widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, December 20, 2013

மறுமை நாள். சொர்க்கம் நரகம்

1773. மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். ‘மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்” எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 4729 அபூஹுரைரா (ரலி).
1774. யூத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு,‘நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்” என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, ‘அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.
புஹாரி 4811 இப்னு மஸ்ஊத் (ரலி).
1775. அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு ‘நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?’ என்று கேட்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6519 அபூஹுரைரா (ரலி).
1776. அல்லாஹ் மறுமைநாளில் பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் இருக்கும். பிறகு ‘நானே அரசன்!” என்று சொல்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைமறையின் பார்வையில் இவ்வுல வாழ்க்கை



இவ்விடத்தில் சற்று நேரம் நாம் தாமதிப்போம். இவ்வுலக வாழ்க்கை குறித்து குர்ஆனின் கண்ணோட்டம் என்ன என்று ஆராய்வோம். இந்த விஷயத்தில் குர்ஆனை முன்னிறுத்துவதும் அதனிடம் கருத்து கேட்பதும்தான் நமக்கு நல்லது.

ஏனெனில் இவ்வுல வாழ்வு குறித்து முஸ்லிம்களின் அறிவுகளும் சிந்தனைகளும் தடுமாறிப்போய் உள்ளன. இந்த வாழ்க்கையின் உண்மையான மதிப்பு என்ன, அந்தஸ்து என்ன என்பதில் ஆய்வாளர்களின் கருத்துகளும் சிதறிப் போய் உள்ளன!
குர்ஆன் மிகத் தெளிவாகவும் உறுதியுடனும் வெளிப்படையாகவும் அறிவித்துவிடுகிறது., இவ்வுலக வாழ்வின் தற்காலிகத்தையும் தாழ்வு நிலையையும் - மறுவுலகத்திற்கு எதிரில் அதன் மதிப்பின்மையையும்!
"உலக வாழ்க்கையின் இன்பங்கள் அனைத்தும் மறுமைக்கு எதிரில் எதுவுமே இல்லை, மிகச் சொற்பமே"(சூரத்துல் பராஆ 38)
"மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வேடிக்கையுமே அன்றி வேறில்லை. நிலையாக வாழ்வதற்கான இல்லம் மறுமை இல்லம்தான்! அந்தோ! இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!" (சூரத்துல் அன்கப+த் 64)
இன்னோர் இடத்தில்,
"நன்கு அறிந்துகொள்ளுங்கள்: இவ்வுலக வாழ்க்கை (மறுமைக்கு எதிரில்) விளையாட்டும் வேடிக்கையும் வெளிப்பகட்டும் மற்றும் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்கள் - குழந்தைகள் ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் முந்திட முற்படுவதுமே அன்றி வேறில்லை. (இதன் உவமை) எவ்வாறெனில் மழை பொழிந்து, அதன் மூலம் விளைகிற தாவரங்களைப் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைவது போன்றது! பின்னர் அவை உலர்ந்து விடுகின்றன. அவை மஞ்சணித்துப் போவதையும் பதராகிப் போவதையும் நீர் காண்கிறீர். (இதற்கு மாறாக) மறுமையி(ன் நிலை யாதெனி)ல் கடும் தண்டனை உண்டு. இறைவனின் மன்னிப்பும் உவப்பும் உண்டு. ஆனால் உலக வாழ்க்கை வெறும் ஏமாற்றுச் சாதனமே அன்றி வேறில்லை" (சூரத்துல் ஹதீத் 20)
மேலும் குர்ஆன் இவ்வாறே தெளிவாகவும் உறுதியுடனும் இவ்வுலவாழ்வு மறுமைக்கான பாலம் என்றும் பணியாற்றும் கால அவகாசம் என்றும் அறிவிக்கிறது.
மேலும் பல இடங்களில்!
"திண்ணமாக நாம் இப்ப+மியின் மீதுள்ள அனைத்தையும் இப்புவி (வாழ்வு)க்கு அலங்காரமாக ஆக்கியுள்ளோம்., இவர்களில் யார் மிகச் சிறந்த செயலைச் செய்பவர் என்று சோதித்துப் பார்ப்பதற்காக!" (சூரத்துல் கஹ்ஃப் 7)
வேறோர் இடத்தில்,
"அவனே மரணத்தையும் வாழ்கையும் படைத்தான்., உங்களில் யார் நல்லமல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக! மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன். பெரும் மன்னிப்பாளன்" (சூரத்துல் முல்க் 2)
மேலும் மறுமை வாழ்க்கையே சிறந்தது, நிலையானது என்று கூறுகிறது குர்ஆன்:
"உலக வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையுமே தவிர வேறில்லை. உண்மையில் எவர்கள் தீய நடத்தையைத் தவிர்க்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு மறுமை இல்லைமே மிகச் சிறந்தது. (என்னே பரிதாபம்! இவ்வளவுகூட) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" (சூரத்துல் அன்ஆம் 32)
மற்றோரிடத்தில்,
"உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை யாவும் உலக வாழ்வின் இன்பச் சாதனங்களும் அலங்காரமும் தான். ஆனால் அல்லாஹ்விடம் உள்ளதே மிகச் சிறந்ததும் நிலையானதுமாகும். (இதனைக் கூட) நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?" (சூரத்தல் கஸஸ் 60)
ஆகையால் தான் என்றென்றும் நிலையான, விரிவான, அசுத்தங்களை விட்டும் தூய்மையான, அபாயங்கள் இல்லாத மறுமை வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டு அழியுந்தன்மை கொண்ட, தற்காலிகமான, நிம்மதியில்லாத, நிலைபாடற்ற இவ்வுலக வாழ்வுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களை இகழ்கிறது., இழித்துரைக்கிறது குர்ஆன்!
"எவர்கள் நமது சந்திப்பை எதிர்பார்ப்பதில்லையோ மேலும் உலக வாழ்க்கையில் திருப்தி கொண்டு அதில் முழு நிம்மதியும் அடைந்தார்களோ மற்றும் எவர்கள் நம்முடைய சான்றுகள் குறித்து பராமுகமாக இருக்கிறார்களோ அத்தகையவர்களுக்கு (அவர்களின் தவறான கொள்கை - நடைமுறை மூலம்) அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளின் காரணமாக நரகம் தான் புகலிட(மாகக்கிடைக்)கும்" (சூரத்து ய+னுஸ் 7–8)
வேறோர் இடத்தில்,
"எவர்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்கேற்ற கூலியை இங்கேயே நாம் நிறைவாக அளித்துவிடுகிறோம். அதில் அவர்களுக்கு எவ்விதக் குறைவும் செய்யப்பட மாட்டாது. ஆனால் இத்தகையவர்களுக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. உலகில் அவர்கள் உருவாக்கியவை அனைத்தும் அடியோடு அழிந்து போய் விட்டன (என்பதும்) அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் அனைத்தும் வீணானவையே (என்பதும் அங்கு அவர்களுக்குப் புரிந்துவிடும்)" (சூரத்து ஹ_த் 15 -16)
வேறோர் இடத்தில்,
"சத்தியத்தை நிராகரித்தவர்களுக்குக் கடுமையான தண்டனையினால் அழிவு உள்ளது. அவர்கள் மறுவுலகத்தை விட இவ்வுலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுக்கிறார்கள். அது (அவர்களின் விருப்பத்திற்கேற்ப) கோணலாகிவிட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் வழிகோட்டில் வெகுதூரம் சென்று விட்டார்கள்" (சூரத்து இப்றாஹீம் 2 - 3 )
மற்றோர் இடத்தில்,
"இவர்கள் உலக வாழ்க்கையின் புறத்தோற்றத்தை மட்டுமே அறிகின்றனர். மறுவுலகத்தைப் பற்றி அவர்கள் அலட்சியமாக உள்ளனர்" (சூரத்துர் ரூம் 7)
வேறோர் இடத்தில்,
"எவன் நமது அறிவுரையைப் புறக்கணித்தானோ மேலும் உலக வாழ்;க்கையைத் தவிர வேறெந்தக் குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அதே நிலையிலேயே விட்டுவிடுவீராக! -இப்படிப்பட்டவர்களுடைய அறிவின் எல்லை அவ்வளவுதான்! உம் இறைவனே நன்கு அறிபவன் தனது பாதையை விட்டு வழி பிறழ்ந்தவர் யார், நேர் வழியில் செல்பவர் யார் என்பதை!" (சூரத்துந் நஜ்ம் 29 -30)
இன்னோர் இடத்தில்,
"திண்ணமாக இவர்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடிய (உலகத்)தை நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் வர விருக்கும் ஒரு கடினமான (மறுமை) நாளை அலட்சியமாக விட்டு விடுகிறார்கள்" (சூரத்தல் இன்ஸான் 27)
வேறோர் இடத்தில்,
"எவன் வரம்பு மீறினானோ மேலும் உலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்தானோ அவனுக்குத் திண்ணமாக நரகம் தான் புகலிடமாகும்" (சூரத்துந் நாஸியாத் 37–39)
ஆனால் இவ்வுலகின் நலனையும் மறுவுலகின் நலனையும் இரண்டையும் கருத்தில் கொண்டு அதே நேரத்தில் மறுவுலக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் உயர்வையும் சிறப்பையும் அந்தஸ்தையும் உணர்ந்து அதை அடைவதற்கு ஆர்வம் கொண்டு வாழ்பவர்கள் யாரோ அவர்களை குர்ஆன் புகழ்கிறது!
"மக்களில் இவ்வாறு பிரார்த்தனை செய்வோரும் உள்ளனர்: எங்கள் இறைவனே! எங்களுக்கு உலகத்திலேயே எல்லாம் வழங்கிவிடு - இத்தகையவருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை. இன்னும் - எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையைக் கொடு., மறுவுலகிலும் நன்மையைக் கொடு. மேலும் நரக வேதனையில் இருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக என்று கூறும் சிலரும் அவர்களில் உள்ளனர்!" (சூரத்துல் பகறா 200 – 201)
ஓரிடத்தில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்ததாகச் சொல்லிக் காட்டுகிறது குர்ஆன்:
" ....(இறைவா!) இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை எழுதி வைப்பாயாக. மறுமையிலும் நன்மையை அருள்வாயாக! திண்ணமாக நாங்கள் உன் பக்கமே திரும்பி விட்டோம்" (சூரத்துல் அஃராஃப் 156)
ஓரிடத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் புகழ்ந்துரைத்து அதன் மூலம் வழிகாட்டுகிறது:
"மேலும் இவ்வுலகிலும் அவருக்கு நன்மையை வழங்கினோம். திண்ணமாக அவர் மறுவுலகிலும் நல்லோர்களில் ஒருவராக இருப்பார்" (சூரத்துந் நஹ்ல் 122)