள்) என்பதை அறிந்துக்கொண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஸவ்தா அவர்களே! நீங்கள் யாரென கண்டுகொண்டோம் என்று உரத்த குரலில் அழைத்துள்ளார். அப்பொழுதாவது கூடுதல் உடை அணிவது தொடர்பான சட்டம் அருளப்படாதா என்ற ஆசையில்! அப்பொழுதான் பின்வரும் இறைவசனம் இறங்கியது.
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்ஆன் 24:31)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தி புகாரியில் (பாகம் 1, அத்தியாயம் 4, எண் 146) பதிவு செய்யப்பட்டுள்ளது.
''இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.'' (அல்குர்ஆன் 4:13)
எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 4:14)
ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:124)
இறைவனுக்கும், அவனது தூதருக்கும், எவர் மாறு செய்கிறார்களோ! அவர்களின் நிலை குறித்தும்,எவர் கட்டுப்படுகிறார்களோ அவர்களின் நிலை குறித்தும் மேற்கூறிய வசனத்தில் இறைவன் தெளிவு படுத்திவிட்டான்.எனவே ஆடை குறித்த சட்டத்தை பின்பற்றி, அவனுக்கு(இறைவனுக்கு) கட்டுப்பட்டும், நபி ஸல் அவர்கள் வலியுறுத்திய இறையச்சத்துடன் கூடிய வெட்க்க உணர்வை பின்பற்றி, நபிஸல் அவர்களுக்கு கட்டுப்பட்டும் வாழ்வதன் மூலம் நம் சமூதாய பெண்கள் மறுமை வெற்றிக்கு வழி செய்து கொள்ள வேண்டும்.
இறையச்சமுள்ளவர்களுக்கு இதுவே போதுமானதாகும்.
நன்றி: அன்ஸார் & முபாரக்

Friday, September 14, 2012


இவ்வார ஜூம்ஆ உரை (14.09.2012)
குத்பா உரை: மௌலவி இத்ரீஸ் ஹஸன்
தலைப்பு: இஸ்லாமிய எழுச்சி




Thursday, September 6, 2012


இவ்வார ஜூம்ஆ உரை (07.09.2012)
குத்பா உரை: மௌலவி அஸ்பர் ஹஸன் (பலாஹி)
தலைப்பு: இஸ்லாமிய தலைமைத்துவமும் அதன் பொறுப்புக்ளும்



Saturday, September 1, 2012

இஸ்லாத்தின் பார்வையில் தாடி.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435

மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில் தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.

வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27)

ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வன்னம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வன்னம் படைத்திருப்பான்.

தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன.

விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.

சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம் பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 - 25 வயதெல்லையுடைய எட்டு இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார்.

1.முழு தாடியுடன்

2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்

3. மீசையுடன்

4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)

ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது. Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும்,அழகிய தோற்றமுடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும்.

தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.

மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும். தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes என்பவரின் கருத்து.

இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது.

நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்”.

முஸ்லிம்கள் ஏன் தாடி வளர்ப்பதில் பின்வாங்குகின்றனர்?

அநேக முஸ்லிம் சகோதரர்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும் அவர்களின் மனைவிமார்களுக்காக வேண்டி தாடியை மழிக்கும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது. இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவர்கள் தாடி வளர்ப்பதை இழிவாகக் கருதுகின்றனர். மீசையை ஒட்ட கத்தரித்து தாடியை வளர்ப்பது இறைத் தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சிறந்த காரியம் என்பதை இப் பெண்கள் மறந்து விட்டனர். தாடி வைக்காத கணவர்களுக்கும் தாடியின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி கணவர்களுக்கு தாடி வைக்க ஊக்குவிக்கக்கூடியவர்களாக பெண்கள் இருக்க வேண்டும்.

மேலும், ஊடகங்களும் தாடி வைத்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவதால் இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் கூட தாடி வைப்பதில் பயந்த நிலையில் உள்ளனர்.

மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாடி வளர்ப்பதை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அழகாகவும், மற்றவர்கள் விரும்பும் வன்னம் வைக்க வேண்டும் எனவும் காட்டித் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி 5899

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது.

ஆதாரம்: புஹாரி 5923

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக் கொள்கின்றனர். அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது. அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாதுள்ளது. இத்தகைய நிலையில் ஆண்கள் தாடி வைப்பதானது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெருவோம