widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Friday, September 30, 2011

நபி வழியில் நம் தாடி - part1

நபி வழியில் நம் தாடி - part2


நபி வழியில் நம் தாடி - part 3


நபி வழியில் நம் தாடி - part 4


நபி வழியில் நம் தாடி - part 5


நபி வழியில் நம் தாடி - part 6



நபி வழியில் நம் தாடி - part 7




Thursday, September 15, 2011

வீடியோவும் விளக்கங்களும்


கீழ்க்காணும் வீடியோ காட்சிக்கு எதிரான
குர்ஆன் மற்றும் நபிமோழிகள்

பெரும் பாவங்களிலேயே மிகப்பெரிய பாவங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்)அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! ஆம், கூறுங்கள்! என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்..  என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
 
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)
 
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
(நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)
 
 
أَمَّنْ يُجِيبُ الْمُضطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَئِلَهٌ مَعَ اللَّهِ 
துன்பத்திற்குள்ளானவனின் அழைப்பிற்கு பதிலளித்து, அவனுடைய தீங்கை நீக்குகின்ற, மேலும் உங்களை பூமியின் பிரதிநிதிகளாக்குகின்ற அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? (நிச்சயமாக இல்லை) (அல்குர்ஆன் 27:62)
 
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ
அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)
 
 
 
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ
மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிகவழிகெட்டவன் யார்? அவர்களோ, இவர்களின் அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 46:5)
 
مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ
அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக பிரார்த்தித்தவனாக மரணித்தவன் நரகம் புகுந்துவிட்டான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் -ரலி, நூல்: புகாரீ 4497)
 
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ
அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குபவன் அவனைத் தவிர(வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை அடையச் செய்கின்றான். அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 10:107)
 
 
நமது மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை ஏற்ப்படுத்துபவரின் செயல்கள் நிரகரிக்கப்படும்”.
(அறிவிப்பவர் அன்னை ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)
 
மர்யம்(அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் மிகைப்படுத்திப் புகழ்ததைப்போல் என்னையும் நீங்கள் புகழ்ந்துவிடாதீர்கள்.நிச்சயமாக நான் ஒரு அடியானே!
 என்னை நீங்கள் அல்லாஹ்வின் அடியான் என்றும், அவனது தூதர் என்றும் கூறுங்கள். (புகாரி: 3189)

 
நாயகத் தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:-
 ’நபிகளார்(ஸல்)அவர்கள் தமது ஹஜ்ஜின் போது (மினாவில் எறிவதற்காக) பொடிக்கற்களை கேட்க, நானும் அவ்வாறே எடுத்துக் கொடுத்தேன்.இதைக்கண்ட நபிகளார்’இவ்வாறே பொடிக் கற்களாலேயே எறிய வேண்டும்.(ஆவேசத்தில் பெரும் கற்களை எடுத்து எறிந்து)மார்க்கத்தில் அளவுகடந்து செல்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். இவ்வாறு வரையறை மீறிச்சென்றது தான்  உங்களின் முன் வாழ்ந்த சமுதயத்தினரை அழித்தொழித்தது’என எச்செரித்தார்கள். 
(ஆதாரம் நஸயீ 3007, இப்னு மாஜா 3020
 
(4:48.) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
(4:116.) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
(5:72.) ”நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; ”இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு ”என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13)
 
 உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள. (6:151)
 
எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்.
(5:72)

இணைவைப்புக்கு எதிரான குஆன் மற்றும் நபிமொழிகளை அனுப்பியவர்களுக்கு நன்றி.


வருங்கால அவ்லியா?


அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்


அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
அல்லாஹ் தடுத்துள்ளவைகளில் முதன்மையானது ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெரும் பாவச் செயலாகும்.
பெரும் பாவங்களிலேயே மிகப்பெரிய பாவங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்)அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! ஆம், கூறுங்கள்! என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்..  என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மன்னித்துவிடலாம். ஆனால் இணைவைத்தலை மட்டும் மன்னிக்கவேமாட்டான். ஏனெனில் இதற்கு மட்டும் பிரத்தியேகமாக பாவமீட்சி பெறவேண்டியுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)
ஷிர்க் -அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்- எனும் பெரும்பாவம் முஸ்லிமை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும். இணைவைக்கும் கொள்கையுடம் இறந்து விட்டவன் நிரந்தர நரகத்திற்குரியவனாவான்.
கப்ர் வழிபாடு
நல்லடியார்களின் கப்ர்களிலும், அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தியும் மார்க்கத்திற்கு முரணான, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பல செயல்கள் நடக்கின்றன. அவற்றில் ஓரிறைக் கொள்கைக்கு முரணான சிலசெயல்களும் அவை தவறு என்பதற்கான ஆதாரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1) சிலர், இறந்துவிட்ட நபிமார்களிடமும் நல்லடியார்களிடமும் -அவ்லியாக்களிடமும்- தங்களின் தேவைகளை கேட்டுப் பிரார்த்திக்கின்றனர், பரிந்துரைக்க வேண்டுகின்றனர். துன்பங்களை நீக்கக் கோருகின்றனர், அவர்களிடம் உதவி, அடைக்கலம் மற்றும் பாதுகாப்புத் தேடுகின்றனர்.பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!. அவனுக்கே உரிய இவ்வணக்கத்தை பிறருக்குச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.அல்லாஹ் கூறுகிறான்:


وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ(நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)


أَمَّنْ يُجِيبُ الْمُضطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَئِلَهٌ مَعَ اللَّهِதுன்பத்திற்குள்ளானவனின் அழைப்பிற்கு பதிலளித்து, அவனுடைய தீங்கை நீக்குகின்ற, மேலும் உங்களை பூமியின் பிரதிநிதிகளாக்குகின்ற அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? (நிச்சயமாக இல்லை) (அல்குர்ஆன் 27:62)2) சிலர், சில பெரியார்கள் மற்றும் அவ்லியாக்களின் பெயர்களை நிற்கும் போதும், உட்காரும் போதும், கஷ்டத்தின் போதும் கூறும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் ஒருவர்: யா முஹம்மத்! என்கிறார். மற்றொருவர்: யா அலீ! என்கிறார். மற்றொருவர்: யா ஹுஸைன்! என்கிறார். அவர்: யா பதவீ! என்கிறார். இவர்: யா ஜீலானி! யா முஹைதீன்! என்கிறார். அவர்: யா ஷாதலீ! என்கிறார். இவர்: யா ரிஃபாயீ! என்கிறார். அவர் ஐதுரூஸை அழைக்கிறார். இவர் ஸெய்யிதா ஜைனபை அழைக்கிறார். மற்றொருவர் இப்னு அல்வானை அழைக்கிறார்.அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)3) கப்ரை வழிபடும் சிலர் அதனை வலம் வருகிறார்கள். அதன் மூலைகளை கையால் பூசி அதனை உடலில் தடவிக் கொள்கிறார்கள். அதன் மணலை முத்தமிடுகிறார்கள். முகத்தில் பூசிக் கொள்கிறார்கள். கப்ர்களைக் கண்டால் உடனே ஸஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள். மேலும் கப்ர்களுக்கு முன்னால் மிகவும் பயபக்தியுடனும் பணிவுடனும் சிரம் தாழ்ந்தவர்களாக, அச்ச உணர்வுடன் நின்று கொண்டு, நோயை நீக்க, குழந்தை கிடைக்க, தேவைகள் நிறைவேற மற்றும் இதுபோன்ற தன் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள். என்னுடைய தலைவரே! நெடுந்தூரம் பயணம் செய்து உங்களிடம் வந்துள்ளேன். எனவே என்னை நஷ்டமடைந்தவனாக வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிடாதீர்! என்றுகூட சிலர் வேண்டுகிறார்கள். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்:
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ

மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிகவழிகெட்டவன் யார்? அவர்களோ, இவர்களின் அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 46:5)நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக பிரார்த்தித்தவனாக மரணித்தவன் நரகம் புகுந்துவிட்டான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் -ரலி, நூல்: புகாரீ 4497)4) சிலர் கப்ர்களுக்கு சென்று மொட்டையடித்துக் கொள்கின்றனர். சிலர் கப்ர்களின் கண் கொள்ளாக்காட்சி, அவ்லியாக்களின் அபரிமித ஆற்றல் என்றெல்லாம் பல தலைப்புக்களில் கட்டுக் கதைகளை இட்டுக்கட்டி எழுதியுள்ளனர். அந்த புத்தகத்திற்கு மனாஸிக் ஹஜ்ஜில் மஷாஹித் -கண்கூடான ஹஜ் வழிபாடு- என்றும் பெயர் சூட்டியுள்ளனர். சிலர் அவ்லியாக்கள்தான் இவ்வுலகில் ஆட்சி செய்கிறார்கள் என்றும் துன்பம் தரவும் இன்பம் தரவும் அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.அல்லாஹ் கூறுகிறான்:
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ


அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குபவன் அவனைத் தவிர(வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை அடையச் செய்கின்றான். அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 10:107)
 அல்லாஹ் அல்லாதவருக்காகப் பலியிடல்
 அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டிய தொழுகை போன்ற வழிபாடுகளில் பலியிடுதலும் ஒன்றாகும். அதனை பிறருக்காகச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.அல்லாஹ் கூறுகிறான்:
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
எனவே நீர் உமது இரட்சகனைத் தொழுது, (குர்பானியும் கொடுத்து அதனை அவனுக்காக) அறுப்பீராக! (அல்குர்ஆன் 108:2)அதாவது: அல்லாஹ்வுக்காகவே பலியிடுவீராக! அல்லாஹ்வுடைய பெயர் கூறியே அறுப்பீராக!நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ
அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அலீ -ரலி, நூல்: முஸ்லிம் 3657)அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதில் இரண்டு விதமான குற்றங்கள் உன்னள. 1) அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுப்பது2) அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறி அறுப்பது.இவ்விரண்டில் எந்த ஒன்று நிகழ்ந்தாலும் அதனை சாப்பிடுவது ஹராம் ஆகும். நமது நடைமுறையில் மலிந்து கிடக்கும் அறியாமைக் காலச் சடங்குகளில் ஷைத்தானுக்காக பலியிடும் வழக்கமும் ஒன்றாகும். வீடு வாங்கினாலோ, வீடு கட்டினாலோ, கிணறு தோண்டினாலோ ஷைத்தானின் துன்பத்திற்கு பயந்தவர்களாக அந்த இடத்திலோ, அல்லது அந்த மண் மீதோ அறுத்துப் பலியிடுகிறார்கள். இதுவும் தவறான பலியிடுதலேயாகும்.சூனியம், குறி, ஜோஸியம் பார்த்தல்சூனியம் இறைநிராகரிப்புச் செயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் என்பது எந்தப் பயனையும் பெற்றுத்தராத, மாறாக தீமைகளையே விளைவிக்கும் பாவச்செயலாகும்.அல்லாஹ் கூறுகிறான்:
وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ
அவர்களுக்கு எந்தப் பயனும் தராத, அவர்களுக்கு துன்பமிழைக்கும் ஒன்றை- சூனியத்தை- கற்றுக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 2:102)


وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىசூனியக்காரன் எங்கு வந்த போதிலும் வெற்றி பெற மாட்டான். (அல்குர்ஆன் 20:69)


1) நிச்சயமாக சூனியம் செய்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்:


وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ
மேலும் ஸுலைமான் (சூனியம் செய்து அல்லாஹ்வை) நிராகரிக்கவில்லை. எனினும் நிச்சயமாக ஷைத்தான்கள் தான் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சூனியத்தையும் பாபிலோ(ன் நகரி)னில் ஹாரூத், மாரூத் எனும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்த(தாகக் கூறி, பல)வற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். மேலும் அவ்விருவரும் நாங்கள் சோதனையாக இருக்கின்றோம். ஆதலால் (இதைக்கற்று) நீ காஃபிராகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. (அல்குர்ஆன் 2:102)

சூனியம் செய்பவர்களை கொலை செய்வதே மார்க்கத்தீர்ப்பாகும். சூனியத்தால் சம்பாதிப்பது ஹராமான, இழிவான செயலாகும். அறிவிலிகளும் அநியாயக்காரர்களும் பலவீனமான ஈமான் கொண்டவர்களும் தங்களின் எதிரிகளை சூனியத்தின் மூலம் பழிவாங்குவதற்காக சூனியக்காரர்களிடம் செல்கின்றனர். அநீதம் செய்தவர்கள் அதன் எதிர்விளைவாக தங்களை சூனியம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக சூனியக்காரர்களிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.குல்அவூது பிறப்பில் ஃபலக், குல்அவூது பிறப்பின் னாஸ் மற்றும் இவைபோன்ற சில திருமறை வசனங்களின் மூலம் -மார்க்கம் அனுமதித்த முறையில்- அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடக் கடமைப்பட்டவர்கள் ஷிர்க்கான, ஹராமான வழிகளில் எங்கோ ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.2) நிச்சயமாக ஜோஸியக்காரர்களும் குறிகாரார்களும் மகத்தான அல்லாஹ்வை நிராகரிக்கும் காஃபிர்களாவார்கள்.மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறியமுடியாதபோது இவர்கள் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றார்கள். மூட நம்பிக்கையுடையவர்களிடம் பணம் பறிப்பதற்காக பலவழி முறைகளை கையாளுகிறார்கள். மண்ணில் கோடிட்டுப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பாத்திரத்தில் நீரூற்றிப் பார்ப்பது, வெற்றிலையில் மைதடவிப் பார்ப்பது, கண்ணாடியில் பார்த்து மறைவானவற்றைக் கூறுவது போன்ற பலவழிகளில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.இவர்கள் ஒரு முறை உண்மை கூறினால் 99 முறை பொய்யுரைப்பார்கள். ஆனால் மதிமயங்கியவர்கள். அவர்கள் ஒரு முறை கூறிய உண்மையை வைத்துக் கொண்டு இட்டுக்கட்டி பொய்யுரைக்கும் அனைத்தையும் உண்மையென நம்பிவிடுகின்றனர். திருமணம், வியாபாரம் மற்றும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் இன்ப, துன்பங்கள் பற்றி கேட்பதற்காகவும், காணாமல்போன பொருட்களைத் திரும்பப் பெறவும் அவர்களிடம் செல்கிறார்கள்.3) சூனியம் மற்றும் ஜோஸியக்காரனிடம் சென்று, அவன் கூறுவதை உண்மை என நம்புபவன் இஸ்லாத்தை விட்டும் வெளியாகிவிட்ட காஃபிர் ஆவான்.நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:


مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍசூனியக்காரனிடமோ, ஜோஸியக்காரனிடமோ சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகின்றவன், நிச்சயமாக முஹம்மது நபி(ஸல்)அவர்களின் மீது இறக்கப்பட்ட (மார்க்கத்)தை நிராகரித்து விட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல்: அஹமத் 9171)இவர்களுக்கு மறைவான ஞானமெல்லாம் கிடையாது என்று தெரிந்து கொண்டே அவர்களை சோதிப்பதற்காகவோ அல்லது இதுபோன்ற வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ அவர்களிடம் செல்பவன் காஃபிராகி விடமாட்டான். எனினும் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். 
مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً
யாரேனும் குறிகாரனிடம் வந்து அவனிடம் ஏதேனும் கேட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: ஸஃபிய்யா -ரலி, நூல்: முஸ்லிம் 4137)


அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் நாற்பது நாட்களும் தொழுவது அவன் மீது கடமையாகும். மேலும் அவன் தான் செய்த இப்பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
தாயத்து தகடுகளில் பயன் இருப்பதாக நம்புதல்

 சூனியம் மற்றும் ஜோஸியக்காரர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தாயத்து தகடு தட்டு போன்ற அல்லாஹ்வுக்கு இணைவைக்க காரணமாகும் பொருட்களில் நிவாரணம் இருப்பதாக நம்மில் பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே அதனை கழுத்தில் கட்டிக் கொள்கின்றனர். கண்திருஷ்டி போன்றவைகளிலிருந்து பாதுகாப்புத் பெற அதனை அவர்களது குழந்தைகளின் கழுத்திலும் கட்டிவிடுகிறார்கள். உடலில் கட்டிக் கொள்கிறார்கள். வீடுகளிலும் கடைகளிலும் வாகனங்களிலும் தொங்க விடுகிறார்கள்.




 துன்பம் மற்றும் சோதனைகளிலிருந்து விடுபட பாதுகாப்புப்பெற பல வடிவங்களில் மோதிரங்களை அணிந்து கொள்கின்றனர். நிச்சயமாக இவைஅனைத்தும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கு மாற்றமான கொள்கைகளாகும். தவறான இக்கொள்கைகள் ஈமானில் பலவீனத்தையே அதிகப்படுத்தும். இவைகளின் மூலம் நோய் நிவாரணம் தேடுவது ஹராம் ஆகும்.
நிவாரணத்திற்காக இவர்கள் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் தாயத்து தகடுகளில் பெரும்பாலானவை இணைவைக்கும் வாசகங்கள், ஜின் ஷைத்தான்களிடம் அடைக்கலம் தேடுதல், புரியாத வரைபடங்கள், விளங்கிக் கொள்ளமுடியாத வாசகங்கள் ஆகியவைகளைக் கொண்டதான் தயாரிக்கப்படுகின்றன.
 மேலும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்காக ஓதவேண்டிய திருக்குர்ஆனில் சில வாசகங்களையும் சிலர் எழுதுகின்றனர். ஆனால் அதனுடன் ஷிர்க்கான வாசகங்களையும் கலந்து விடுகின்றனர். சில பாவிகள் திருக்குர்ஆனின் வசனங்களை அசுத்தத்தைக் கொண்டும் மாதவிடாயின் இரத்தத்தைக் கொண்டும்கூட எழுதுகின்றனர். எனவே தாயத்து தகடு தட்டு போன்றவற்றைக் கட்டுவதோ தொங்கவிடுவதோ ஹராமாகும்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَதாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)
தாயத்து தட்டுகளில் நன்மையோ தீமையோ கிடைக்கிறது என்று நம்புகின்றவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டான். அவன் அல்லாஹ்விடம் இப்பெரும் பாவத்திற்காகத் தவ்பாச் செய்யவில்லையெனில் அல்லாஹ் அவனை மன்னிக்க மாட்டான். அவனுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிடும் மேலும் அவனுக்கு சொர்க்கம் ஹராமாகி நிரந்தர நரகவாதியாகிவிடுவான்.
 அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்தல்
அல்லாஹ் தனது படைப்பினங்களில் அவன் நாடியவற்றின்மீது சத்தியம் செய்வான். ஆனால் படைப்பினங்களாகிய நாம் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்யக் கூடாது.
பலர் அல்லாஹ்வின் படைப்பினங்களின் மீது சத்தியம் செய்கின்றனர். சத்தியம் செய்யப்பட தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும்  எதுவும் கிடையாது. அவனே மகத்தானவன், மேன்மைமிக்கவன், அமைத்தையும் நன்கறிந்தவன்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

أَلَا إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ وَإِلَّا فَلْيَصْمُتْ
அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் உங்களுடைய தந்தையரின் மீது சத்தியம் செய்வதை நிச்சயமாக அல்லாஹ் தடுக்கின்றான். யாரேனும் சத்தியம் செய்வதானால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும். அல்லது -வாய் மூடி- மௌனமாக இருக்கட்டும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரீ 6108)

مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ

இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் தொடர் உரை - 2


Wednesday, September 14, 2011

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்




ஒரு நேரத்தில், பர்தா அணிவதைப் பற்றி மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது. எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.வகுப்பு இடைவேளையின் போது சகமாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை.இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை. ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும்.பர்தா பற்றிய வியத்தகு அனுபவங்கள் எனக்கு ஏற்பட்ட போதிலும், மற்றவர்கள் எவரும், எவரையும் வற்புறுத்துவது கூடாது எனக் கருதுகிறேன். அடிக்கடி பர்தா அணிவது பற்றிய தவறான, வழிதவறிய அழுத்தம் தரப்படுகிறது. பர்தா அணியாதவர்கள் ஏதோ பெரும் தவறிழைத்துவிட்டனர் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விடக் கூடாது. மாறாக, பர்தா ஏன் அணிய வேண்டும் என்பதை மென்மையாக எடுத்துச் சொல்ல வேண்டும். மக்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எடுத்துச் சொல்ல வேண்டுமேயல்லாது, அவைகள் பற்றி கட்டாயப்படுத்தக் கூடாது.பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும்.ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது. வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா?’ அல்லது ‘கெட்டவரா?’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.(இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிடடஜ் (Western Bridge) பள்ளி மாணவி. அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் இது. கட்டுரையின் தமிழாக்கம்: டாக்டர், பீ. ஹாமிது அப்துல்லாஹ் அவர்கள்.)


Reference: http://www.facebook.com/photo.
php?fbid=10150095227164290&set=t.100001321176066&type=3&theater

Saturday, September 10, 2011

இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் தொடர் உரை - 1


தஃலீம் கிதாப் படிக்கலாமா?


ஐயம்: தஃலீம் கிதாப் படிக்கலாமா?

தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அத்தொகுப்புப் பல மொழிகளில் பெயர்க்கப் பட்டு, நாடு முழுவதுமுள்ள அல்லாஹ்வின் பள்ளிகளில் படிப்பில் இருக்கிறது. தமிழில் மவ்லவீ நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்த்த அத்தொகுப்புக்குப் பெயர் 'அமல்களின் சிறப்புகள்' என்பதாகும்.
இந்த நூலைப் படிப்பது பற்றித்தான் நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றீர்கள் என்று நம்புகிறோம்.
நூல்களைப் படிப்பதையும் உரைகளைக் கேட்பதையும் இஸ்லாம் தடைசெய்யவில்லை. ஆனால், செயல்பாட்டைப் பொருத்தவரை படிப்பதையும் கேட்பதையும் சிந்தித்துச் செயல்படுமாறு கட்டளையிடுகின்றது. நன்மை-தீமையைப் பிரித்தறிந்து செயல்படுதற்காகவே மனிதனுக்குப் பகுத்தறிவு வழங்கப் பட்டுள்ளது:
"... தங்கள் இறைவனுடைய வசனங்கள் மூலம் நினைவூட்டப் பட்டாலும் செவிடர்களைப்போல்,(அகக்கண்) குருடர்களைப்போல் அவற்றின் மீது விழுந்துவிட மாட்டார்கள் (ஆழ்ந்து சிந்தித்துச் செயல் படுவார்கள்)" அல்-குர்ஆன் 25:73.
'அமல்களின் சிறப்புகள்' என்ற தொகுப்பில் உள்ள மனித இயல்புக்கு மாற்றமான, ஆதாரங்கள் இல்லாத, நம்பமுடியாத சில கதைகளின் சுருக்கங்களைத் தங்கள் சிந்தனைக்காக இங்குத் தருகிறோம்:
  • கடன்பட்டிருந்த ஒருவருக்கு, நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணம் கொடுத்தது (பக்கம் 943).
  • கையில் காசில்லாமல் ஹஜ்ஜுக்குப் போனவருக்கு நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணமுடிப்பு வழங்கியது (பக்கம் 925).
  • கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்குப் போர்வையைப் பரிசளித்தது (பக்கம் 944).
  • பசியாளிக்கு நபி (ஸல்) கிச்சடியும் குழம்பும் கொடுத்தது (பக்கம் 945).
  • கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்கு ரொட்டி கொடுத்தது (பக்கம் 797).
  • ஷாஹ் வலியுல்லாஹ்வுக்கு நெய்ச்சோறு ஒரு மரவை கொடுத்தது (பக்கம் 799).
  • அல்லாஹ்வின் மீது காதல் கொண்டால் மரணம் கிடையாது (பக்கம் 657).
  • தொழும்போது ஆப்பரேஷன் - 1 (பக்கம் 143).
  • தொழும்போது ஆப்பரேஷன் - 2 (பக்கம் 144).
  • பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுக்க நின்று தொழுது, அதிலேயே இறந்துபோகப் பந்தயம் (பக்கம் 43,44).
  • இறந்த பிறகு கபுரில் தொழுத மய்யித் ஸாபித் அல் பன்னானி (பக்கம் 129, தொழுகையின் சிறப்பு-14).
  • நாற்பது ஆண்டுகள் தூங்காத பெரியார் (பக்கம் 118, தொழுகையின் சிறப்பு-1).
  • அறுபது ஆண்டுகளாக அழுது கொண்டே இருந்த பெரியார் (தொழுகையின் சிறப்பு-2).
  • பதினைந்து ஆண்டுகள் படுக்காத பெரியார் (தொழுகையின் சிறப்பு-11).
  • எழுபது ஆண்டுகள் இடைவிடாது தொழுத பெரியார் (தொழுகையின் சிறப்பு-15).
  • அறுபது ஆண்டுகள் இஷாவுக்கு செய்த ஒளுவோடு ஃபஜ்ருத் தொழுத பெரியார் (தொழுகையின் சிறப்பு-17).
  • நாற்பது ஆண்டுகள் இரவில் அழுது, பகலில் நோன்பு வைத்த பெரியார் (தொழுகையின் சிறப்பு-13).
  • அரசராகப் பொறுப்பேற்றதால் மனைவியுடன் உறவு கொள்ள மறுத்த அரசர் (தொழுகையின் சிறப்பு-12).
  • பதினைந்து நாட்களுக்கு ஒருதடவை மட்டுமே சாப்பிட்ட பெரியார் (தொழுகையின் சிறப்பு-7).
  • நாற்பது ஆண்டுகள் இரவு முழுவதும் தொழுது, பகல் முழுதும் நோன்பிருந்தவர் (பக்கம் 132)
  • தினமும் முன்னூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத இமாம் (பக்கம் 132)
  • 130 வயதுவரை தினமும் இருநூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத பெரியார் (பக்கம் 86)
  • ரமழான் மாதத் தொழுகையில் அறுபது தடவை குர்ஆன் ஒதி முடித்த இமாம் (பக்கம் 132)
  • ஐம்பது ஆண்டுகள் இஷாவையும் சுபுஹையும் ஒரே உளுவைக் கொண்டு தொழுத பெரியார் (பக்கம் 132)
  • முப்பது/நாற்பது/ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளுவைக் கொண்டு சுபுஹைத் தொழுத இமாம் (பக்கம் 132)
  • ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நஃபில் தொழுத இமாம் (பக்கம் 130).
  • ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நஃபில் தொழுத பெரியார் (பக்கம் 160).
  • ஓர் இரவுக்கு ஒரு ருகூ; ஒர் இரவுக்கு ஒரு ஸஜ்தா செய்த பெரியார் (பக்கம் 161).
  • நோன்பு துறக்கும்போது வயிறு நிறைய உண்ணக் கூடாது (பக்கம் 62).
  • ஸஹரிலும் வயிறு நிறைய உண்ணக் கூடாது (பக்கம் 64).
  • கடும் குளிரின்போது உடைகளைக் கழற்றி வைத்துக் கொள்ள வேண்டும் (பக்கம் 64).
  • ஸஹருக்கும் இஃப்தாருக்கும் சேர்த்து ஒன்றரை ரொட்டி போதும் (பக்கம் 65).
  • ஸஹருக்கும் இஃப்தாருக்கும் பால் கலவாத தேநீர் மட்டும் போதும் (பக்கம் 65).
  • சந்திக்காமலேயே சப்பாணியை நடக்க வைத்தவர் (பக்கம் 124).
  • தொழுகையில்லாமல் சொர்க்கத்தில் எப்படி காலம் தள்ளுவது? பெரியாரின் கவலை (பக்கம் 45)
இதுபோன்ற கதைகள் 'அமல்களின் சிறப்பு'களில் நிறைந்திருக்கின்றன. விரிவஞ்சி, சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.
மேற்காணும் கதைகளை எழுதிய ஸக்கரிய்யா ஸாஹிப் கூறுகிறார்:
"பெரியார்களுடைய இந்தப் பழக்க வழக்கங்களெல்லாம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துப் படிப்பதற்கு மட்டுமோ அல்லது அவர்களுக்குப் புகழ் வார்த்தைகள் கூறப்பட வேண்டுமென்பதற்காகவோ எழுதப்படுவதில்லை, எனினும் தன் முயற்சிக்குத் தக்கவாறு அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகின்றன. இயன்ற அளவு பூர்த்தியாக்குவதில் முயற்சி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்"
மனித இயல்புக்கு அப்பாற்பட்ட கதைகளைப் பின்பற்றி வாழ்வது சாத்தியமா? கூடுமா? என்ற கேள்விகள் நம் முன் எழுகின்றன. மேற்காண்பவை அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எதிரானவை என்பது தெளிவான சிந்தனையோடு அவற்றைப் படித்துப் பார்த்தால் விளங்கி விடும். ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே. தவறைச் சுட்டிக் காட்டும்போது திருத்திக் கொள்வதே ஒரு முஸ்லிமுக்கு அழகு. ஆனால், மார்க்கம் போதிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தப்லீக்கிலும் நிலைமை தலைகீழ்தான்.
காட்டாக,
அஷ்ரஃப்  அலீ தானவி என்பார் தப்லீக்கின் பிரபல பெரியார்களில் ஒருவர். அவரிடம் நிறைய சிஷ்யர்கள் பைஅத் (ஞான தீட்சை) பெற்றிருந்தனர். ஒருமுறை அவரின் சிஷ்யர்களில் ஒருவர் ஒரு கனவு கண்டார். கனவில் அவருக்கு சக்ராத் - இறுதி நேரம் நெருங்கி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவ்வேளை கலிமாவை மொழிவதற்காக லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று சொல்ல முயல்கிறார். ஆனால் அதற்குப் பதிலாக அவரது வாயிலிருந்து, "லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ரஃப் அலீ தானவி ரஸூலுல்லாஹ்" என்றுதான் வருகின்றது. இதனால் திடுக்கிட்டு விழித்த அவர் இது ஷிர்க்கான விடயமாயிற்றே என்று பதைபதைத்து மீண்டும் தூங்கியதும் மீண்டும் அதே கனவு. இப்படியே மூன்று தடவைகள் அதே கனவைக் கண்டதும் அச்சத்தினால் மறுதினம் விழித்ததும் நபியவர்களுக்கு ஸலவாத் சொல்ல முயன்றார். அதற்கும் "அல்லாஹும்ம ஸல்லி அலா நபிய்யினா அஷ்ரஃப் அலீ தானவி..." என்றுதான் நாவிலிருந்து வெளிப்பட்டது. உடனே அச்சத்துடன் பெரியார் அவர்களிடம் வந்து இக்கனவைத் தெரிவித்தார். அதற்கு அஷ்ரஃப் அலி தானவி அவர்கள் "இது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அது நல்ல கனவுதான். ஏனெனில், நானும் நபி அவர்களுடைய அந்தஸ்த்தில் உள்ளவன்தான் நீங்கள் அஷ்ரஃப் அலி தானவி றஸூலுல்லாஹ் என்று சொன்னால் அதுவும் சரிதான் அதனால் பயப்படத் தேவையில்லை" என்று சொன்னார்கள்.
இந்தப் பிரச்சினை அன்றைய உலமாக்களுக்கிடையில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்படி ஃபத்வா மார்க்கத்துக்கு முரணானது; குஃப்ரை ஏற்படுத்தக் கூடியது; எனவே உடனடியாக அதனை வாபஸ் வாங்க வேண்டுமென அன்றைய அகில இந்திய உலமாக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது. அதற்கு மறுப்பளித்து தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் எனும் நூலில் மேற்படி அஷ்ரஃப்  அலி தானவியின் பத்வா சரியானதே என ஸக்கரிய்யா ஸாஹிப் நியாயப் படுத்தி எழுதியுள்ளார் (தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் பக்கம் 144-145).
தப்லீக் பெரியார்களுக்குப் புனித பிம்பத்தை உருவாக்குவதற்காகவும் பல கதைகள் வேறு சில நூல்கள் மூலம் புனையப் பட்டுள்ளன:
"இந்த தப்லீக்கின் அடிப்படை விதிமுறைகளை நான் எனது விருப்பப்படி உருவாக்கவில்லை. அது எனக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு செய்யுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது" என்று தப்லீக்கின் அடிப்படைகளை வஹீ மாதிரி ஷேக் இல்யாஸ் கூறுகின்றார்.
