widget
"தமது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி). சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்: 132

Tuesday, May 31, 2011

அடுத்த மாதத்தில் இரண்டு சூரிய கிரகணங்கள்- ஒரு சந்திர கிரகணம்!


ஏதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி முதல் ஜூலை 1ஆம் திகதிக்குள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய கிரகணங்களாகும்- ஒன்று சந்திர கிரகணமாகும்.
இதில் இரண்டு சூரிய கிரகணங்களும் இலங்கையிலும் இந்தியாவிலும் தெரியாது. சந்திர கிரகணத்தை மட்டுமே  பார்க்க முடியும்.
ஜூன் 2ஆம் திகதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.55 மணி முதல் அதிகாலை 4.37 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. இதை சீனா- சைபீரியா- கிழக்கு ஆசிய நாடுகளில் காண முடியும்.
ஜூன் 15ஆம் திகதி இரவு 11.52 மணி முதல் அதிகாலை 3.33 மணி வரை சந்திக கிரகணம் ஏற்படும். இதை இலங்கையிலும் இந்தியாவிலும்-ஆசியா- வளைகுடா நாடுகள்- ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா- ஐரோப்பா- தென் அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் காண முடியும்.
ஜூலை 1ஆம் திகதி மாலை 6.15 மணி முதல் இரவு 9.48 மணி வரை அடுத்த சூரிய கிரகணம் ஏற்படும். இதை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும்- அண்டார்டிகா பகுதியிலும்இ மடகாஸ்கரிலும் காணலாம். ஆனால்- இலங்கையிலும் இந்தியாவிலும் இது தெரியாது.
இந்த மூன்று கிரகணங்களுமே வட அமெரிக்காவில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

புஹாரி மஜ்லிஸ் தொடர்பாக மெத்தப் பள்ளியில் கைகலப்பு

புஹாரி மஜ்லிஸ் ஓதுவது தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் மெத்தப் பள்ளியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது என தளத்தில் உள்ள எமது செய்தியாளர்  மூலமாக அறியமுடிகின்றது.
இதன்போது இருவருக்கு காயம் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
மேலதிக விபரம் விரைவில் பதிவேற்றப்படும், இணைந்திருங்கள் இன்போவுடன்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் புஹாரி மஜ்லிஸ் இன்று ஆரம்பமாகிறது

சர்ச்சைகளுக்கு மத்தியில் புஹாரி மஜ்லிஸ் இன்று ஆரம்பமாகிறது

புஹாரி மஜ்லிஸ் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

புஹாரி மஜ்லிஸ் தொடர்பாக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

சர்ச்சைகளுக்கு மத்தியில் புஹாரி மஜ்லிஸ் இன்று ஆரம்பமாகிறது

சர்ச்சைகளுக்கு மத்தியில் புஹாரி மஜ்லிஸ் இன்று ஆரம்பமாகிறது

miog;Gg;gzpAk; miog;ghsHfspd; mofpa gz;GfSk;!   
,iw J}jHfspd; gzp
miog;Gg; gzp vd;gJ ,iwj; Jhjh;fspd; gzpahFk;. mJ kpfr;rpwg;ghdJk; kpf Kf;fpakhd gzpAkhFk;. ,g;gzpia Nkw;nfhs;gtH Jha kdJld; Nkw;nfhs;s Ntz;Lk;. NkYk; nghWik> fzpT> ,uf;fk;> gzj;ij> Neuj;ij ,g;gzpf;fhf nrytopg;gJ> miof;fg;gLgthpd; epiyfis mwpe;J nray;gLtnjd;gJ ,g;gzpapy; filg;gpbf;f Ntz;ba Kf;fpa xOf;fq;fshFk;.
fuL Kulhd ghij
miog;Gg;gzpia Nkw;nfhs;tnjd;gJ kpf ,yFthd xd;wy;y> mJ fuL Kulhd xU ghij. fhuzk;! miog;ghsH ,iwtdplkpUe;J tUk; rl;ljpl;lq;fis mKy;gLj;Jk;gb kf;fsplk; Ntz;LthH. kf;fNsh cyfj;jpYs;s jtwhd fhhpaq;fis gpd;gw;wp elf;f tpUk;GthHfs;> ,jd; fhuzkhf mth;fSf;F ,d;gk; fpilg;gjhf i\j;jhd; xU Njhw;wj;ij Vw;gLj;Jthd;. ,d;gkhf Njhw;wkspg;gitfs; $l ,t;Tyfj;NjhL Kbe;J tplf;$baitfs;. Mdhy; ,];yhk; ,g;gbg;gl;l jtWfis jil nra;J ,jd; fhuzkhf kWikapy; epue;ju ,d;gj;ij thf;fspf;fpd;wJ. ,];yhk; kdpjdpd; Mj;kPf hPjpapYk; mtdpd; ntsp tho;f;ifapYk; e\;lk; juf; $baitfisj;jhd; jLf;fpd;wJ vd;gJ Fwpg;gplj;jf;fJ.


இணைவைப்புக்குத் துணைபோகும் அத்தனைப் பேரும் ஷைத்தானின் ஏவலாட்களே



இணைவைப்புக்குத் துணைபோகும் அத்தனைப் பேரும் ஷைத்தானின் ஏவலாட்களே

[ திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.
மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல் குர்ஆன் 42 : 11.)
அல்லாஹ், ''வான்முட்டும் அளவு பாவம் செய்தால் கூட மன்னிக்க காத்திருக்கிறான், ஆனால் இணைவைப்பைத்தவிர!'' ஆகவே, அன்பிற்கினிய சகோதரர்களே! இணைவைப்பின் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்காதீர்கள்.]


8 மாவட்டங்களில் கடும் மழை,மண்சரிவு 32,774 பேர் பாதிப்பு; 343 வீடுகள் சேதம் _

 
நாடளாவிய ரீதியில் எட்டுமாவட்டங்களில் பெய்த கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் நேற்று வரையிலும் எட்டுப் பேர் பலியானதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த இயற்கை அனர்த்தங்களினால் 8622 குடும்பங்களை சேர்ந்த 32 ஆயிரத்து 774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் எட்டு மாவட்டங்களிலும் 72 வீடுகள் முழுமையாக சேதமடைந்ததுடன் 343 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கொழும்பில் இடம்பெயர்ந்தவர்களில் 79 குடும்பங்களை சேர்ந்த 339 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் நிலையம் அறிவித்துள்ளது.

கேகாலை, காலி,களுத்துறை, கொழும்பு, கம்பஹா, குருணாகல், இரத்தினபுரி, மற்றும் நுவரெலியா ஆகிய எட்டு மாவட்டங்களிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவரும், காலிமாவட்டத்தில் ஒருவரும், மின்னல் தாக்கம்,வெள்ளத்தில் விழுந்ததில் களுத்துறை மாவட்டத்தில் இருவரும் பலியாகியுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 1670 குடும்பங்களை சேர்ந்த 4970 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 406 குடும்பங்களை சேர்ந்த 1286 பேரும், கொழும்பு மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் 4108 குடும்பங்களை சேர்ந்த 16174 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 2437 குடும்பங்களை சேர்ந்த 10341 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்றுபேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 79 குடும்பங்களை சேர்ந்த 339 பேரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உலருணவு பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் நிலையம் அறிவித்துள்ளது. 

வாசகர் கருத்துக்கான புகைப்படம் – நாகூர் தர்கா வழிபாடு (?)