widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Sunday, October 23, 2011

இவர்கள் யார் என்று தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர்கள் இப்போது எங்கே?

"பாபரி மஸ்ஜிதை இடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் , இடிக்கபட்ட அன்று பள்ளியின் மேலே உச்சியில் (குப்பாவில்) நின்று அதை ஆவேசத்துடன் இடித்த இரு இளைஞர்கள் தங்கள் இடித்த பள்ளியின் இடிபாடுகளின் கல்லை தங்களின் சொந்த ஊருக்கு எடுத்து சென்றுள்ளார்கள்.பாணிப்பூர் என்ற ஊரை சேர்ந்த அந்தஇரண்டு இளைஞர்களும் அந்த இடிபாடுகளை ஒரு பள்ளிவாசல் முன்பு கொட்டி அதில் சிறுநீர் கழித்து அங்குள்ள இஸ்லாமியர்களை மனம் புண்பட செய்துள்ளனர்.

அல்லாஹ்வின் இறை இல்லத்தை இடித்த இவர்கள் இரண்டு பேரின் நிலை அடுத்த மூன்று நாட்களில் தலைகீழாக போனது இருவருக்கும் உச்சகட்ட பைத்தியம் பிடித்தது , பைத்தியம் என்றால் கடுமையானது தன்னை தானே நிர்வாணம் ஆக்கி கொள்வது , கண்ணில் படும் பெண்களின் ஆடைகளை கிழித்து உறவு கொள்ள முயற்சி செய்யும் அளவிற்கு கொடுமையாக இருந்தது., தனது தாயுடனே உறவு கொள்ள முயற்சி செய்யும் கொடிய நிலைக்கு இவர்கள் ஆளாகி போனார்கள் (அல்லாஹு அக்பர் ).இந்த இருவரின் குடும்பம்மும் நல்ல வசதி வாய்ப்பை உடையது. இந்த நோய்க்கு மருத்துவம் செய்ய பல இடங்களின் முயன்று அனைவரும் கைவிட அந்த இருவரின் பெற்றோரும் அமெரிக்காவில் உள்ள எனது மனதத்துவ ஆசிரியரை தொடர்பு கொண்டு மருத்துவம் செய்ய அழைக்க அவர் தற்போது தன்னால் வரமுடியாது என்று சொல்லி எனது மாணவர் இந்தியாவில் இருக்கிறார் அவரை அழைத்து பாருங்கள் என்று சொல்லிரிக்கிறார். அவர்கள் என்னை அழைக்க நான் அங்கு சென்று பார்த்தேன்.., (சுபஹானல்லாஹ்) இந்த நோயின் தன்மையானது சுமார் ஆறுமாத காலம் எடுத்துதான் இந்த நிலையை அடைய முடியும் . இது தான் அறிவியலின் நிலை ஆனால் இந்த இருவருக்கும் வந்திருப்பது ஆச்சரியமானது , மூன்று நாட்களில் இவர்களுக்கு இந்த நோய் உச்சத்தை அடைந்து விட்டது. இதற்க்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டேன். அவர்கள் என்னிடம் பாபரி மஸ்ஜிதை இடித்த பிறகுதான் இப்படி ஆகியது என்று சொன்னார்கள் ஆதலால் வேறு வழி இல்லை என்பதால் நீங்கள் பள்ளியில் இருக்கும் இமாம்களிடம் ஓதி பாருங்கள் என்று சொல்லி விட்டு நான் வந்து விட்டேன். நான் அப்போது இஸ்லாமியனாக இருந்தவனில்லை எனினும் சும்மா சொல்லிட்டு வந்தேன் ஆனால் நான் சொன்னதை மனதில் வைத்து டெல்லியில் பெரிய பள்ளியில் இமாமை சந்தித்து நடந்ததை அழுது புலம்பி சொல்லி இருகிறார்கள் இவர்களின் பெற்றோர்கள். இவர்கள் செய்த காரியத்திற்கு அல்லாஹ்வே தண்டனை வழங்கி உள்ளான் நீங்களே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் , நானும் இவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் ஆனால் இவர்களுக்கு குணமானால் என்ன செய்வீர்கள் என்று அந்த இமாம் கேட்க,என்ன வேண்டாலும் செய்வோம் என்று சொல்லி இருகிறார்கள் அவர்களின் பெற்றோர்கள்.., இமாம் அவர்கள் இருவரையும் இஸ்லாத்தில் இணைத்து விடுங்கள் என்று சொல்லி இருகிறார் அதை ஏற்றுக்கொண்டு பள்ளி வாசலில் அழுது புலம்பி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கூறி உள்ளனர் அனைவரும்... அல்லாஹு அக்பர் - அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அவர்கள் பள்ளிவாசலை விட்டு வெளிஏறி வந்த உடனே( சுபஹானல்லாஹ் - அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் )தங்களின் நிர்வாண கோலத்தை மறைக்க தனது தந்தையின் தலை பேட்டாவை எடுத்து மறைதார்களாம் அந்த இருவரும்.-அல்ஹம்துலில்லாஹ்.நான் இதை அந்த இமாம் இடத்திலையே நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டேன். தற்போது இருவரும் இஸ்லாத்தில் இணைந்து எந்த கையால் பள்ளி வாசலை இடித்தார்களோ அதே கையால் பல பள்ளிவாசலை கட்டி வருகிறார்கள் , இங்கு கூட சேலத்தில் ஒரு பள்ளி வாசல் கட்டி வருகிறார்கள். நான் இஸ்லாத்திற்கு வந்த செய்தி அறிந்து என்னை இருவரும் நேரடியாக சந்திக்க வந்தனர்.

News :  டாக்டர் .அப்துல்லா (பெரியார்தாசன்) 

Monday, October 10, 2011

கஷ்டத்திலும் கருணை செய்பவன்

சிலருக்கு உடல்ரீதியாக சிறுபாதிப்பு வந்துவிட்டாலே போதும். ""ஐயோ! இறைவா! என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய். என்னைச் சோதிப்பதே உனக்கு வாடிக்கையாகப் போய்விட்டதே!'' என்று புலம்பித் தீர்க்கிறார்கள். இறைவனிடம் நமக்கு தேவையானதைக் கேட்பதில் தவறில்லை. இருப்பினும், இப்படி புலம்புபவருக்கு சில நாட்களுக்கு முன்பு, ஏதோ ஒரு நன்மை நடந்திருக்கும். ஒருவர் கார் வாங்கியிருப்பார், இன்னொருவர் வீடு வாங்கியிருப்பார். ஒரு பெண்மணி நகைகள் வாங்கியிருப்பார். அப்போதெல்லாம், இறைவனுக்கு நன்றி சொல்லக்கூட மறந்த இவர்கள், கஷ்டம் வந்ததும் மட்டும் இறைவனிடம் புலம்புவார்கள். ஆனால், இந்த சம்பவத்தைக் கேட்டால், இவ்வாறு புலம்புவது சரியா, தவறா என தெரிய வரும். ஒருசமயம் மதீனா நகரத் தெரு ஒன்றில், பார்வைற்ற தொழுநோயாளி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த ஹலரத் உமர் பாரூக் (ரலி) அவர்கள், தன் பக்கத்தில் இருந்த நாயகத்தோழர்களைப் பார்த்து, ""இம்மனிதர் மீது இறைவனின் நிஃமத்து உண்டா?'' என்று கேட்டார்கள். உடனே நாயகத்தோழர்கள்,""பார்வையற்றவராகவும், உடல் முழுக்க தொழுநோய் பாதிப்பும் உள்ள இம்மனிதருக்கு அப்படி என்ன நிஃமத் இருக்கிறது?'' என்றார்கள். உடனே ஹலரத் உமர்பாரூக்(ரலி) அவர்கள், ""அவருக்கு அல்லாஹுத்த ஆலா சிறுநீர்க்குழாயைச் சரியாகக் கொடுத்திருப்பதால், அதற்காக இவரும் அல்லாஹ்விற்கு நன்றி செ<லுத்த வேண்டும்,'' என்றார்கள். எனவே, ஒவ்வொரு மனிதனும் இறைவனுக்கு நன்றி செலுத்த கடன்பட்டவனாகவே இருக்கிறான். தெரிந்து கொண்டீர்களா! கஷ்டமாக இருந்தாலும் கூட, அப்போதும் நமக்கு இருக்கிற ஏதோ ஒரு வசதிக்காக இறைவனுக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தியே தீர வேண்டும். சோதனைகளை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவனின் அருள் மிகவும் உயர்ந்தது என்பதை உணர வேண்டும். அப்படியானால் தான்இறைவனின் கருணைக்கு நாம் பாத்திரமாவோம்.

நான் அரசர் அல்ல!

ஒரு சமயம் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப்பட்ட ஒருவர், அவர்களைக் கண்டு பயப்பட்டார். திருநபி (ஸல்) அவர்கள், அந்த மனிதரை நோக்கி, ""நான் அரசர் என்று நீர் நினைக்காதீர். காய்ந்த மீனை உண்ணக்கூடிய குறைஷியர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்தான் நான்,'' என்றார்கள். என்னை உங்கள் உயிருக்கு மேலாக, உங்கள் பெற்றோருக்கு மேலாக, உங்கள் பிள்ளைகளுக்கு மேலாக, உலகப் பொருள் அனைத்திற்கும் மேலாக நேசிப்பவரே உண்மை முஃமினாக முடியும்,'' என்றும் அவர்கள் கூறினார்கள்.

Wednesday, October 5, 2011

பதவி தானாகவே வரட்டும்!


* உங்களில் சிலருக்கு, வேறு சிலரை விட உயர்ந்த படித்தரங்களை அவன் (இறைவன்) வழங்கியிருக்கிறான். 
* இறை நம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள். இறைவனுக்கு 
அஞ்சுங்கள், நீங்கள் வெற்றி பெறக்கூடும்.
* எவரிடத்தும் எதற்காகவும் கையேந்துவதில்லை என்ற உறுதிமொழியை ஒருவர் எனக்கு அளித்தால், அவர் சுவனம் (சொர்க்கம்) செல்வதற்கான உறுதிமொழியை நான் அவருக்கு அளிக்கிறேன்.
* எவருக்கும் உரிமை இல்லாத நிலத்தை, எவர் உழுது பயிரிடுகிறாரோ அந்நிலத்தின் மீது அவருக்கே அதிக உரிமை உண்டு.
* எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ, அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.
* நெருப்பால் தண்டனை வழங்குவதற்கு நெருப்பின் அதிபதியைத் தவிர (இறைவனைத் தவிர) வேறு யாருக்கும் உரிமை கிடையாது.
* மனிதர்களில் சிறந்தவர்கள், பதவி தானாகவே அவர்களை வந்தடையும் வரை அதனை அறவே விரும்பாதவர்களாகவே இருப்பார்கள்.

முயற்சிக்கு கூலியுண்டு


* பிறப்பில் அனைவரும் தூய்மையானவர் களே! ஒருவர் செய்யும் பாவமே அவரைக் களங்கப்படுத்துகிறது. அக்களங்கத்தை அவரே போக்க வேண்டும்.
* எவரெவர் எதைச் சம்பாதிக்கிறார்களோ அதற்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். மேலும், ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன்6:164)* மனிதனுக்கு, தான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவுமில்லை. இன்னும் அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும். பின்னர் அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும்.  (திருக்குர்ஆன்53:38-41)* ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறான் எனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும். ஒருவன் நெறிதவறிப் போகிறானெனில் அவனுடைய நெறி தவறிய போக்கு அவனுக்கே தீங்கு விளைவிக்கும். சுமையைச் சுமக்கும் எவரும் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். (திருக்குர்ஆன்17-15)(வேத வரிகளும் தூதர் மொழிகளும்

எங்கே செல்லும் இந்தப் பாதை



ஏகஇறைவனின் திருப்பெயரால்...


قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ {1} اللَّهُ الصَّمَدُ {2} لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ {3} وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ {4

1. ''அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! 2. அல்லாஹ் தேவையற்றவன். 3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. 4. அவனுக்கு நிகராக யாருமில்லை.112:1,2,3,4
அம்மனா அவ்லியாவா  

அம்மன் கோயில் கட்டி வழிப்படும் முஸ்லீம் தம்பதிகள் என்ற தலைப்பிட்டு சமீபத்தில் சில ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி இருந்தன. 
சிதம்பரம் அருகில் கிள்ளை என்ற கிராமத்தில் தான் மேல்படி சம்பவம் நடந்துள்ளது அம்மனுக்கு கோயில் கட்டி அதற்கு ''' மஹா மாரியம்மன் ஆலயம்'' என்றுப் பெயரிட்டு தீப ஆராதனை ஏற்றி வேத மந்திரங்களை புர்கா அணிந்த பஷீரா என்ற முஸ்லிம் பெண்ணே ஓதி காலைமாலை பூஜை நடத்தி வருவதாகவும் அதற்கு அவரது கணவர் ஜின்னா முழு ஆதரவு அளித்து வருவதாகவும் அதை ஏராளமான பக்தபக்தையர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்கின்றனர் என்று தொடருகிறது அந்த செய்தி.

உருவ வழிப்பாட்டை ஒழித்துக்கட்டிய இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்து வளர்ந்த நீங்கள் அம்மனுக்கு கோயில் கட்டி வழிப்பாடு செய்வதற்கு எது காரணமாக இருந்தது என்று நிருபர் கேட்க பத்து வருடங்களுக்கு முன் மாரியாத்தா எனது கணவில் தோன்றி தனக்கு கோயில் கட்டி வழிபடச் சொன்னதாக மிகவும் பக்தி பரவசத்துடன் பதில் கூறினாராம் பஷீரா.

பஷீராவின் கணவில் அம்மன் தோன்றியது உண்மை என்றால் பஷீரா வாழும் காலத்தில் அம்மனை பலத் தடவை நேரில் சந்தித்துப் பேசி இருக்க வேண்டும்அம்மனை இவர் நேரில் பார்த்ததில்லை அம்மன் இன்ன வடிவில்தான் இருப்பார் என்றும் இவருக்குத் தெரியாது இவரல்லாமல் அம்மனுக்கு கோவில் கட்டி அன்றிலிருந்து இன்றுவரை வழிப்படும் ஹிந்துக்களிலும் எவரும் அம்மனை நேரில் பார்த்தவர்கள் கிடையாது. 

கிள்ளையில் அல்லது பக்கத்து ஊரில் உள்ள அம்மன் சிலையை பஷீரா அடிக்கடிப் பார்த்திருக்கலாம். அம்மனின் கற்சிலை பஷீராவின் கணவில் காட்சி அளித்திருக்கலாம். பன்றிகள் அதிகம் மேயும் வழியாக போய் வரும் நிலை முஸ்லீம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவரது கணவில் பன்றிகள் காட்சி அளிக்கவேச் செய்யும் பன்றிகளை கணவில் கண்டதற்காக அதை அவர் ஹலாலாக்கிக் கொள்;ள முடியுமா 

இணை வைப்பாளர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் இணைவைப்பு பிரச்சாரம் சமீப காலமாக சூடு பிடித்திருப்பதால் அது பஷீராவின் மனதில் மாற்றத்தை எற்படுத்தி இருக்கலாம். பஷீரா ஜின்னா தம்பதிகள் வசிக்கும் பகுதியில் ஹிந்துக்கள் அதிகம் என்பதால் அங்கே தர்ஹா கட்டினால் கல்லா (உண்டியல்) நிறையாது என்றுக் கருதி கோயிலைக்கட்டி வசூலை முடுக்கி விட்டிருக்கலாம்;.

காரணம் கணவில் தோன்றி ஆலயம் அமைக்கக் கூறியதாக கரடி விடுவதெல்லாம் மற்ற மதத்தவர்களை விட நம்மவர்களிடம் அதிகம் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. தமிழகத்தின் தர்ஹாக்களின் வரலாறுகளில் 100 சதவிகிதம் பஷீரா விடும் கணவு புருடாவாகவே இருக்கும்.

வள்ளலாரா வல்லோன் ரஹ்மானா ?


திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த அமானுல்லாஹ் என்பவர் வயிற்றுப் பிழைப்புக்காக  சென்னைக்கு வேலை தேடிச் சென்றுள்ளார் ஃபோட்டோகிரப்பராக வேலையும் கிடைத்துள்ளது அதனால் பிறரிடம் யாசிக்க வேண்டியத் தேவை இல்லாத அளவுக்கு வயிறு நிறைந்துள்ளது இதற்கே இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளார் அமானுல்லாஹ்.

இதுவும் கிடைக்காமல் கூலித் தொழில் பார்த்தும் யாசித்தும் பிழைக்கக் கூடியவர்கள் எத்தனையோப் பேர் இதையாவது இறைவன் கொடுத்தானே என்று நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதைக் கண்டிருக்கிறோம்.


ஃபோட்டோகிராப்பராக வேலை கிடைத்ததில் அமானுல்லாஹ்வுக்கு வயிறு மட்டும் நிறைந்து வங்கிக் கணக்கு நிறையாமல் இருந்தது வருத்தத்தை அளித்திருக்கிறது. வங்கிக் கணக்கை நிறைக்கும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அமானுல்லாஹ்விடம் திடீரென சந்தித்த ஏழுமலை என்கிற  சகோதரர் வள்ளலார் ராமலிங்க அடிகளாரை தரிசித்தால் காசு கூரையைப் பிய்த்துக்கொண்டுக் கொட்டும் என்றுக் கூற இது தான் சிறந்த வழி என்று அமானுல்லாஹ்வுக்கு பொறி தட்ட வள்ளலாருக்கு கோயில் கட்டி உண்டியலை நிறைத்து அதன் மூலம் வங்கிக் கணக்கை நிறைப்பதற்கும் ஒரு சாய்பாபாவைப் போலவோ
நித்யாணந்தாப்போலவோபாபா ராம்தேவைப் போலவோ ஆவதற்கும் ஆசைப்பட்டுவிட்டார் அமானுல்லாஹ்.


வள்ளலாரின் பக்தர்கள் நிறைந்துள்ள வடலூருக்கு ஏழுமலையுடன் சென்று வள்ளலாரின் சரித்திரத்தை தெரிந்து கொண்டுத் திரும்பியதும் தாமதமின்றி வள்ளலாருக்கு கோயில் கட்டி தினந்தோறும் பூஜை செய்து அன்னதானமும் வழங்கி வியாழன் தோறும் சிறப்பு சொற்பொழிவு நடத்த ஆரம்பித்து விட்டார் அமானுல்லாஹ்.  

வள்ளலாரை தரிசித்து விட்டு வந்தப் பின்னர் தான் சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்ததாக நிருபர்களிடம் புருடா விட்டுள்ளார் அமானுல்லாஹ்.


வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி) நூல்கள்: புகாரீ 
844, முஸ்லிம் 933

உலக வாழ்வு அழியக் கூடியதே மறுமை வாழ்வே நிரந்தரமானது என்ற உயர்ந்த கோட்பாட்டை உடைய இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த இவர்கள் நிரந்தரமில்லாத உலக சுகபோக வாழ்விற்காக உயர்ந்த கொள்கையை விட்டுக் கொடுத்து வழி கெடுவதற்கு  எது காரணம் ?

கடவுள் பெயரைக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி ஏராளமான செல்வங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் சாமியார்கள் மட்டும் காரணமல்ல. 

மாறாக தர்ஹா கட்டி அதில் மன்னறை அமைத்துஊதுவத்தி சாம்ப்ரானிக் கொளுத்தி இல்லாத அவ்லியா பெயரில் ஃபாத்திஹா ஓதி பக்தர்களுக்கு மயில் இறகால் மண்டையில் தடவி விட்டு உண்டியலுக்கு பாதி தனக்குப் பாதியை ஒதுக்கி வயிறு வளர்க்கும் முஸ்லீம் பெயர் தாங்கிகளும் அவற்றிற்கு வாக்காலத்து வாங்கும் ஜமாலியாக்களும் முக்கிய காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. 

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் வெடித்து சில தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட்டது பல தர்ஹாக்கள் டம்மியாக்கப்பட்டு வெளி ஊர் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையாக்கப்பட்டது. இதைக் கண்டு ஷைத்தான் சும்மா இருப்பானா ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி வடிவில் தமிழகத்தில் கால் ஊண்டினான். 

மனிதர்கள் எழுதிய மத்ஹப் சட்டங்களை உண்மைப் படுத்தியும்ஏகஇறைவனுக்கு இணைவைக்கும் தர்ஹா வழிப்பாட்டை ஆதரித்தும் ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் உளறியதை  தொலைகாட்சியில் வெளியிடுவதால் அது கடவுள் பெயரைக் கூறி வயிறு வளர்க்கும் ஆசாமிகளுக்கு உற்சாகமூட்டியது. அதனால் கடவுள் பெயரைக் கூறி வயிறு வளர்க்கும் கூட்டம் முஸ்லீம்களிலும்  மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது.

பீஜேயை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு ஏகத்துவத்தை குழி தோண்டிப் புதைக்கும் கேடு கெட்ட செயலில் இவர்கள் இறங்கிக் கொண்டிருப்பதால் அமானுல்லாஹ்ஜின்னா - பஷீரா தம்பதிகள் போல் இன்னும் பலர் நேர்வழியை விட்டு விலகி வழிக்கேட்டில் வீழ்வதற்கு காரணமாக அமைந்தால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தங்களது மரணத்தருவாயில் கூறிய அல்லாஹ்வின் லஃனத்திற்கு இவர்கள் அஞ்சிக்கொள்ள வேண்டும்.



இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாம்) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தங்களின் கறுப்புக் கம்பளி ஆடையைத் தம் முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தம் முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே 
தர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அவர்கள் தம் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கினார்கள்'' என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதைக்) குறித்து எச்சரித்தார்கள். என்று ஆயிஷா(ரலி) அவர்களும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்: நூல்: புகாரி 5815 5816.

பிறருக்குச் சொல்வதை கடைபிடிக்க வேண்டாமா?


அறிவிப்பாளர்: உஸாமா பின் ஜைத்(ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:""ஒரு மனிதன் இறுதித் தீர்ப்பு நாளில் கொண்டு வரப்பட்டு நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும்! பிறகு அக்குடலை எடுத்துக் கொண்டு அவன், கழுதை தன் செக்கில் சுற்றுவதைப் போல் நரகத்தைச் சுற்றுவான். இதைப் பார்த்து மற்ற நரகவாசிகள் அவனிடம் ஒன்றுகூடி, ""உனக்கு இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது? நீ நன்மைகள் புரியும்படி உலகில் எங்களுக்கு போதித்துக் கொண் டிருக்கவில்லையா? தீமைகளை விட்டு எங்களைத் தடுத்துக் கொண்டு இருக்கவில்லையா? (இப்படிப்பட்ட நற்செயலைப் புரிந்தும் கூட நீ எப்படி இங்கே வந்து விட்டாய்?)'' என்று கேட் பார்கள். அந்த மனிதன், ""நான் உங்களுக்கு நன்மை புரியும்படி போதித்துக் கொண்டு இருந்தேன்! ஆனால் நானோ அதன் அருகில் கூடச் செல்லாமலிருந் தேன்; தீமைகளை விட்டு உங்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன்! ஆனால் நானோ அந்த தீமைகளைப் புரிந்து கொண்டிருந்தேன்'' என்று பதிலளிப்பான். (புகாரி, முஸ்லிம்)அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:""நான் மிஃராஜ் இரவில் சிலரைப் பார்த்தேன். அவர்களுடைய உதடுகள் நெருப்புக் கத்தரிகளால் கத்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நான் ஜிப்ரீலிடம் ""இவர்கள் யார்?'' என்று வினவினேன். ஜிப்ரீல் கூறினார்: ""அவர்கள் தங்களைப் பின்பற்றும் குழுவினரை(உம்மத்) சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் சொற்பொழிவாளர்களாக இருந்தார்கள். இவர்கள் மக்களுக்கு நற்செயலையும், இறையச்சத்தையும் போதித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தம்மை மறந்து விட்டிருந்தார்கள்.'' அதாவது அதனைத் தாம் பின்பற்றுவது குறித்து அக்கறை கொள்ளாமல் இருந்தார்கள்.'' (மிஷ்காத்)அறிவிப்பாளர்: ஹர்மலா(ரலி)நான் அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம், ""நான் எந்த விஷயங்களின்படி செயல்பட வேண்டுமென்று தாங்கள் போதிக்கிறீர்கள்?'' என்று வினவினேன். அண்ணலார் பதில் கூறினார்கள்: ""நன்மையின் பால் செயல்படு; தீமையை விட்டு விலகிக்கொள்! மேலும் ஓர் அவையிலிருந்து நீ எழுந்து சென்ற பின்னால் மக்கள் உன்னை நற்குணங்களால் நினைவு கூர வேண்டும் என்று நீ விரும்பினால் உனக்குள் நற்குணங்களை வளர்த்துக் கொள். மக்கள் நீ இல்லாத போது உன்னைக் குறித்து எந்த விஷயங்களைச் சொல்வதை நீ வெறுக்கின்றாயோ அந்த விஷயங்களை தவிர்த்துக் கொள்.'' (புகாரி)விளக்கம்: மக்கள் தன்னைப் பற்றி நல்ல வார்த்தைகள் பேச வேண்டும் என்று தான் மனிதன் விரும்புகிறான். எனவே, மக்கள் புகழக்கூடிய, பாராட்டக்கூடிய பணிகளில் அவன் ஈடுபடவேண்டும். அதேபோல், தன்னை இழிவானவன், தவறான பழக்கம் உள்ளவன் என்று மக்கள் பேசக்கூடாது என்றும் விரும்புகிறான். அப்படியானால், தன்னிடமுள்ள தவறான குணங்களை, இழிவான நடத்தைகளை விட்டும் அவன் விலகியிருக்க வேண்டும். ஹஸன்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:""கல்வி இரு வகைப்படும். ஒருவகை நாவிலிருந்து வெளிப்பட்டு உள்ளத்தில் பதிந்து கொள்ளும் கல்வி. இந்தக் கல்வியே(மறுமையில்) பயனளிக்கும். மற்றொருவகை உள்ளத்தில் பதியாமல் நாவில் மட்டும் இருக்கும். இந்த கல்வி (அல்லாஹ்வின் நீதிமன்றத்தில்) மனிதனுக்கு எதிரான ஆதாரமாக அமைந்துவிடும்!'' விளக்கம்: இத்தகைய மனிதனிடம் அல்லாஹ், ""நீ எல்லாவற்றையும் நன்கு அறிந்திருந்தாய். பின்னர் "செயல்படுதல்' எனும் பயணச் சாதனத்தை நீ ஏன் கொண்டு வரவில்லை? அது இருந்தால் உனக்குப் பயன் அளித்திருக்குமே!''எனக் கூறிவிட்டு அவனுக்கு தண்டனை வழங்குவான். (அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)