இதற்கு விளக்கமாக மற்றோர் இடத்தில் அபுல் ஹஸன் அலி நத்வி, "அல்லாஹ்தான் இல்யாஸ் அவர்களுக்கு இந்த விடயத்தை உதிப்பாக்கி அவர்களது இதயத்தில் போட்டான்" என்கிறார். இவை இல்ஹாமாகவோ கனவிலோ அவர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டனவாம். (தப்லீக்கே தஹ்ரீக், பக்கம் 57).
மிகப்பெரிய தப்லீக் பெரியார் ஒருவர் இருந்தார்கள். அவர்களிடம் கஷ்புடைய ஞானம் இருந்தது. அதன்மூலமாக அவர்கள் நபி (ஸல்)அவர்களின் முன்னிலையில் பிரசன்னமாகி உரையாடி மகிழ்வது வழக்கம். அவர்களிடத்தில் ஷேக் ஸக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை வருகை தந்து, தான் ஒரு பயணம் செய்ய இருப்பதாகவும் அதற்காகத் தங்களிடத்தில் இஸ்திகாராத் தேடுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட ஷேக் அவர்கள் 'ஜக்கரிய்யாவுடைய இதயத்தில் உதிப்பாகும் அனைத்து விடயங்களுமே மேலிடத்திலிருந்தே கிடைக்கின்றன. எனவே இந்தப் பயணத்தை விடவும் சிறந்த ஒரு காரியம் கிடையாது' என்றார்கள். (மஹ்பூபுல் ஆரிபீன் பக்கம் 52).
"ஃபனா எனும் (ஒருவகை மெய்மறந்த) நிலையில் நான் இருக்கும் போதெல்லாம் எந்த விடயத்தை முடிவு செய்வதாயினும் ஷேக் இம்தாதுல்லாஹ்விடம் ஆலோசித்தே செய்வது வழக்கம். பின்பு ஃபனா நிலையின் உயர் அந்தஸ்த்துக்கு வந்ததும் நபி (ஸல்) அவர்களைக் கண்டு ஆலோசித்தே முப்பது வருடங்களாக எந்தவித முடிவையும் எடுத்து வருகின்றேன் ..." என்று தப்லீக் பெரியார் அப்துர் ரஷீத் கன்கோயீ கூறுகிறார். (தீஸ் மஜாலிஸ், பக்கம் 311; மஹ்பூபுல் ஆரிபீன், பக்கம் 57).
"ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை தம் மஜ்லிஸில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது நபியவர்கள் அவ்விடத்தில் சற்று உயர்ந்த மஜ்லிஸில் உட்காந்திருந்தார்கள்
அவர்களுக்கு முன்னிலையில் அழகிய புத்தகங்கள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்துக்கும் மேலே ஹஜ்ஜின் சிறப்பு என்ற தஃலீம் புத்தகம் இருந்தது. அதற்குக் கீழ் ஸலவாத்தின் சிறப்பும், அதன்கீழ் ஹயாத்துஸ் ஸஹாபா கிதாபும் இருந்தன. அவ்வேளை அங்கே யூஸூப் பின்னூரி அவர்கள் வந்து நபியவர்களும் ஜக்கரிய்யா மௌலானாவும் பேசிக் கொண்டிருப்பதைக் செவியுற்றுபுன்னகைத்த வண்ணமே சென்றார்கள்" என்று அப்துல் ஹமீம் கூறுகிறார் (ஆப் பைத்தீ, பக்கம் 134).
oOo
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கப்ரைச் சுட்டிக் காட்டி, "ஏற்றுக் கொள்ளத் தக்கவையும் ஒதுக்கிக் தள்ளத் தக்கவையும் எல்லா மனிதர்களது கூற்றுகளிலும் உள்ளன - இந்த மண்ணறையில் உள்ளவரின் கூற்றைத் தவிர" என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ளவை ஏற்றுக் கொள்ளத் தக்கவையா ஒதுக்கித் தள்ளத் தக்கவையா என்பதை இப்போது எளிதாக உங்களால் முடிவு செய்ய இயலும். அவை அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு எவ்வாறு முரண்படுகின்றன என்பதைக் கீழ்க்காணும் சுட்டிகளில் உள்ள விரிவான கட்டுரைகள் விளக்குகின்றன:
மேற்காண்பவை கேள்விக்கான பதில் மட்டுமே.
அது தவிர,
  • தன் முஹல்லாவின் பள்ளிவாசலின் உட்புறம் எப்படியிருக்கும் என்றே தெரியாத பல முஸ்லிம்களை உள்ளுக்கு இழுத்து வந்து, தொழக் கற்றுக் கொடுத்து, பல பள்ளிகளுக்குப் பயணம் செய்ய வைப்பது.
  • வணக்க-வழிபாடுகள் புரிவதில் ஆர்வத்தைக் கூட்டுவது.
  • நேரம் தவறாமல் தொழுகையில் ஈடுபடவைப்பது.
  • அழைப்புப் பணிக்காக நேரம் ஒதுக்குவது.
  • அமீருக்கு முழுமையாகக் கட்டுப் படுவது.
  • பிட் நோட்டீஸ், வால்போஸ்டர், நாளிதழ்/தொலைக்காட்சி விளம்பரம் எதுவுமே இல்லாமல் மிகப் பெரும் மாநாடுகளை நடத்துவது.
ஆகிய நல்ல செயற்பாடுகளால், 'அமல்களின் சிறப்பு' தொகுப்பிலுள்ள அபத்தக் கதைகளையும் மிஞ்சி, அல்லாஹ்வின் அருளால் இன்றும் தப்லீக் ஜமாஅத் சிறந்த அமைப்பாக விளங்குகிறது.
நன்மை-தீமை கலந்த அனைத்துக்கும் அல்லாஹ் தீர்வு கூறுகிறான்:

"சொல்லப் படுகின்ற(எல்லா)வற்றையும் செவியேற்று, அவற்றிலுள்ள அழகியவற்றை (மட்டும்)பின்பற்றும் அடியார்களுக்கு நல்வாழ்த்துச் சொல்வீராக! அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத்தாம்; இவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்" அல்-குர்ஆன் (39:18).
சத்தியத்தை, சத்தியம் என்றறிந்து பின்பற்றுவதற்கும் அசத்தியத்தை அசத்தியம் என்றறிந்து விலகி, அல்லாஹ் விரும்பும் பகுத்தறிவாளர்களாக நாம் செயல்படுவதற்கும் நம் அனைவர்க்கும் அல்லாஹ் அருள் செய்வானாக!

 Source: http://www.satyamargam.com/1208
Source: